ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இல்லம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இல்லம் அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலம், மெர்சர் கவுண்டி, பிரின்ஸ்டன் நகரம், 112 மெர்சர் தெருவில் உள்ளது. [4] [5] 1935 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இல்லமாக இருந்துள்ளது. அவரது இரண்டாவது மனைவி எல்சா ஐன்ஸ்டீன், 1936 ஆம் ஆண்டு, இந்த வீட்டில் வசித்து வந்தபோது இறந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இல்லம்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாளம்
U.S. Historic District Contributing Property
New Jersey Register of Historic Places
அமைவிடம்: 112 மெர்சர் தெரு,
பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி
ஆள்கூறு: 40°20′36″N 74°40′00″W / 40.34337°N 74.66677°W / 40.34337; -74.66677
கட்டியது: 1876 ஆம் ஆண்டிற்கு முன்னதாக
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
சனவரி 7, 1976[1]
பகுதி: Princeton Historic District (#75001143)
வகை NHL: சனவரி 7, 1976 [2]
வகை NJRHP: சனவரி 1, 1976
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
76002297
NJRHP #: 1734[3]

வரலாறு

தொகு

இந்த வீடு 1876 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த ஆண்டில் பிரின்ஸ்டன் இறையியல் செமினரியின் (ஆங்கிலம்: Princeton Theological Seminary) ஸ்டூவர்ட் ஹால் கட்டப்பட்டது, மேலும் தற்போது 108 மெர்சரில் உள்ள இவ்வீடு இடமாற்றம் பெற்றுள்ளது. [6] இது எளிய வடிவிலான, போதிய வசதியுடைய ஓரு சிறு வீடு ஆகும். எனவே இதன் வடிவமைப்பு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. :2ஆகஸ்ட் 1, 1935 ஆம் தேதி அன்று மெர்சர் கவுண்டி கிளார்க் அலுவலகத்தால் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின்படி, எல்சா ஐன்ஸ்டீன், ஜூலை 24, 1935 ஆம் தேதி அன்று மேரி கிளார்க் மார்டன் என்பவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு இந்த வீட்டை வாங்கியுள்ளார். [7] பல ஆண்டுகளாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அவரது சகோதரி மஜா ஐன்ஸ்டீன் (ஆங்கிலம்: Maja Einstein), அவரது வளர்ப்பு மகள் மார்கோட் ஐன்ஸ்டீன்-மரியானோஃப் (ஆங்கிலம்: Margot Einstein-Marianoff) (1899-1986), மற்றும் அவரது செயலாளர் ஹெலன் டுகாஸ் (ஆங்கிலம்: Helen Dukas) ஆகிய மூன்று பெண்களுடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்த வீட்டை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற வேண்டாம் என்று கோரியதாகவும், இவரது குடும்பம் இது போன்ற மாற்றத்தை அங்கீகரிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆயினும்கூட, இவ்வீடு வரலாற்று இடங்களின் தேசியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டது. மேலும் 1976 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் தேசிய வரலாற்று அடையாளமாகவும் தேர்வானது.

 
ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் இந்திரா காந்தி (எதிர்கால பிரதமர்) ஆகியோர் ஐன்ஸ்டீனை பிரின்ஸ்டனில் உள்ள அவரது வீட்டில் 1949 ஆம் ஆண்டு சந்தித்தனர்,

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு, இவரது வளர்ப்பு மகளும் சிற்பியுமான மார்கோட், இந்த வீட்டில், 1986 ஆம் ஆண்டில், இறக்கும் வரை வாழ்ந்துள்ளார். [8]

இந்த வீடு 2012 ஆம் ஆண்டு வரை வரை எரிக் மாஸ்கின் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்தது. [9] இவர் 2011 ஆம் ஆண்டு வரை பிரின்ஸ்டனில் உள்ள சமூக அறிவியல் பள்ளியின் மேம்பட்ட படிப்புக்கான நிறுவனத்தில் (ஆங்கிலம்: Institute for Advanced Study) ஆல்பர்ட் ஓ. ஹிர்ஷ்மேன் பேராசிரியராக (ஆங்கிலம்: Albert O. Hirschman Professor) இருந்தார், மேலும் இருவருடன் 2007 நோபல் பரிசு வென்றவர். இவர் தற்போது ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார். இதற்கு முன்னதாக, 2004 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஃபிராங்க் வில்செக், (ஆங்கிலம்: Frank Wilczek) இங்கு வாழ்ந்தார். இவர் 1989 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மேற்குறிப்பிட்ட பள்ளியில் பேராசிரியராக பணியாற்றினார். பிரின்ஸ்டன் நகருக்குச் சென்று வருவதை தவிர்ப்பதற்காக இப்பள்ளி நிர்வாகிகளிடம் வேண்டி இவ்வீட்டில் குடியேறியுள்ளார். இவர் மாலை நேரத்தில் பட்டதாரி மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடு இப்பளிக்குச் சொந்தமானது என்றாலும், பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதியில்லை. எனினும், இப்போது அது ஒரு தனியார் குடியிருப்பாக உள்ளது. வீட்டின் முக்கியத்துவத்தை விளக்கும் வரலாற்று தகவல் பலகைகள் எதுவும் காணப்படவில்லை; இருப்பினும், வீட்டைச் சுற்றி "தனியார் குடியிருப்பு" என்பதற்கான அடையாளங்கள் உள்ளன.

மேலும் பார்க்கவும்

தொகு
  • நியூ ஜெர்சியின் மெர்சர் கவுண்டியில் உள்ள வரலாற்று இடங்களின் தேசியப் பதிவு
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மனைவி எல்சா ஐன்ஸ்டீன், தனது கடைசி காலத்தில் இங்கு வாழ்ந்தவர்

மேற்கோள்கள்

தொகு
  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2009-03-13.
  2. "Albert Einstein House". National Historic Landmark summary listing. National Park Service. 2008-06-23. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2011-11-02.
  3. "New Jersey and National Registers of Historic Places — Mercer County" (PDF). New Jersey Department of Environmental Protection — Historic Preservation Office. April 5, 2013. p. 8. Archived from the original (PDF) on May 16, 2013. பார்க்கப்பட்ட நாள் June 4, 2013.
  4. "Einstein on the Internet". Archived from the original on 2017-09-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
  5. NPS Jewish Heritage archived as of November 11, 2007
  6. Thomas, M. Halsey. "Princeton in 1874: "A Bird's Eye View"". Princeton University.
  7. Mercer County Clerk's Office Deed 2663 of August 2, 1935
  8. "Margot Einstein, 86, Is Dead; Stepdaughter of Physicist". த நியூயார்க் டைம்ஸ். July 12, 1986. https://www.nytimes.com/1986/07/12/obituaries/margot-einstein-86-is-dead-stepdaughter-of-physicist.html. 
  9. "NJ Tax Records". Archived from the original on 2019-12-14. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.

வெளி இணைப்புகள்

தொகு