ஆழ்வார் (திரைப்படம்)

ஆழ்வார் (Aalwar) (About this soundஒலிப்பு ) செல்லாவின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாகவும் அசின் கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறீகாந்த் தேவாவினால் இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்
இயக்கம்செல்லா
தயாரிப்புமோகன் நடராஜன்
கதைசெல்லா
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஅஜித் குமார்
அசின்
கீர்த்தி சாவ்லா
விவேக்
விநியோகம்ஜங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 25, 2008
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை தொகு

கோயில் அர்சகரான சிவா அம்மா மற்றும் தங்கையுடன் பாசமாக வாழும் சிவா பிரசங்கம் ஒன்றில் கடவுள் மனிதவுருவத்தில் அவதாரம் எடுத்தே துன்பங்களை நீக்கி உலகில் இன்பத்தை நிலைநாட்டுவதாகக் கூறியது மனதில் ஆழப்பதிகின்றது. வீடு சென்ற சிவா தன் தாயாரிடமும் இதுபற்றிக் கேட்டக தாயாரும் அப்பா அதற்காகத்தான் சிவா என்று பெயரிட்டுருப்பதாகத் தெரிவிக்கின்றார். பின்னர் சம்பவம் ஒன்றில் தாயாரும் தங்கையும் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிவா ஓர் வைத்திய சாலையில் எடுபிடி வேலைசெய்யும் ஒருவராகமாறி தானும் ஓர் அவதாரம் என்ற கொள்கை சிவாவின் மனதில் இடம்பிடித்து வில்லன்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து ஆசாபாசங்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்கின்றார். இதற்கிடையில் ஹைதராபாத்தில் இருந்து வரும் அசின் சிவா தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து எவ்வாறு சிவாவின் மனதில் இடம் பிடிக்கின்றார் என்பதே இத்திரைப்படமாகும்.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்_(திரைப்படம்)&oldid=3709991" இருந்து மீள்விக்கப்பட்டது