ஆஷி சௌக்சி ஒரு இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் வீராங்கனை ஆவார். இவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி (ஏர் ரைபிள்) சுடும் அணியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் இவர் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் (தனி) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2024 ஆம் ஆண்டு தேசிய துப்பாக்கி சுடுதல் தேர்வுகள் சோதனைகளில், 28 பிப்ரவரி 2024 அன்று மத்திய பிரதேச அகாடமியில் பெண்களுக்கான 50-மீட்டர் ரைபிள் 3-நிலை துப்பாக்கி சுடும் போட்டியில் 597 புள்ளிகளை எடுத்து உலக சாதனை படைத்தார். இவர் நார்வேயின் ஜென்னி ஸ்டெனே மற்றும் அமெரிக்காவின் சாகன் மடலேனா ஆகியோர் இணைந்து வைத்திருந்த 596 புள்ளிகளின் உலக சாதனையை முறியடித்தார்.

ஆஷி சௌக்சி
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதுப்பாக்கி சுடுதல்
பதக்கத் தகவல்கள்
மகளிர் துப்பாக்கி சுடுதல்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 ஹாங்சோ 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் (அணி)
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 ஹாங்சோ 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் ஆஷி சௌக்சி.[1] இவர் தனது பள்ளிப்படிப்பை கார்மல் கான்வென்ட் பள்ளி, பாரத மிகு மின் நிறுவனம், போபாலில் படித்தார். அங்கு இவர் 9 ஆம் வகுப்பில் தேசிய மாணவர் படையில் சேர்ந்தார். தேசிய மாணவர் படையில்படப்பிடிப்புக்கான அடிப்படைகளை கற்றுக்கொண்டார்.[1] பின்னர், குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பட்டம் பெற்றார்.[2] இவரது தந்தை பதம் காந்த் சௌக்சே இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். இவர் தனது முறையான பயிற்சியை போபாலில் உள்ள மத்திய பிரதேச மாநில துப்பாக்கி சுடும் அகாடமியில் பயிற்சியாளர்களான சுமா ஷிரூர் மற்றும் வைபவ் சர்மாவின் கீழ் தொடங்கினார்.[3]

வாழ்க்கை தொகு

2022 இல், பாக்குவில் நடந்த துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு அணி போட்டியில் சௌக்ஸி தங்கப் பதக்கம் வென்றார்.[3]</ref> அதே ஆண்டில், சாங்வானில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் அணி நிகழ்வில் வெண்கலம் வென்றார். [3]

2024 ஆம் ஆண்டு தேசிய துப்பாக்கி சுடுதல் தேர்வுகள் சோதனைகளில், 28 பிப்ரவரி 2024 அன்று மத்திய பிரதேச அகாடமியில் பெண்களுக்கான 50-மீட்டர் ரைபிள் 3-நிலை துப்பாக்கி சுடும் போட்டியில் 597 புள்ளிகளை எடுத்து உலக சாதனை படைத்தார்.[4] இவர் நார்வேயின் ஜென்னி ஸ்டெனே மற்றும் அமெரிக்காவின் சாகன் மடலேனா ஆகியோர் இணைந்து வைத்திருந்த 596 புள்ளிகளின் உலக சாதனையை முறியடித்தார்.[4]

இவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி (ஏர் ரைபிள்) சுடும் அணியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[5][6][7] மேலும் இவர் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் (தனி) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Bhopal girl Ashi shoots three Asian medals". 2023-09-28. https://timesofindia.indiatimes.com/city/bhopal/bhopal-girl-ashi-shoots-three-asian-medals/articleshow/104004049.cms. 
  2. Judge, Shahid (2022-10-19). "ISSF World Championship: Ashi Chouksey's escape from academics unearthed her skill at sport shooting". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  3. 3.0 3.1 3.2 Web, Statesman (2023-09-25). "Who is Ashi Chouksey? Indian shooter bags silver at Asian Games". The Statesman (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-29.
  4. 4.0 4.1 Bureau, Sports (2024-02-28). "Ashi Chouksey tops rifle 3-position event with a world record score" (in en-IN). https://www.thehindu.com/sport/ashi-chouksey-tops-rifle-3-position-event-with-a-world-record-score/article67896585.ece. 
  5. "19th Asian Games: Indian air rifle shooter Ashi Chouksey secures first silver medal in 10m air rifle — News". The Times of India. 24 Sep 2023. பார்க்கப்பட்ட நாள் 24 Sep 2023.
  6. ""Very Proud Moment:" Ashi Chouksey On 10M Air Rifle Team Event Silver Asian Games News". NDTVSports.com. 24 Sep 2023. பார்க்கப்பட்ட நாள் 24 Sep 2023.
  7. Now, Times (24 Sep 2023). "Asian Games 2023: Women's 10M Air Rifle Team Of Ashi Chouksey, Mehuli Ghosh And Ramita Win Silver Medal". TimesNow. பார்க்கப்பட்ட நாள் 24 Sep 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷி_சௌக்சி&oldid=3904057" இலிருந்து மீள்விக்கப்பட்டது