இக்கேரி
இக்கேரி (Ikkeri) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சாகராவிற்குத் தெற்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கன்னட மொழியில் இக்கேரி என்ற சொல்லுக்கு "இரண்டு வீதிகள்" என்று பொருள்.
இக்கேரி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 14°08′06″N 75°01′21″E / 14.1350°N 75.0226°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சாகரா சிமோகா |
அரசு | |
• வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி இணைப்பு எண் | 08183 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | கேஏ-15 |
இணையதளம் | karnataka |
இக்கேரியின் நாயக்கர்கள்
தொகுஇது பொ.ச. 1560 முதல் 1640 வரை கேளடி நாயக்கர்களின் தலைநகராக இருந்தது.[1] பின்னர் பெத்தனூர் நகராவுக்கு மாற்றப்பட்டடது. பெத்தனூர் பெயரளவிலான தலைநகராக இருந்தாலும், ஆட்சியாளர்கள் இக்கேரியின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். கேளடி ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் போது கோயில்கள், கோட்டைகள் மற்றும் ஒரு அரண்மனையை இக்கேரியில் கட்டினர். அந்த நேரத்தில் இக்கேரி நாணயங்களை அச்சிடும் ஒரு தங்கச்சாலையையும் வைத்திருந்தார். மேலும், அவர்களுடைய நாணயங்கள் இக்கேரி பகோடாக்கள் என்றும் இக்கேரி பனாம்கள் என்றும் அழைக்கப்பட்டன. இருப்பினும், நாணயச் சாலை பெத்தனூருக்கு மாற்றப்பட்டது.
கோட்டை
தொகுஇக்கேரியின் கேள நாயக்க ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் போது அற்புதமான கட்டமைப்புகளைக் கட்டினர். அவர்கள் காலத்தின் கட்டமைப்புகள் முக்கியமாக போசளா-திராவிட பாணியிலான கட்டிடக்கலைகளைக் காட்டுகின்றன. கட்டமைப்புகளை நிர்மாணிக்க கிரானைட் விரிவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டமைப்புகளின் சுவர்கள் மற்றும் கூரைகளில் சிக்கலான செதுக்கல்கள் அந்தக் காலத்தின் பொதுவான அம்சமாகும்.
அவர்களின் கட்டடக்கலை வலிமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அகோரேசுவரா கோயில்.[2] கற்கோயிலான கோயிலின் சன்னதிக்கு முன்னால் தரையில் கேளாடி தலைவர்களில் மூன்று பேரின் உருவங்கள் வணங்குவது போல செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிற்கும் மேலே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
புகைப்படத் தொகுப்பு
தொகு-
இக்கேரி கோயில் வரலாறு
-
இக்கேரி கோயிலின் காட்சி
-
நந்தி மண்டபம்
-
நந்திமண்டபத்தின் மற்றொரு பார்வை
-
அகோரேஷ்வர் கோயில்
-
கோயிலின் பக்க காட்சி
-
மற்றொரு பக்கவாட்டு வேலைப்பாடு
-
இரங்க மண்டபம்
-
நந்தி
-
இக்கேரி கோயில் சுவரின் சிற்பம்
-
கோயில் வளாகத்தில் உள்ள அகோரேசுவர் சிலையின் எச்சங்கள்
மேற்கோள்கள்
தொகு- C.Hayavadana Rao, B.A., B.L., Fellow, University of Mysore, Editor, Mysore Gazetteer, 1930 Edition, Government Press, Bangalore.
- B B Susheel Kumar, Founder and Photographer at © B B Susheel Kumar