இசான் அலி

பாக்கித்தானிய தொல்லியல் அறிஞர்

இசான் அலி ( Ihsan Ali ) ஓர் பாக்கித்தானிய தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 2006 முதல் 2009 வரை அசாரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2009 முதல் 2017 வரை அப்துல் வாலி கான் பல்கலைக்கழக மர்தானின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[1] பெசாவர் இசுலாமியா கல்லூரி பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ள இவர் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆய்வாளராகவும், கல்வியாளரும் மற்றும் நிர்வாகியுமாவார்.[3][4][5]

இசான் அலி
இசான் அலி முதல் சர்வதேச விளையாட்டு மாநாட்டில் பேசுகிறார்.
பிறப்பு3 பெப்ரவரி 1955 (1955-02-03) (அகவை 69)
சர்சாதா, கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்
தேசியம்பாகிஸ்தானியர்
துறைதொல்லியல்
பணியிடங்கள்அசாரா பல்கலைக்கழலம்(2006–2009)
அப்துல் வாலி கான் பல்கலைக்கழகம் மர்தான் (2009–2017)[1]
கல்வி கற்ற இடங்கள்பெசாவர் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், ஐக்கிய ராச்சியம்
அறியப்படுவதுதொல்லியல் துறையில் நிபுணர்
விருதுகள்சித்தாரா-இ-இம்தியாசு[2]

கல்வி மற்றும் தொழில்

தொகு

இவர் பாக்கித்தானின் கைபர் பக்துன்வாவில் உள்ள சார்சாடா மாவட்டத்தில் பிறந்தார். பெசாவர் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பயின்றார். பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[6] முனைவர் . இசான் பெசாவர் பல்கலைக்கழகத்தில் 1981 முதல் 2002 வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.[5] அங்கு இவர் முதன்மையாக தொல்லியல் துறையின் பேராசிரியராக இருந்தார். அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா, ஆர்வர்டு, பாஸ்டன், ஒகையோ மற்றும் கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், கேம்பிரிச்சு, இலெய்செஸ்டர், சவுத்தாம்ப்டன், ஷெபீல்ட் மற்றும் கிளாஸ்கோ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜெர்மனியில் உள்ள யுஎல்எம் பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அலி விரிவுரைகளை ஆற்றியுள்ளார். பெசாவர் பல்கலைக்கழகம், பெசாவர் அருங்காட்சியகம் மற்றும் அசாரா பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்காக 63 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[7] மேலும், தொல்லியல் தொடர்பான 17 வெவ்வேறு இதழ்களைத் திருத்தியுள்ளார். [7]

பணிகள்

தொகு

பெசாவர் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தலைவராக மூன்று ஆண்டுகள் (1997-2000), கைபர் பக்துன்வாவில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்களின் இயக்குநராக 2002 இல் நியமிக்கப்பட்டார். மேலும் இவரது பதவிக்காலத்தில் ஆறு அருங்காட்சியகங்களை நிறுவி, பிரன்டியர் ஆர்க்கியாலஜி என்ற புதிய இதழைத் தொடங்கினார்.[7] 2008 ஆம் ஆண்டில், கைபர் பக்துன்வா அரசாங்கம் இவருக்கு அப்துல் வாலி கான் பல்கலைக்கழகத்தை நிறுவும் பணியை வழங்கியது. ஒன்பது வளாகங்கள் கொண்ட பல்கலைக்கழகத்தில் மூன்று ( பச்சா கான் பல்கலைக்கழகம், சுவாபி பல்கலைக்கழகம் [7] மற்றும் புனர் பல்கலைக்கழகம் ) இப்போது சுயாதீன பல்கலைக்கழகங்களின் நிலையை அடைந்துள்ளன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Farewell Party in Honour of Vice Chancellor Prof. Dr. Ihsan Ali (SI)". awkumpk.blogspot.com. 21 March 2017.
  2. "AWKUM News March 24, 2013 :: Sitara-e-Imtiaz award to Prof. Dr. Ahsan Ali". Archived from the original on மார்ச் 8, 2018. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 1, 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Universities Help Fighit Extremism, says Dr. Ihsan " Across the Durand".
  4. "Islamia College, Peshawar".
  5. 5.0 5.1 ":: Welcome to AWKUM – About VC". Archived from the original on 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 11 November 2016.
  6. ":: Welcome to AWKUM – Vice Chancellor Office". Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 11 November 2016.
  7. 7.0 7.1 7.2 7.3 "Universities Help Fighit Extremism, says Dr. Ihsan " Across the Durand"."Universities Help Fighit Extremism, says Dr. Ihsan " Across the Durand".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசான்_அலி&oldid=4108596" இலிருந்து மீள்விக்கப்பட்டது