அக்மத் அசன் தானி

பாக்கித்தானிய அறிஞர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர் மற்றும் மொழியியலாளர்

அக்மத் அசன் தானி ( Ahmad Hasan Dani) (20 ஜூன் 1920 – 26 ஜனவரி 2009) ஒரு பாக்கித்தானிய தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றாசிரியரும் மற்றும் மொழியியலாளரும் ஆவார். நடு ஆசிய மற்றும் தெற்கு ஆசிய தொல்லியல் மற்றும் வரலாற்றில் இவர் முதன்மையானவர்களில் இவரும் ஒருவர்.[1][2] இவர், பாக்கித்தான் மற்றும் வங்காளதேசத்தில் உயர்கல்வியில் தொல்லியல் துறையை ஒரு துறையாக அறிமுகப்படுத்தினார்.[3] தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துவதைத் தவிர, தனி தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு கல்வி நிலைகளையும் சர்வதேச கூட்டுறவுகளையும் வகித்தார். இவர் குறிப்பாக சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய மற்றும் வடக்கு பாக்கித்தானில் உள்ள காந்தாரம் இடங்கள் பற்றிய தொல்லியல் பணிகளுக்காக அறியப்படுகிறார்.

அக்மத் அசன் தானி
பிறப்பு(1920-06-20)20 சூன் 1920
பசுனா, பிரித்தானிய இந்தியா
இறப்பு26 சனவரி 2009(2009-01-26) (அகவை 88)
இஸ்லாமாபாத், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
துறைதொல்லியல், வரலாறு, மொழியியல்
பணியிடங்கள்குயாத் -இ-ஆசம் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி
விருதுகள்கிலால்-இ-இம்தியாசு (2000)
சித்தாரா-இ-இம்தியாசு (1969)
செவாலியே விருது

ஆராய்ச்சிப் பணிகள்

தொகு

தானி சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய வடக்கு பாக்கித்தானில் உள்ள இரெக்மான் தேரியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டார்.[4] பெசாவர் மற்றும் சுவாத் பள்ளத்தாக்குகளில் உள்ள காந்தாரத் தளங்களின் பல கண்டுபிடிப்புகளையும் இவர் செய்தார். மேலும் கீழ் தீரில் இந்தோ-கிரேக்க தளங்களிலும் பணியாற்றினார்.[5] 1985 ஆம் ஆண்டு முதல், இவர் ஐடல்பர்க் பல்கலைக்கழகத்தின் அரால்ட் ஆப்டமன் என்பவருடன் இணைந்து வடக்கு பாக்கித்தானின் உயரமான மலைப் பகுதியில் உள்ள புதிய கற்காலத்தின் பழங்கால எச்சங்கள் பற்றிய பாறை செதுக்கல்கள் மற்றும் கல்வெட்டுகளின் ஆவணங்களை மையமாகக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.[6] சீனாவில் பட்டுப் பாதையின் பாலைவனப் பாதைப் பயணம் (1990) மற்றும் சோவியத் ஒன்றியத்தில் (1991) பட்டுப் பாதையின் ஸ்டெப்பி பாதைப் பயணத்திற்கான யுனெஸ்கோ குழுக்களுக்கும் இவர் தலைமை தாங்கினார்.

தானி தனது விரிவான களப்பணி மற்றும் ஆராய்ச்சி அனுபவத்திலிருந்து, சிந்து சமவெளி நாகரிகத்தில் தென்னிந்தியக் கலாச்சாரத்தின் எந்த தாக்கத்தையும் மறுத்தார்.[4] சிந்துப் படுகை மற்றும் சுற்றியுள்ள உள்நாட்டின் சமூக-அரசியல் அமைப்புகள் மற்றும் கலாச்சார விநியோகத்தின் புவியியல் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி, சிந்து சமவெளி கலாச்சாரத்தின் வளர்ச்சியில் சிந்து-கங்கைச் சமவெளி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிவித்தார்.[7] வெண்கல காலத்தின் போது கடலோரப் பகுதியில் இருந்து எந்தப் படையெடுப்பும் ஏற்படவில்லை, இருப்பினும் கடற்கரை கடல் வணிகத்தை எளிதாக்கியது. தானியின் கூற்றுப்படி, முக்கியத் தாக்கம் மேற்கில் நடு ஆசியாவிலிருந்து வந்தது. வெளிப்புறக் கண்ணுக்கு ஒரு எல்லையாகத் தோன்றும் மலைப்பாங்கான மேற்கு எல்லைப்பகுதி உண்மையில் மலை பீடபூமிகளின் வலையமைப்பாகும், அங்கு உள்ளூர் மக்கள் எப்போதும் சுதந்திரமாக நகர்ந்தனர். எனவே, பாக்கித்தானின் கலாச்சார வரலாறு பௌத்த, பாரசீக மற்றும் பிற்கால சூபித்துவ தாக்கங்கள் மூலம் மத்திய ஆசியாவுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது என்று இவர் வாதிட்டார்.

மெசொப்பொத்தேமியா மற்றும் பண்டைய எகிப்துடன் வர்த்தக உறவுகளை நிறுவ மெலுக்கான்களை அரபிக் கடல் அனுமதித்த போதிலும், பெரும்பாலான வரலாற்று இயக்கங்கள் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கு இடையே நிகழ்ந்ததாக தானி கூறினார். இரு பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பாக புவியியல் இருப்பிடம் "பாக்கித்தான் மக்களுக்கும் நடு ஆசியாவிலுள்ள மக்களுக்கும் கலாச்சாரம், மொழி, இலக்கியம், உணவு, உடை, மரச்சாமான்கள் மற்றும் நாட்டுப்புறவியல் துறையில்" உள்ள உறவை வகைப்படுத்துகிறது.[8]

வெளியீடுகள்

தொகு

அக்மத் அசன் தானி 30 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஏராளமான பத்திரிகை கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் 35 மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் அறிந்தவர். மேலும் வங்காள மொழி, பிரஞ்சு, இந்தி, காசுமீரி, மராத்தி, பஷ்தூ மொழி, பாரசீக மொழி, பஞ்சாபி, சமஸ்கிருதம், சராய்கி மொழி, சிந்தி, தமிழ், துருக்கியம் மற்றும் உருது மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.[9][10] இந்த மொழிகளில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நூல்களையும் வெளியிட்டார்.

இறப்பு

தொகு

நீரிழிவு நோய் காரணமாக 22 ஜனவரி 2009 அன்று, இஸ்லாமாபாத்திலுள்ள பாக்கித்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இவர் 26 ஜனவரி 2009 அன்று தனது 88 வயதில் இறந்தார்.[11]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lawrence Joffe (30 March 2009). "Ahmad Hasan Dani: Pakistan's foremost archaeologist and author of 30 books". The Guardian (newspaper). https://www.guardian.co.uk/science/2009/mar/31/ahmad-hasan-dani. 
  2. Natasha Shahid (7 August 2015). "The who's-who of archaeology in Pakistan (Ahmad Hasan Dani's profile)". The Friday Times (newspaper) இம் மூலத்தில் இருந்து 8 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211008030048/https://www.thefridaytimes.com/the-whos-who-of-archaeology-in-pakistan/. 
  3. தி டைம்ஸ் (2009). Obituary - Professor A. H. Dani: archaeologist பரணிடப்பட்டது 2010-05-24 at the வந்தவழி இயந்திரம் Published 18 February 2009, Retrieved 29 April 2020
  4. 4.0 4.1 Khan, Omar (1998). An interview with Ahmad Hasan Dani on HARAPPA.COM website in Islamabad, on 6 January 1998, Retrieved 30 April 2020
  5. Iqbal, M. (21 May 2002). "Archaeological site discovered in Dir" Dawn (newspaper), Retrieved 29 April 2020
  6. Shahid, J. (2006). Dam threatens ancient remains Dawn (newspaper), Published 5 December 2006, Retrieved 29 April 2020
  7. Dani, A.H. (1975). Origins of Bronze Age Cultures in the Indus Basin - a geographic perspective Expedition Pennsylvania Museum website. Retrieved 30 April 2020
  8. Dani, A.H. History Through The Centuries பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம் National Fund for Cultural Heritage website, Retrieved 30 April 2020
  9. Khan, M. Nauman Profile of Ahmad Hasan Dani on Salaam (UK website) Retrieved 30 April 2020
  10. Natasha Shahid (7 August 2015). "The who's-who of archaeology in Pakistan (Ahmad Hasan Dani's profile)". The Friday Times (newspaper) இம் மூலத்தில் இருந்து 8 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211008030048/https://www.thefridaytimes.com/the-whos-who-of-archaeology-in-pakistan/. Natasha Shahid (7 August 2015). "The who's-who of archaeology in Pakistan (Ahmad Hasan Dani's profile)" பரணிடப்பட்டது 2021-10-08 at the வந்தவழி இயந்திரம். The Friday Times (newspaper). Retrieved 30 April 2020.
  11. Natasha Shahid (7 August 2015). "The who's-who of archaeology in Pakistan (Ahmad Hasan Dani's profile)". The Friday Times (newspaper) இம் மூலத்தில் இருந்து 8 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211008030048/https://www.thefridaytimes.com/the-whos-who-of-archaeology-in-pakistan/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்மத்_அசன்_தானி&oldid=4108625" இலிருந்து மீள்விக்கப்பட்டது