இசிதா சவுகான்

இந்திய நடிகை

இசிதா சவுகான் (Ishita Chauhan) என்பவர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் 2007-ல் ஆப் கா சுரூர் என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தையாக அறிமுகமானார்.[1][2][3] கைஜாக் (2008) எனும் படத்திலும் நடித்தார்.[1] இவர் 24 ஆகத்து 2018 அன்று வெளியான உத்கர்ஷ் சர்மாவுக்கு ஜோடியாக அனில் ஷர்மாவின் ஜீனியசு படத்தில் நந்தினி சௌஹானாக பாலிவுட்டில் அறிமுகமானார்.[4][5] இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கிமேசு ரேசஷம்மியா ஆவார். "தேரா பிதூர்" மற்றும் "தில் மேரி நா சுனே" ஆகிய இரண்டு பாடல்கள் 2018-ன் மிகவும் சிறந்த பாடல்களாயின.

இசிதா சவுகான்
பிறப்புIshita Chauhan
14 செப்டம்பர் 1999 (1999-09-14) (அகவை 24)
புனே, இந்தியா
பணி
  • நடிகை
  • வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2018–முதல்

தொழில் தொகு

இசிதா ஆப் கா சுரூர் மற்றும் கைஜாக் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] குழந்தை நட்சத்திரமாக, இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.[1] பார்ச்சூன் சமையல் எண்ணெய், தைலக்களிம்பு, சந்திரிகா சோப், டெட்டால் லிக்விட் ஹேண்ட்வாஷ், ஆக்ரான் வண்ணம், கைனடிக் நோவா, கோல்கேட், மெடிமிக்ஸ் சோப், மெடிகேர் சாம்பு, ரிஜாய்ஸ் சாம்பு, நெஸ்லே போன்றவை சில இவர் நடித்த விளம்பர படங்களுக்கான உதாரணங்கள். பெப்பர்மிண்ட் என்ற பெண் ஆடை வணிக முத்திரையின் விளம்பரத் தூதராக இருந்தார். இசிதா படிப்புக்குப் பிறகு ஆஷா பிளாக் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[1] இசிதா 24 ஆகத்து 2018 அன்று வெளியான அனில் சர்மாவின் ஜீனியசு திரைப்படத்தில் உத்கர்சு சர்மாவுக்கு இணையாகப் பாலிவுட்டில் அறிமுகமானார்.[6][7][8] இதில் இவரது நடிப்பு பாராட்டினைப் பெற்றது. ஆனால் குழப்பமான கதையின் காரணமாகப் படம் பொதுவாக மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இருப்பினும், சீ5-ல் திரைப்படம் அதிசயங்களைச் செய்தது. திரைப்படத்தின் "மூளை ஒலிம்பிக்" காட்சி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுப் பார்க்கப்பட்டது.

திரைப்படவியல் தொகு

ஆண்டு திரைப்படம் பங்கு இயக்குனர் மொழி குறிப்புகள்
2007 ஆப் கா சர்ரூர் திருஷ்ணு பிரசாந்த் சாதா இந்தி அறிமுகப் படம்
2008 கைஜாக் பிரியா மதன் குணால் ஷிவ்தாசனி இந்தி
2014 ஆஷா பிளாக் ஆஷா ஸ்ரீனிவாஸ் (ஆஷா பிளாக்) ஜான் ராபின்சன் மலையாளம்
தமிழ்
மலையாளம் மற்றும் தமிழில் அறிமுகமான படம்
2018 ஜீனியசு நந்தினி சவுகான் அனில் சர்மா இந்தி

இசை காணொலி தொகு

ஆண்டு பாடல் ஆல்பம் பாடகர்(கள்) குறிப்புகள்
2021 தேரே பகைர் மெலடியுடன் கூடிய மனநிலைகள் [9] பவன்தீப் ராஜன் & அருணிதா கஞ்சிலால் ஹிமேஷ் ரேஷம்மியா இசையமைத்த பாடல்கள் [10]
பியார் தும்சே சல்மான் அலி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 James, Merin Maria (6 October 2014). "Trying her luck down south". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  2. "हिमेश रेशमिया के साथ 10 साल पहले किया था डेब्यू, अब 'जीनियस' की हीरोइन, देखें ताज़ा तस्वीरें". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
  3. "Ishita Chauhan: Beauty with the brain". GrowJust India (in அமெரிக்க ஆங்கிலம்). 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  4. "'Genius' actress Ishita Chauhan talks about her rapport with co-star Utkarsh Sharma | Hindi Movie News - Bollywood - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
  5. "Birthday Special: Ishita Chauhan rose to fame with film genius". News Track (in English). 14 September 2020. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "'Genius' movie review: This star-kid debut is let down by old-fashioned filmmaking". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
  7. Kumar, Munna. "कभी विज्ञापनों में दिखने वाली छोटी से लड़की अब हो गई इतनी बड़ी, अंदाज़ देख चौंक जाएंगे आप". India News, Breaking News, Entertainment News | India.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
  8. "Nawazuddin Siddiqui, Utkarsh Sharma and Ishita Chauhan visit Delhi to promote 'Genius' | Entertainment - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
  9. Team, BOIncome (19 June 2021). "Moods With Melodies: Himesh Reshammiya to launch Pawandeep and Arunita in the first song of his new album as a composer!" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 June 2021.
  10. "Tere Bagairr Out: हिमेश रेशमिया संग पवनदीप-अरुणिता का गाना रिलीज, मूड बना देगी मेलोडी". https://navbharattimes.indiatimes.com/tv/news/tere-bagairr-out-himesh-reshammiyas-song-with-indian-idol-12-pawandeep-rajan-and-arunita-kanjilal-released-watch/articleshow/83771406.cms. பார்த்த நாள்: 24 June 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிதா_சவுகான்&oldid=3666345" இலிருந்து மீள்விக்கப்பட்டது