இசுக்காண்டியம் மோனோசல்பைடு

வேதிச் சேர்மம்

இசுக்காண்டியம் ஒருசல்பைடு (Scandium monosulfide) ScS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இசுக்காண்டியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாட்டின் அடைப்படையில் நோக்கினால் இது இசுக்காண்டியம்(II) அதாவது [Sc2+][S2−] வகை எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இன்னும் தெளிவாக விளக்குவதென்றால் இசுக்காண்டியம் ஒருசல்பைடை [Sc3+][S2−] வகையிலான ஒரு போலி அயனிச் சேர்மம் எனலாம். எஞ்சியிருக்கும் எலக்ட்ரான் திண்மத்தின் கடத்தல் பட்டையில் நிரம்புகிறது.[1]

இசுக்காண்டியம் ஒருசல்பைடு
Scandium monosulfide
Scandium monosulfide
இனங்காட்டிகள்
12294-10-9
பண்புகள்
SSc
வாய்ப்பாட்டு எடை 77.02 g·mol−1
தோற்றம் தங்க நிறத்திலான திண்மம்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமைப்பு

தொகு

இசுக்காண்டியம் ஒருசல்பைடு, சோடியம் குளோரைடின் படிக அமைப்பு வடிவத்தைக் கொண்டுள்ளது.[1]

தயாரிப்பு

தொகு

இசுக்காண்டியம் உலோகம் மற்றும் கந்தகம் ஆகியவற்றின் கலவையை காற்றில்லாமல் 1150 பாகை செல்சியசு வெப்பநிலையில் 70 மணிநேரத்திற்கு சூடாக்கினால் இசுக்காண்டியம் ஒருசல்பைடைத் தயாரிக்க முடியும்.[1]

Sc + S → ScS

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Dismukes, J. P.; White, J. G. (1964). "The Preparation, Properties, and Crystal Structures of Some Scandium Sulfides in the Range Sc2S3-ScS". Inorg. Chem. 3 (9): 1220–1228. doi:10.1021/ic50019a004.