இசுக்விட் கேம்

இசுக்விட் கேம் அல்லது ஸ்க்விட் கேம் (Squid Game / 오징어 게임) என்பது தென்கொரிய நாட்டு அதிரடி பரபரப்பு நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை கவாங் டோங்யுக் என்பவர் எழுதி மற்றும் இயக்க, லீ ஜங் ஜே,[2] பார்க் கே சூ, வி கா ஜோன்,[3] ஹோயோன் ஜங், ஓ யோங்சு, கியோ சங் டே, அனுபம் திரிபாதி, கிம் ஜோரியோங்[4] போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17, 2021 இல் ஒன்பது அத்தியாயங்களுடன் வெளியானது.[5][6]

இசுக்விட் கேம்
오징어 게임
வகை
உருவாக்கம்கவாங் டோங்யுக்
எழுத்துகவாங் டோங்யுக்
இயக்கம்கவாங் டோங்யுக்
நடிப்பு
பிண்ணனி இசைஜங் ஜே இல்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
பருவங்கள்1
அத்தியாயங்கள்9 (list of episodes)
தயாரிப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 32–63 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சைரன் பிக்சர்ஸ் இன்க்[1]
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
படவடிவம்
ஒலிவடிவம்டால்பி விஷன்
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 17, 2021 (2021-09-17)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்தத் தொடர் 456 பில்லியன் பரிசுத் தொகைக்காக வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருந்து பங்குபெறும் 456 வீரர்கள், அங்கு கொடுக்கப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி மூலம் பல சவால்களை கடந்து அதில் ஒருவர் மாட்டும் உயிர் தப்பித்து அந்த பரிசு தொகையை வெல்வதற்க்கான வாய்ப்பு ஆகும்.

இசுக்விட் கேம் தொடர் வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. வெளியான ஒரு வாரத்திற்குள் நெற்ஃபிளிக்சில் அதிகம் பார்த்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியது. ஆரம்பத்தில் இது 111 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. இது வலைப்பின்னல் வரலாற்றில் இன்றுவரை அதிகம் பார்க்கப்பட்ட தொடராக பிரிட்ஜெர்டன் என்ற தொடரை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lee, Julie (August 10, 2021). "Squid Game invites you to deadly childhood games on September 17". Netflix Media Center. Archived from the original on August 11, 2021. பார்க்கப்பட்ட நாள் August 12, 2021.
  2. Moon Ji-yeon (March 11, 2020). "[공식] 이정재X박해수, 넷플릭스 '오징어게임' 주연 캐스팅" [[Official] Lee Jung-jae X Park Hae-soo] (in கொரியன்). Sports Chosun. Archived from the original on October 3, 2021. பார்க்கப்பட்ட நாள் September 29, 2021 – via Naver.
  3. Jang Ah-reum (June 2, 2020). "[단독] 위하준, 넷플릭스 오리지널 '오징어 게임' 합류...이정재와 호흡" [[Exclusive] Ha-Jun Wi joins Netflix's original 'Squid Game'...Breathing with Lee Jung-jae] (in கொரியன்). News1. Archived from the original on September 29, 2021. பார்க்கப்பட்ட நாள் September 29, 2021 – via Naver.
  4. Pineda, Cherry. "'Squid Game: Extra Life' premieres on 'It's Showtime'". Push (in ஆங்கிலம்). Archived from the original on September 26, 2021. பார்க்கப்பட்ட நாள் September 30, 2021.
  5. Kim Ji-won (August 11, 2021). "전여빈 나나 류경수 '글리치' 촬영 중단 "보조출연자 코로나 확진"[공식"] (in ko). Ten Asia (Naver) இம் மூலத்தில் இருந்து July 25, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210725182757/https://n.news.naver.com/entertain/article/609/0000471507. 
  6. Robinson, Jacob (August 11, 2021). "Netflix K-Drama Thriller 'Squid Game' Season 1: Coming to Netflix in September 2021". What's on Netflix. Archived from the original on August 11, 2021. பார்க்கப்பட்ட நாள் August 12, 2021.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்விட்_கேம்&oldid=3395997" இலிருந்து மீள்விக்கப்பட்டது