இசுப்புட்னிக் 2


இசுப்புட்னிக் 2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக் கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி, தொலைஅளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட அறையில் லைக்கா வைக்கப்பட்டது.

ஸ்புட்னிக் 2
இயக்குபவர்சோவியத் ஒன்றியம்
முதன்மை ஒப்பந்தக்காரர்OKB-1
திட்ட வகைபுவியியல் விஞ்ஞானம்
செயற்கைக்கோள்பூமி
சுற்றுப்பாதைகள்~2,000
ஏவப்பட்ட நாள்நவம்பர் 3, 1957 at 02:30:00 UTC
ஏவுகலம்R-7/SS-6 ICBM
திட்டக் காலம்162 தினங்கள்
Orbital decayஏப்ரல் 14, 1958
தே.வி.அ.த.மை எண்1957-002A
இணைய தளம்NASA NSSDC Master Catalog
நிறை508.3 kg (1,120 lb.)
சுற்றுப்பாதை உறுப்புகள்
அரைப் பேரச்சு7,314.2 km (4,545 milies)
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்.098921
சாய்வு65.33°
சேய்மைநிலை1,660 km (1,031 மைல்கள்)
அண்மைநிலை212 km (132 மைல்கள்)
சுற்றுக்காலம்103.7 நிமிடங்கள்

பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்புட்னிக்_2&oldid=3708130" இலிருந்து மீள்விக்கப்பட்டது