இசுலாமிய உச்சி மாநாட்டின் எட்டாவது அசாதாரண அமர்வு

பாக்கித்தானில் நடந்த நிகழ்வு

இசுலாமிய உச்சி மாநாட்டின் எட்டாவது அசாதாரண அமர்வு (Eighth Extraordinary Session of the Islamic Summit Conference) 2021 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இசுலாமாபாத்தில் இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு மாநாடாகும் [1] [2]

இசுலாமிய உச்சி மாநாட்டின் எட்டாவது அசாதாரண அமர்வு
இடம்பெற்ற நாடுபாக்கித்தான் பாக்கித்தான்
தேதிதிசம்பர் 17, 2021 (2021-12-17)
நகரம்இஸ்லாமாபாத்
முன்னையது7வது
பின்னையது9வது

பின்னணி

தொகு

காபூல் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆப்கானித்தானை ஆப்கானித்தான் தலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை அடுத்து, மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. இவை தலிபான்கள் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஆப்கானிய சொத்துக்கள் மற்றும் மேம்பாட்டு நிதிகளுக்கான அணுகலை தடை செய்தன.

இந்தத் தடைகள் நாட்டில் பொருளாதார மற்றும் மனிதாபிமான அவசரநிலை ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. 2021 ஆம் அக்டோபர் மாதத்தில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கைகளின் அடிப்படையில், சுமார் 22.8 மில்லியன் ஆப்கானியர்கள் உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழ்வாதார இழப்பால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. [3]

சவூதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் இம்மாநாடு இசுலாமாபாத்தில் நடைபெற்றது, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கியது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "OIC Summit 2021: Three-day holiday in Islamabad with no suspension of mobile services" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  2. "'Afghanistan heading for chaos unless action taken immediately'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  3. "Afghanistan on 'countdown to catastrophe' without urgent humanitarian relief" (in ஆங்கிலம்). 2021-10-25. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  4. "Pakistan to Host OIC-led International Meeting on Afghanistan" (in ஆங்கிலம்). 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.