இசுலாம்நகர், போபால்

இசுலாம்நகர் (Islamnagar) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி கிராமமாகும். [1] இது, பாண்டா தொகுதியில் அமைந்துள்ளது.[2]

இசுலாம்நகர்
கிராமம்
சாமன் மகால்
இசுலாம்நகர் is located in மத்தியப் பிரதேசம்
இசுலாம்நகர்
இசுலாம்நகர்
இசுலாம்நகர் is located in இந்தியா
இசுலாம்நகர்
இசுலாம்நகர்
ஆள்கூறுகள்: 23°21′17″N 77°25′02″E / 23.3547403°N 77.4171237°E / 23.3547403; 77.4171237
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்போபால்
வட்டம்போபால் மாவட்டம்
தொகுதிபாண்டா
ஏற்றம்
485 m (1,591 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,638
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறியீடு482390

முன்னர் ஒரு கோட்டை நகரமாக இருந்த இது சிலகாலம் போபால் சுதேச அரசின் தலைநகராக இருந்தது. போபாலின் நிறுவனர் தோஸ்த் முகமது கான் கட்டிய அரண்மனைகளின் இடிபாடுகள் இந்த இடத்தில் இன்றும் உள்ளன.

இஸ்லாம் நகர் நுழைவு வாயில்

வரலாறு தொகு

முதலில் ஜகதீஷ்பூர் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் உள்ளூர் ராஜ்புத் தலைவர்களால் நிறுவப்பட்டது.[3] 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த இடம் போபால் சுதேச அரசின் நிறுவனர் தோஸ்த் முகமது கான் என்பவரால் கைப்பற்றப்பட்டு இசுலாம்நகர் ("இசுலாம் நகரம்") என்று பெயர் மாற்றப்பட்டது. இது தோஸ்த் முகமது கானின் மாநிலத்தின் அசல் தலைநகராக இருந்தது.

1723ஆம் ஆண்டில், தோஸ்த் முகமது கான் ஒரு குறுகிய முற்றுகைக்குப் பின்னர் இசுலாம்நகர் கோட்டையை நிஜாம்-உல்-முல்க் கைப்பற்றினார்.[4] பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் பின்னர் தோஸ்த் முகமது கான் நிஜாமின் கீழ் ஒரு கோட்டை தளபதி பதவிக்கு குறைக்கப்பட்டார். 1727ஆம் ஆண்டில் அவர் தனது தலைநகரை போபாலுக்கு மாற்றினார். 1806 முதல் 1817 வரை இசுலாமியநகர் கோட்டையை சிந்தியாக்கள் கட்டுப்படுத்தினர். ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து போபாலுக்கு மீட்டெடுக்கப்பட்டது. [5]

ஷாஜகான் பேகம் உட்பட போபாலின் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் இசுலாம்நகரில் பிறந்தவர்கள்.

நிலவியல் தொகு

போபால் - பெராசியா சாலையில் இசுலாம் நகர் அமைந்துள்ளது.

நினைவுச்சின்னங்கள் தொகு

சாமன் மகால்
 
தோட்டத்துடன் சாமன் மகால்

சாமன் மகால் ("தோட்ட அரண்மனை") என்றும் அழைக்கப்படுகிறாது. தோஸ்த் முகமது கான் சிவப்பு மணற்கற்கலால் கட்டிய இது இசுலாம்நகர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இது தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சார்பாக் பாணி தோட்டத்தைக் கொண்டுள்ளது. சாமன் மகால் முகலாய மற்றும் மால்வா பாணியிலான கட்டிடக்கலைகளில் மணற்கற்கலால் ஆனது. மேலும், 12 நுழைவாயில்கள் பெங்காலி கட்டிடக்கலை செல்வாக்கு மிக்க கூரையின் விளிம்புகளுடன் உள்ளன. பாழடைந்த அரண்மனையில் முகலாய நீர்த் தோட்டமும் குளியலுக்கான இடமும் உள்ளது. [6] [7] [8]

இராணி மகால்
 
இராணி மகாலின் ஒரு பகுதி.

இராணி மகால் ("இராணி அரண்மனை") என்பது இரட்டை மாடி ஜெனானா வளாகமாகும் (பெண்கள் குடியிருப்பு). இது ஒரு தூண்களின் நெடுவைரிசையைகொண்டுள்ளது . [3] இது தோஸ்த் முகமது கானின் இராணிகளுக்கான குடியிருப்பாக இருந்துள்ளது.

புள்ளிவிவரங்கள் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இசுலாம்நகரில் 724 வீடுகள் உள்ளன. மக்களின் கல்வியறிவு விகிதம் (அதாவது 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளைத் தவிர்த்து மக்கள்தொகையின் கல்வியறிவு விகிதம்) 77.52% ஆகும். [9]

மேற்கோள்கள் தொகு

  1. "List of Total Habitations with 100% Population Coverage". Integrated Management Information System (IMIS). Ministry of Drinking Water and Sanitation, Government of India. Archived from the original on 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
  2. "RFP Document for Establishing Operating and Maintaining Lok Seva Kendra" (PDF). E-Governance Society Bhopal District. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  3. 3.0 3.1 Sarina Singh; Lindsay Brown; Mark Elliott; Paul Harding; Abigail Hole; Patrick Horton, eds. (2009), Lonely Planet India, Country Guide Series (13, illustrated ed.), Lonely Planet, p. 694, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74179-151-8
  4. Shaharyar M. Khan (2000). The Begums of Bhopal (illustrated ed.). I.B.Tauris. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-528-0.
  5. Imperial gazetteer of India: provincial series, Volume 12. 1908.
  6. "Chaman Mahal, Islamnagar". www.nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  7. "Chaman Mahal, Bhopal". www.indiatourmate.com. Archived from the original on 2019-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  8. "Islamnagar – Muhgal Heritage of a Hindu Town – Indian History and Architecture" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  9. "District Census Handbook - Bhopal". 2011 Census of India (Directorate of Census Operations, Madhya Pradesh). http://www.censusindia.gov.in/2011census/dchb/2327_PART_B_DCHB_BHOPAL.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாம்நகர்,_போபால்&oldid=3778038" இலிருந்து மீள்விக்கப்பட்டது