இட்டாவா வனவிலங்குப் பூங்கா

இட்டாவா வனவிலங்கு சரணாலயம் (Etawah Safari Park) முன்னர் இட்டாவா சிங்கப் பூங்கா, அதிகாரப்பூர்வமாக ஆசிய சிங்க இனப்பெருக்கம் மையம், பல்லுயிர் வனவிலங்குப் பூங்கா, இட்டாவா,[4] என்றெல்லாம் அறியப்பட்ட இது இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் இட்டாவாவில் உள்ள வனவிலங்குப் பூங்காவாகும். இது 2019 நவம்பரில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இதில் பல விலங்குகள், ஆசியச் சிங்கங்களின் இனப்பெருக்கம் மையம், பார்வையாளர் மையம் ஆகியவையும் அடங்கும்.[5]

இட்டாவா வனவிலங்குப் பூங்கா
இட்டாவா வனவிலங்குப் பூங்காவின் நுழைவாயில்
Map
26°46′02″N 79°00′07″E / 26.767261°N 79.001896°E / 26.767261; 79.001896
திறக்கப்பட்ட தேதி24 நவம்பர் 2019
அமைவிடம்இட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா
நிலப்பரப்பளவு350 எக்டேர்கள் (860 ஏக்கர்கள்)[1]
விலங்குகளின் எண்ணிக்கை165[2]
உயிரினங்களின் எண்ணிக்கை5 (2019)
உரிமையாளர்வனத்துறை, உத்தரப் பிரதேச அரசு
இயக்குனர்கிருஷ்ண குமார் சிங்[3]
வலைத்தளம்etawahlionsafari.org
ஆசிய சிங்கம்

வரலாறு

தொகு

இந்தத் திட்டம் முதன்முதலில் 2006இல் முன்மொழியப்பட்டது. [6] மே 2012இல் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பூங்காவை எசுப்பானிய நிறுவனமான ஆர்ட் உர்பே வடிவமைத்தது. [7] முதலில், ஆறு சிங்கங்கள் 2014 இல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன.  2015 ஆம் ஆண்டில் ஒரு மான் பூங்கா, மறிமான் பூங்கா, சிறுத்தைப் பூங்கா, கரடிப் பூங்கா ஆகியவை சேர்க்கப்பட்டு பூங்காவின் பெயர் இட்டாவா வனவிலங்குப் பூங்கா என மறுபெயரிடப்பட்டது. மான் பூங்கா 6 அக்டோபர் 2016 இல் திறக்கப்பட்டது. [8] [9] மீதமுள்ள பூங்காக்கள் 1 ஜூன் 2018 அன்று திறக்கப்பட்டன. [10] [11] சிங்கப்பிரிவு தவிர இந்த பூங்கா 24 நவம்பர் 2019 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. 

விலங்குகள்

தொகு

இங்குள்ள பூங்காக்களில், சிங்கப் பூங்கா, மான் பூங்கா , மறிமான் பூங்கா , கரடிப் பூங்கா சிறுத்தைப் பூங்கா ஆகியவை அடங்கும். [12] [13] 2019 நவம்பரின்படி , சிங்கம் மற்றும் சிறுத்தைப் பூங்காக்கள் மத்திய விலங்கு காட்சியக ஆணையத்தின் (CZA) ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. [14]

ஆசிய சிங்க இனப்பெருக்கம் மையம்

தொகு

இந்த ஆசியச் சிங்கம் இனப்பெருக்க மையத்தில் பன்னிரண்டு சிங்கங்கள் உள்ளது.[15] இது குசராத்தின் உயிரியல் பூங்காக்களிலிருந்து பெரும்பாலும் செப்டம்பர் 2014 இல் வந்த பதினொரு சிங்கங்களுடன் தொடங்கப்பட்டது.[16] நான்கு சிங்கங்களும் ஐந்து குட்டிகளும் "கேனைன் டிஸ்டெம்பர்" என்ற ஒரு வைரசு காரணமாக இறந்தன. பின்னர் சிங்கங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டது.[17] 2020 திசம்பரின் படி, மையத்தில் ஒன்பது குட்டிகள் உள்ளன.[18] [19] [20] [21]

வசதிகள்

தொகு
 
பார்வையாளர் வசதி மையம்

பார்வையாளர் வசதி மையத்தில் கணினி வரைபடம், பெரிய வடிவமைப்பு காட்சிகள் கொண்ட பல்லூடக அருங்காட்சியகம், பார்வையாளர்களுக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்கான நாற்பரிமாண கல்வி அரங்கம் ஆகியவையும் அடங்கும். [22]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Lion Breeding Centre and Multiple Safari Parks information" (PDF). மத்திய விலங்கு காட்சியக ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 December 2019.
  2. https://m.jagran.com/uttar-pradesh/kanpur-city-etawah-lion-safari-lion-will-be-adopt-any-four-lakh-one-thousand-rupees-21196796.html
  3. "लायन सफारी को आम दर्शकों के लिए जल्द खोला जाएगा". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
  4. "Information about Zoos". cza.nic.in. மத்திய விலங்கு காட்சியக ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 December 2019.
  5. "Annual report" (PDF). cza.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  6. "Loksabha Election 2019 : बड़ा मुद्दा : सियासी शोर में दब गई सफारी पार्क के शेरों की दहाड़". Dainik Jagran.
  7. "Lion Safari Etawah". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
  8. "Four months on, Lion Safari sees birth of two cubs". 7 October 2016.
  9. "मुख्यमंत्री अखिलेश यादव आज इटावा में करेंगे हिरन सफारी का शुभारंभ". livehindustan.com.
  10. Asia, 12Go. "Etawah Safari Park Will Be Opened in October News". 12go.asia.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  11. "आम जनता को समर्पित हुआ इटावा सफारी पार्क". Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2018-06-01.
  12. "A Sneak Peek at India's Lion Safari: A Conservation Effort for Asia's "Last Lions"". Blog.nationalgeographic.org. Archived from the original on 2018-03-22. பார்க்கப்பட்ட நாள் 2018-03-21.
  13. "इटावा सफारी को शासन की हरी झंडी". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2017-11-25.
  14. "Etawah Safari opens for public, lion segment to wait". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  15. "Etawah safari to get four lions from Gujarat's Sakarbaug Zoo". The Economic Times. 18 August 2013.
  16. "Gir lions gifted to Etawah Wildlife Lion Safari Park die; Mulayam's dream project could be in question in next year's elections". economictimes.com.
  17. "Etawah lion safari roars back to life from the edge of oblivion". hindustantimes.com.
  18. "इटावा लॉयन सफारी: शेरनी जेसिका ने दो शावकों को दिया जन्‍म, चौथी बार मां बनी". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  19. "लॉयन सफारी में शेरनी ने दिया शावक को जन्म". www.livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.
  20. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  21. "Etawah safari may begin with deer, antelope next month". The Times of India.
  22. "Annual report" (PDF). cza.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.

வெளி இணைப்புகள்

தொகு