இட்டெர்பியம்(II) புரோமைடு

வேதிச் சேர்மம்

இட்டெர்பியம்(II) புரோமைடு (Ytterbium(II) bromide) என்பது YbBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

இட்டெர்பியம்(II) புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் இருபுரோமைடு
இனங்காட்டிகள்
25502-05-0
பண்புகள்
YbBr2
வாய்ப்பாட்டு எடை 332.84
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இட்டெர்பியம்(III) புரோமைடை ஐதரசனுடன் சேர்த்து 500-600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஒடுக்க வினை நிகழ்ந்து இட்டெர்பியம்(II) புரோமைடு உருவாகும்.:[1]

2YbBr3 + H2 --> 2YbBr2 + 2HBr

இட்டெர்பியம் உலோகத்துடன் நீர்ம அம்மோனியாவில் கரைக்கப்பட்ட அம்மோனியம் புரோமைடைச் சேர்த்து -78 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(II) புரோமைடை உருவாக்க முடியும். இவ்வினையில் முதலில் உருவாகும் அம்மோனியா சேர்மத்தை வெற்றிடத்தில் 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் விளைபொருளாக இட்டெர்பியம்(II) புரோமைடு கிடைக்கும்.

Yb + 2NH4Br---> YbBr2 + 2NH3 + H2

இட்டெர்பியம்(III) புரோமைடை உலோக இட்டெர்பியத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் இட்டெர்பியம்(II) புரோமைடை தயாரிக்கலாம்:[2]

Yb + 2YbBr3---> 3YbBr2

பண்புகள்

தொகு

இட்டெர்பியம்(II) புரோமைடு அதிக நீருறிஞ்சும் தன்மையுடன் வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. ஒரு மந்த வளிமண்டல சூழலில் அதிக வெற்றிடத்தில் மட்டுமே இதை சேமிக்க இயலும். காற்று அல்லது ஈரப்பதத்தில் நிலையற்றதாக உள்ள இச்சேர்மம் விரைவாக ஆக்சிபுரோமைடாக மாறி ஐதரசன் வாயுவை வெளியிடுகிறது. Pbca என்ற இடக்குழுவுடன்[3] செஞ்சாய்சதுரபொ படிகமாக இசுட்ரோன்சியம் அயோடைடு கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பை இது ஏற்றுக் கொள்கிறது. அல்லது Pnnm என்ற இடக்குழுவுடன் a=6.63 Å, b=6.93 Å, c=4.47Å என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் கால்சியம் குளோரைடு கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. p. 1081. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1.
  2. Voos-Esquivel, Christine A.; Eick, Harry A. (Apr 1987). "Synthesis of YbBr2 and YbCl2 and an x-ray diffraction study of the system YbBr2YbCl2" (in en). Journal of Solid State Chemistry 67 (2): 291–296. doi:10.1016/0022-4596(87)90366-5. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022459687903665. 
  3. 3.0 3.1 Beck, Horst. P.; Bärnighausen, H. (Dec 1971). "Zur Kristallchemie der Ytterbium(II)‐Halogenide YbCl 2 und YbBr 2" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 386 (2): 221–228. doi:10.1002/zaac.19713860214. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19713860214. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டெர்பியம்(II)_புரோமைடு&oldid=4145862" இலிருந்து மீள்விக்கப்பட்டது