இட்ரியைட்டு-(Y)

ஆக்சைடு கனிமம்

இட்ரியைட்டு-(Y) (Yttriaite-(Y)) என்பது Y2O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும்.[2][1] மிகவும் அரிய கனிமமான இது இயற்கையாகத் தோன்றும் இட்ரியம் ஆக்சைடு சேர்மமாகும். வேதியியலின் அடிப்படையில் இது கங்கைட்டு, ஆர்சனோலைட்டு, அவிசென்னைட்டு மற்றும் செனார்மோண்டைட்டு (சம அளவு கனிமங்கள்) ஆகியவற்றின் இட்ரியம் ஒப்புமையாக கருதப்படுகிறது.[3][4][5][6] குருந்தம், பிசுமைட்டு, பிக்சுபைட்டு, எசுகோலைட்டு, ஏமடைட்டு, கரேலியனைட்டு, சுபேரோபிசுமொயிட்டு, திசுடாரைட்டு மற்றும் வாலண்டைனைட்டு [7]ஆகியவை பொதுவான A2O3 என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய பிற கனிமங்களுடன் சேர்ந்து இட்ரியைட்டு-(Y) காணப்படுகிறது. தாயக தங்குதன் உலோகத்துடன் சிறிய அளவில் உள்ளடக்கமாகவும் இக்கனிமம் உள்ளது.[2]

இட்ரியைட்டு-(Y)
Yttriaite-(Y)
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுY2O3
இனங்காணல்
நிறம்வெண்மை
படிக அமைப்புகனசதுரப் படிகங்கள்
பிளப்புதனித்துவம் – தெளிவு
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை5–6
மிளிர்வுவிடாபிடியான பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒப்படர்த்தி5.073
ஒளிவிலகல் எண்n = 1.931
மேற்கோள்கள்[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் இட்ரியைட்டு-(Y) கனிமத்தை Yt-Y[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mindat
  2. 2.0 2.1 Mills, S.J., Kartashov, P.M., Ma, C., Rossman, G.R., Novgorodova, M.I., Kampf, A.R., and Raudsepp, M., 2011: Yttriaite-(Y): The natural occurrence of Y2O3 from the Bol’shaya Pol’ya River, Subpolar Urals, Russia. American Mineralogist 96(7), 1166–1170
  3. Mindat, Kangite, http://www.mindat.org/min-42879.html
  4. Mindat, Arsenolite, http://www.mindat.org/min-294.html
  5. Mindat, Avicennite, http://www.mindat.org/min-437.html
  6. Mindat, Senarmontite, http://www.mindat.org/min-3618.html
  7. Mindat, Tistarite, http://www.mindat.org/min-38695.html
  8. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியைட்டு-(Y)&oldid=4150258" இலிருந்து மீள்விக்கப்பட்டது