இணைந்த துமுக்கி

இணைந்த துமுக்கி என்பது, குறைந்தது ஒரு புரியிட்ட குழலையும், ஒரு புரியில்லா குழலையும் கொண்டிருக்கும், வேட்டைக்கு பயன்படும் ஒரு வகையான உடைவியக்க சுடுகலன் ஆகும். ஒரு புரியிட்ட குழலையும், ஒரு புரியில்லா குழலையும் பிரயோகிக்கும் இணைந்த துமுக்கிகள், பொதுவாக மேலும்-கீழுமான வடைவமைவில் இருக்கும். பக்கம்-பக்கமான வடிவ அமைவை, கேப் துமுக்கி (ஆங்கிலம்: cape gun) என குறிக்கப்படுகிறது. மும்மை (ஆங்கிலம்: drilling (மும்மையை குறிக்கும் ஜெர்மானியச் சொல்)) என்பது, மூன்று குழல்கள் கொண்ட இணைந்த துமுக்கி ஆகும். நால்மை (ஆங்கிலம்: vierling (நால்மையை குறிக்கும் ஜெர்மானியச் சொல்)) என்பது, நான்கு குழல்களைக் கொண்டிருக்கும். விளிம்பற்ற வெடிபொதிகளை உடைவு-இயக்க ஆயுதத்தில் இருந்து அகற்றுவது சிரமம் என்பதால், பொதுவாக விளிம்புடைய வெடிபொதிகளையே இணைந்த துமுக்கிகள் பிரயோகிக்கும்.

வழக்கமான இணைந்த துமுக்கி (மேல்), மும்மை (நடு, மேல்-இடது மும்மை பொதுவானது), மற்றும் நால்மை (கீழ்) குழல் அமைவுகளை காட்டும் படம் 

பயன்பாடு 

தொகு

சுடுகலன்கள் வெடிபொதிகளை பிரயோக்கித்த ஆரம்ப காலங்கள் தொடங்கி; ஐரோப்பா, ஆப்ரிக்கா, மற்றும் ஆசியாவில், நீண்ட வரலாற்றைக் கொண்டவை இந்த இணைந்த துப்பாக்கிகள். இந்த துப்பாக்கிகள் பிரத்தியேக வேட்டை ஆயுதங்களாக விளங்கின. 

சுடும் இயங்குநுட்பங்கள்

தொகு

முற்கால இணைந்த துப்பாக்கிகளில் குழல் துப்பாக்கிகள் சுற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட (மரையிட்ட அல்லது மரையில்லா) குழல்கள்,  தீக்கல் இயக்கத்தகடுக்கு நேராக வைத்து சுடுவதற்கு ஏதுவாக இருந்தது. இவ்வகை அலையாடும் துப்பாக்கி (swivel guns) என்று அழைப்பர்.[1] இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகள் மற்றும் இரட்டை புரிதுமுக்கிகள் போன்ற தோற்றத்திலேயே நவீன இணைந்த துப்பாக்கிகளும் இருக்கும்.

வேறுபாடுகள் 

தொகு

இணைந்த துப்பாக்கிகள் 

தொகு
 
எம்6 வான்வீரர் தற்காப்பு ஆயுதம்

மேலும்-கீழுமான வடிவ இணைந்த துமுக்கிகள், பொதுவாக புரியிட்ட குழலின் மேல், சிதறுதுமுக்கி (புரியில்லா) குழலை கொண்டிருக்கும். இந்த வகை துப்பாக்கியில் பொதுவாக இரும்புக் குறிநோக்கி பிரயோகிக்கப்படும்.

கேப் துப்பாக்கிகள் 

தொகு

ஐரோப்பாவில் தோன்றிய, பக்கம்-பக்கமான வடிவ அமைவு கொண்ட இணைந்த துமுக்கி தான், கேப் துப்பாக்கி ஆகும்.

மும்மைகள் 

தொகு
 
புரிதுமுக்கிக் குழலுக்கு மேல், பக்கம்-பக்கமான சிதறுதுமுக்கி குழல்களை அமைய பெற்றிருக்கும் பொதுவான மும்மை குழல் அமைப்பு.
 
ஆடிவில்லைக் (ஆங்கிலம்: lens) குறிநோக்கி பொருத்திய மும்மை. இதில் ஒ ஒரு சிதறுதுமுக்கி, நடுவடி புரிதுமுக்கி மற்றும் விளிம்படி புரிதுமுக்கி குழல்கள் உள்ளதை படத்தில் காண்க.

மும்மைகள் இயல்பாக இரு ஒரேமாதிரியான சிதறுதுமுக்கிக் குழல்களும், ஒரு புரிதுமுக்கிக் குழலும் கொண்டிருக்கும், ஆனால் இவ்வகையில் மேலும் சில வடிவ அமைவுகளும் உள்ளன:[2]

  • இரு ஒரேமாதிரியான புரிதுமுக்கிக் குழல்கள் மற்றும் ஒரு சிதறுதுமுக்கிக் குழல்  
  •  இரு வெவ்வேறு கேலிபர் புரிதுமுக்கிக் குழல்கள் (அதிலும் ஒன்று விளிம்படி, மற்றொன்று நடுவடியாக இருக்கும்), மற்றும் ஒன்று சிதறுதுமுக்கிக் குழல் 
  • மூன்று ஒரேமாதிரியான சிதறுதுமுக்கிக் குழல்கள் (முக்குழல் சிதறுதுமுக்கி)
  • மூன்று  ஒரேமாதிரியான புரிதுமுக்கிக் குழல்கள் (முக்குழல் புரிதுமுக்கி)

நால்மைகள் 

தொகு

நால்மைகள் பொதுவாக, இரு ஒரேமாதிரியான சிதறுதுமுக்கிக் குழல்கள், ஒரு .22 கேலிபர் விளிம்படி புரிதுமுக்கிக் குழல், மற்றும் ஒரு நடுவடி புரிதுமுக்கிக் குழல் ஆகியனவற்றைக் கொண்டிருக்கும். நால்மைகளிலும் பலவகை வடிவமைவுகள் இருந்தாலும், அவை அரிதாகவே உள்ளன.

குறிப்புகள் 

தொகு
  1. "The Gunsmith's Shop: The Colonial Williamsburg Official History Site". History.org. 2009-11-05. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
  2. Seibt, Grundwissen Jägerprüfung, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-440-10255-6

மேற்கோள்கள் 

தொகு
  • Fjestad, S. P. Blue Book of Gun Values, 13th Edition.

புற இணைப்புகள் 

தொகு
  • HEYM, modern maker of combination guns, drillings, and vierlings
  • Double Rifles—Reference site for Double Rifles and Drillings. Great photos, descriptions and price estimates at the time of past auctions.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைந்த_துமுக்கி&oldid=2760468" இலிருந்து மீள்விக்கப்பட்டது