நடுவடி வெடிபொதி
நடுவடி வெடிபொதி என்பது, வெடியுறையின் அடித்தட்டின் நடுப்பகுதியில் எரியூட்டியை கொண்டுள்ள, ஒரு வெடிபொதி ஆகும். விளிம்படி வெடிபொதிகளைப் போல் இல்லாமல், இதன் எரியூட்டியானது கழற்றி, மாற்றக்கூடிய வகையில் இருக்கும். அளவில் மிகச்சிறிய வெடிபொதிகளைத் தவிர, மற்றவை அனைத்திலும் விளிம்படி வகை நீக்கப்பட்டு, நடுவடி வெடிபொதிகளாக மாற்றப்பட்டன. விதிவிலக்காக, சில கைத்துப்பாக்கி மற்றும் புரிதுமுக்கியின் .17 கேலிபர் மற்றும் .22 கேலிபர் வெடிபொதிகள், (பூச்சிகளை கொல்லும் நோக்கில்) சிறு-குழல்விட்டம் உடைய சிதறுதுமுக்கியின் வெடிபொதிகள், தொன்மையானவை, பெரும்பாலும் வழக்கொழிந்த வெடிபொதிகள், இன்றைய பெரும்பாலான கைத்துப்பாக்கி, புரிதுமுக்கி, மற்றும் சிதறுதுமுக்கியின் வெடிபொதிகள் எல்லாமுமே, நடுவடி வெடிபொதிகள் தான்.
சாதகங்கள்
தொகுஇராணுவ நோக்கில், நடுவடி வெடிபொதிகளே அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவை; ஏனெனில் இதில் தடித்த உலோக பொதியுறைகள் இருப்பதால், கரடுமுரடாக கையாளும்போது கூட, சேதமடையாமல் தாக்குப் பிடிக்கும். மேலும், இது கையாள பாதுகாப்பானது; ஏனெனில் துருத்திக்கொண்டு இருக்கும் விளிம்பில் உள்ள வெடிக்கூடிய எரியூட்டிச் சேர்மம் ஆனது, நசுக்கல் அல்லது கீழே விழுதல் போன்ற நிகழ்வால் கூட தூண்டப்படலாம். நடுவடி வெடிபொதிகளின் பலமான அடித்தட்டு, அதீத அழுத்தங்களை தாக்குப்பிடிக்க வல்லது; இந்த அம்சமானது, தோட்டாவிற்கு அதிக வேகத்தையும் ஆற்றலையும் அளிக்கும். நடுவடி வெடிபொதிகளின் உறையின் உற்பத்தி முறை, சிக்கலாக மற்றும் விலையுர்ந்ததாக இருந்த போதிலும்; இதில் வெடிபொருளை (எரியூட்டியை) இடுவது ஒப்பீட்டளவில் எளிதாகும், ஏனெனில் விளிம்பின் எந்த பகுதியில் வெடியூசி அடிக்கும் என்ற ஐயப்பாடு, விளிம்படி வெடிபொதிகளில் இருப்பதால், எரியூட்டியை விளிம்பு முழுதும் சீராக பரப்புவதற்கு, சுழலவிடும் செயல்முறை தேவைப்படும். நடுவடி வெடிபொதிக்கு தேவைப்படும் எரியூட்டும் வெடிபொருளின் அளவைவிட, பெரிய கேலிபர் விளிம்படி வெடிபொதிக்கு அதிகமான அளவு தேவைப்படும். இந்த அதிக அளவானது, எரியூட்டும்போது தேவையற்ற அதி-அழுத்தங்களை உண்டாக்கலாம். எரியூட்டும் வெடிபொருளின் அளவை குறைத்தால், விளிம்படிப் பற்றவைப்பின் நம்பகத்தன்மையும் குறைந்துவிடும், மேலும் இயக்கக் கோளாறுக்கான வாய்ப்புகளும் அதிகரித்துவிடும்.[1]
விலையுர்ந்த பித்தளை உறைகளில், மீண்டும் எரியூட்டி, வெடிமருந்து மற்றும் எறியத்தை இட்டு, மறுஉபயோகம் செய்யலாம். இதை கையேற்றுதல் என்பர்.
வரலாறு
தொகுதட்டும்-மூடி இல்லாத, நடிவடி வெடிபொதியின் அடிப்படை வடிவத்தை, 1808-க்கும் 1812-க்கும் இடையில், ஜீன் சாமுவேல் பாலி கண்டுபித்தார்.[2] முதல் ஒருங்கிணைந்த வெடிபொதியும், இதுவே ஆகும். 1829-ல், அசல் நடுவடி வெடிபொதியனது, க்ளெமான் பொத்தே என்ற பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது.[3][4] இருந்தாலும், 1855 வரை பொத்தே, அவரின் வடிவத்தை செம்மைப் படுத்தவில்லை. பெஞ்சமான் ஹுய்யீ, கஸ்தீன் ரெனேத்,[5] சார்லஸ் லான்காஸ்டர், ஜார்ஜ் மோர்ஸ், பிரான்சுவா ஷ்ணீதெர், ஹிரம் பெர்டான், எட்வர்ட் மௌனியர் பாக்ஸர் ஆகியோரால், நடுவடி வெடிபொதி செம்மைப் படுத்தப்பட்டது.[6]
நடுவடி எரியூட்டிகள்
தொகுவெடிபொதியின் அடிதட்டின் நடுவிலிருக்கும் மாடக்குழிக்குள், முதல்ரக வெடிபொருளை கொண்டிருக்கும் உலோகச் சிமிழ் (எரியூட்டி) மூலம், நடுவடி வெடிபொதியை இனம் காணலாம். சுடுகலனின் வெடியூசி, சிமிழுக்கும் சிறு-பட்டடைக்கும் இடையிலிருக்கும் வெடிபொருளை அடித்து நொறுக்குவதால் ஏற்படும் தீப்பொறித் துகள்கள், உறைக்குள் இருக்கும் வெடிப்பொடியை பற்றவைக்கும்.[7] பெர்டான் மற்றும் பாக்ஸர், ஆகிய இரண்டு எரியூட்டிகளுமே "நடுவடி" ரகம் தான்; ஆனால் இவற்றை மாற்றி மாற்றி, ஒரே வெடியுறையில் இட முடியாது. இருப்பினும், ஒட்டுமொத்த அளவில் ஒரேமாதிரி இருக்கும் பாக்ஸர்- அல்லது பெர்டான்-எரியூட்டியிட்ட வெடிபொதிகளை, ஒரே ஆயுதத்தைக் கொண்டு சுட முடியும்.[8]
சுடப்பட்ட வெடியுறைக்குள் பார்த்து, இரு துளைகள் உடையதை பெர்டான் உறை என்றும், ஒற்றைத் துளை உடையதை பாக்ஸர் உறை என்றும் இனம் காண முடியும். ஆனால், சுடப்படாத வெடிபொதியை பார்த்து, இவ்விரண்டு எரியூட்டி வகைகளையும் இனம் கண்டுகொள்வது முடியாத ஒன்றாகும். பெர்டான் எரியூட்டியின் உற்பத்தி செலவும் குறைவே ஆகும்.
பெர்டான் எரியூட்டி
தொகுஅமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ஹிரம் பெர்டானால், பெர்டான் எரியூட்டி கண்டுபிடிக்கப்பட்டு, 1866-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி காப்புரிமம் U.S. Patent 53,388 பெறப்பட்டது. ஒரு சிறிய செப்பு உருள்கலன், வெடிபொதியின் உறையாக விளங்கியது; மேலும், வெடிபொதியில் (தோட்டாவின் எதிர்ப்பக்கம்) இருக்கும் மூடிய முனையின் வெளிப்பக்கத்தில் உள்ள மாடக்குழிக்குள், எரியூட்டிச் சிமிழ் அழுத்தமாக பொருந்தியிருக்கும். வெடிபொதியின் இந்த முனையில், எரியூட்டிச் சிமிழுக்கு பின்னால் (/அடியில்), ஒரு சிறு (முளை போன்ற துருத்தமாக) பட்டடையும் (anvil),பட்டடையின் பக்கத்திலேயே) இரண்டு சிறு வழி-துளைகளும் இருக்கும். எரியூட்டியை அந்தத் பட்டடையின்மேல் வைத்து, வெடியூசியால் நொறுக்கப் படுவதன்மூலம் உண்டாகும் தீப்பொறித் துகள்கள், வழி-துளை வாயிலாக உறைக்குள் இருக்கும் பிரதான உந்துபொருளை அடைந்து, அதை தீமூட்டும். பெர்டான் உறைகள் மீள்பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். உபயோகித்த எரியூட்டியை, வழக்கமாக இடுக்கி அல்லது நெம்புகோலை கொண்டு அகற்றப்படும். ஒரு புதிய எரியூட்டியை, பட்டடையின் மீது கவனமாக அமர்த்தப்பட்ட பின்பு, பிரதான வெடிபொருளும் தோட்டாவும் உறையில் சேர்க்கப்படும்.
பாக்ஸர் எரியூட்டி
தொகுஅதே காலகட்டத்தில், இங்கிலாத்தின் வூல்விச்சில் இருக்கும் அரச ஆயுதக்கிடங்கின் கர்னல். எட்வர்ட் மௌனியர் பாக்ஸர், வெடிபொதிக்கான எரியூட்டிச் சிமிழை வடிவமைத்து, 1866-ஆம் ஆண்டு, அக்டோபர் 13-ஆம் தேதி, இங்கிலாத்தில் காப்புரிமம் பெறப்பட்டு, 1869-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி, அமெரிக்கக் காப்புரிமம் U.S. Patent 91,818 பெறப்பட்டது.
பாக்ஸர் எரியூட்டி, பெர்டான் எரியூட்டியை ஒத்து இருக்கும், ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்: பட்டடையின் அமைவிடம். பாக்ஸர் எரியூட்டியில், பட்டடை ஒரு தனிக்கூறாக எரியூட்டிச் சிமிழில் தலைகீழாக அமர்த்தப்பட்டிருக்கும். வெடியுறையின் மூடிய முனையில் இருக்கும் எரியூட்டி-மாடக்குழியின் மையத்தில் ஒரேஒரு வழி-துளை இருக்கும். இந்த அமைப்பால் வெடிபொதியின் செயல்திறனில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஆனால் இது மீள்-குண்டேற்றத்தை எளிதாக்கியது. வெடியுறையின் திறந்த முனையில் இருந்து, ஒரு கம்பியைக் கொண்டு வழி-துளை ஊடாகக் குத்தியழுத்தினால், எரியூட்டிக் குழியிலிருந்து இரு-கூறுடைய எரியூட்டி வெளியே தள்ளப்படும். பட்டடையுடன், ஒரு புதிய எரியூட்டியை உறையில் இயந்திரத்தாலோ அல்லது கையாலோ அழுத்தப்படும்.
இரண்டு தனிக்கூறுகளால் ஆன எரியூட்டி என்பதால், பாக்ஸர்-எரியூட்டியிட்ட வெடிபொதியின் உற்பத்திமுறை கொஞ்சம் சிக்கலானது. ஆனால் தானியக்க உற்பத்தி இயந்திரங்கள் வந்தபின் இதற்கு தீர்வும் வந்துவிட்டது.
பாக்ஸர் எரியூட்டி அளவுகள்
தொகுவெடிபொதியின் எரியூட்டி-குழியை பொருத்து எரியூட்டியின் அளவு இருக்கும். சிறிய அல்லது பெரிய விட்டங்களில் செந்தர வகைகள் உள்ளன. ஓரு வெடிபொதி-வடிவத்திற்கு தேவையான பற்றவைப்பு-ஆற்றலின் தேவையின்அடிப்படையில், எரியூட்டியின் வெடிதிறன் இருக்கும்; வேகமாக-எரியும் (வெடி)பொடி அல்லது சிறியளவு வெடிபொருளுக்கு செந்தர எரியூட்டி பயன்படுத்தப்படும், அதுவே மெதுவாக-எரியும் பொடி அல்லது அதிகளவு வெடிபொருளுக்கு மேக்னம் எரியூட்டி பயன்படுத்தப்படும். பெரிய, மேக்னம் மற்றும் புரிதுமுக்கியின் எரியூட்டிகள் அதி-உஷ்ண, வலுவான மற்றும் நீடித்து எரியும் ஜுவாலை ஆகியவற்றைக் கொண்டு; (வெடி)பொடிக்கு அளிக்கப்படும் பற்றவைப்பு-ஆற்றலை அதிகரிக்கிறது. கைத்துப்பாக்கிக்கான வெடிபொதிகள், புரிதுமுக்கிக்கான வெடிபொதியைவிட எப்போதும் சிறியதாய் இருக்கும், இதனால் புரிதுமுக்கிகளுக்கு தேவைப்படும் எரியூட்டி ஜுவாலையைவிட இதற்கு குறைவாக தான் தேவைப்படும். எரியூட்டிச் சிமிழின் தடிமன் தான், கைத்துப்பாக்கி மற்றும் புரிதுமுக்கியின் எரியூட்டிகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாடு. கைத்துப்பாக்கியின் வெடிபொதிகள் புரிதுமுக்கியை விட குறைந்த அழுத்தத்தில் இயங்குபவை, அதனால் அவற்றின் எரியூட்டிச் சிமிழ்கள் மெல்லியதாக, மென்மையாக மற்றும் பற்றவைக்க எளிதாக இருக்கும். அதேபோல் புரிதுமுக்கியின் எரியூட்டிகள் தடிமனாக, வலியதாக, மற்றும் பற்றவைக்க வெடியூசியிடம் இருந்து அதிக தாக்கம் தேவைப்படும்.[9] கைத்துப்பாக்கி மற்றும் புரிதுமுக்கி ஆகிய சொற்களை தாண்டி, எரியூட்டியின் பயன்பாடு வெடிபொதியை சார்ந்துதான் இருக்குமே தவிர, சுடுகலனை சார்ந்து இருக்காது.
சிதறுதுமுக்கி எரியூட்டிகள்
தொகு(சிறப்பூட்டிய விளிம்படி .22 எலி-குண்டு வகையை தவிர்த்து) எல்லா நவீன குண்டுபொதிகளும் நடுவடி வகை தான். அவை பாக்ஸர் அமைப்பை சார்ந்த பெரிய, குறிப்பிட்ட எரியூட்டியை சிதறுதுமுக்கியில் பயன்படுத்துகிறது.
எரியூட்டியின் வேதியியல்
தொகுஎரியூட்டி உற்பத்தியும், பொறுத்துதலும் தான் சிறியரக போர்த்தளவாடங்களிலேயே அதி-ஆபத்தானது. அதிவுணர்வு பிரபல பிரித்தானிய ஈலே போர்த்தளவாட நிறுவனத்தின் நிறுவுனர் உட்பட, எரியூட்டிச் சேர்மங்களுக்கு பலர் பலியாகியுள்ளனர்.
19-ஆம் நூற்றாண்டின் தட்டும்-மூடிகளில் பயன்படுத்தப்பட்ட அதே பாதரச பல்மினேட்டை தான்
ஆரம்பகட்ட எரியூட்டிகள் பயன்படுத்தின. உஷ்ணமிக்க பாதரசத்தால் வெடிமருந்தை சிறப்பாக தீமூட்ட முடியும். புகையற்ற வெடிப்பொடியை உபயோக்கிகையில், பாதரச எரியூட்டிகளின் பாதகங்கள் தோன்றின. பாதரச பல்மினேட்டை சேமித்து வைக்கையில், அது மெதுவான சிதைவுக்கு உள்ளாவதால், எஞ்சியிருப்பதில் இருந்து வெளிப்படும் ஆற்றல், பற்றவைப்புக்கு போதுமானதாக இல்லை.[10] குறைந்த பற்றவைப்பு-ஆற்றல், வெடிமருந்தை பயன்படுத்தும்போது பிரச்சனை ஏற்படவில்லை, ஏனென்றால் வெடிமருந்தை பற்றவைக்க குறைந்த ஆற்றலே போதுமானது. புகையற்ற வெடிப்பொடியை பற்றவைக்க அதிக வெப்ப-ஆற்றல் தேவை.[11] வெடித்தவறும், தாமதச் சூடும் ஏற்படும் விகிதம் அதிகரித்தது. வெடியூசியின் மோதலால் எரியூடிச் சேர்மம் தூண்டப்படாவிடில், அல்லது முதன்மை வெடிப்பொடியை தீமூட்டும்முன் எரியூட்டி அணைந்துவிட்டால், வெடித்தவறு ஏற்படும். தாமதச்சூடு என்பது, வெடியூசியின் மோதலுக்கும், சுடுகலன் வெடிப்பதற்கும் இடையேயான உணரக்கூடிய காலதாமதம் ஆகும்.
புகையற்ற வெடிப்பொடியை பற்றவைக்க, கனலொளிர்வுத் துகள்கள் சிறந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. பீரங்கி ரகங்களில் பொட்டாசியம் கார்பனேட்டும்,[12] பொட்டாசியம் குளோரேட்டை பாதரச பல்மினேட்டு எரியூட்டிக் கலவையோடு சேர்த்தால், கனலொளிர்வுப் பொட்டாசியம் குளோரைடும் சிறு-ஆயுத வெடிபொதிகளில் அதே திறனை கொண்டிருக்கும்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Treadwell, T.J. (1873). Metallic Cartridges, (Regulation and Experimental,) as Manufactured and Tested at the Frankford Arsenal, Philadelphia, PA. Washington, DC: United States Government Printing Office. p. 9.
- ↑ https://repository.si.edu/bitstream/handle/10088/2410/SSHT-0011_Lo_res.pdf?sequence=2&isAllowed=y.
- ↑ http://firearmshistory.blogspot.co.uk/2010/05/cartridges-centerfire-cartridge.html
- ↑ https://books.google.co.uk/books?id=hLBTkNZ8U44C&pg=PA29&lpg=PA29&dq=Pottet+1829&source=bl&ots=bAuAgyFUnr&sig=lwx6LOx0kUn-4RklxEqxK5ozERY&hl=en&sa=X&ved=0CCIQ6AEwAGoVChMI4bOX5-yWyAIVxtEUCh1lnwQN#v=onepage&q=Pottet%201829&f=false
- ↑ https://books.google.co.uk/books?id=uPBCAQAAMAAJ&pg=PA83&dq=Gastinne+Cartridge&hl=en&sa=X&ved=0ahUKEwj3ysOLjrvRAhUBI8AKHUHHAcEQ6AEIHzAB#v=onepage&q=Gastinne%20Cartridge&f=false
- ↑ https://books.google.co.uk/books?id=hLBTkNZ8U44C&pg=PA29&lpg=PA29&dq=Pottet+1855&source=bl&ots=bAuAfCDZkt&sig=NRLT1YTtrlCtsF1AA2xFpQ8VEQY&hl=en&sa=X&ved=0CCIQ6AEwAGoVChMIhd6hzIeVyAIVhEIUCh2Z-AZk#v=onepage&q=Pottet%201855&f=false
- ↑ Davis, William C., Jr. Handloading (1981) National Rifle Association p.65
- ↑ Sporting Arms and Ammunition Manufacturers' Institute
- ↑ Lyman Ideal Hand Book No. 36. Lyman Gun Sight Corporation (1949) p.45.
- ↑ "PowerLabs Fulminate Explosives Synthesis". PowerLabs. பார்க்கப்பட்ட நாள் 2012-06-07.
- ↑ Lyman Ideal Hand Book No. 36 Lyman Gun Sight Corporation (1949) p.49
- ↑ Fairfield, A.P., CDR, USN Naval Ordnance (1921) Lord Baltimore Press pp.48-49