இதயவறை அகச்சவ்வு
இதயவறை அகச்சவ்வு இதயத்தின் நான்கு அறைகளின் உட்புறத்திலுள்ள சவ்வு ஆகும். இதன் அணுக்கள் முளையவியற்படியும் உயிரியல்படியும் குருதிக்குழல்களின் உட்சவ்வுகளை ஒத்ததாகும். இந்த அகச்சவ்வு அடைப்பிதழ்களையும் இதயவறைகளையும் பாதுகாக்கிறது.
இதயவறை அகச்சவ்வு Endocardium | |
---|---|
இதயத்தின் வலதுபக்க உட்புறம் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | என்டோகார்டியம் |
MeSH | D004699 |
TA98 | A12.1.05.001 |
TA2 | 3962 |
FMA | 7280 |
உடற்கூற்றியல் |
இதயவறை அகச்சவ்வு அதைவிட மிகவும் கன அளவுள்ள, இதயம் சுருங்கி விரிவதற்கு காரணமான இதயத்தசைக்கு கீழுள்ளது. இதயத்தின் வெளிப்புற அடுக்கு இதயவறை புறச்சவ்வு எனப்படுகின்றது. இது சீரச் சவ்வாலான இதய உறையினுள் உள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Brutsaert, D. L.; Andries, L. J. (1992-10-01). "The endocardial endothelium". The American Journal of Physiology 263 (4 Pt 2): H985–1002. doi:10.1152/ajpheart.1992.263.4.H985. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9513. பப்மெட்:1415782. https://pubmed.ncbi.nlm.nih.gov/1415782/.
- ↑ Tran, Dan B.; Weber, Carly; Lopez, Richard A. (2022), "Anatomy, Thorax, Heart Muscles", StatPearls, Treasure Island (FL): StatPearls Publishing, PMID 31424779, பார்க்கப்பட்ட நாள் 2023-02-23
- ↑ Milgrom-Hoffman, Michal; Harrelson, Zachary; Ferrara, Napoleone; Zelzer, Elazar; Evans, Sylvia M.; Tzahor, Eldad (2011). "The heart endocardium is derived from vascular endothelial progenitors". Development 138 (21): 4777–4787. doi:10.1242/dev.061192. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9129. பப்மெட்:21989917. பப்மெட் சென்ட்ரல்:3190386. https://pubmed.ncbi.nlm.nih.gov/21989917/.