இதுலிபு
இத்லிப் (Idlib) (அரபு மொழி: إدلب, சிரியாவின் வடமேற்கில் அமைந்த இட்லிப் மாகாணம் மற்றும் இத்லிப் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரம் ஆகும். இது சிரியாவின் அலெப்போ நகரத்திற்கு தென்மேற்கில் 59 கிமீ தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இத்லிப்
إدلب | |
---|---|
ஆள்கூறுகள்: 35°56′N 36°38′E / 35.933°N 36.633°E | |
நாடு | சிரியா |
மாகாணம் | இட்லிப் மாகாணம் |
மாவட்டம் | இத்லிப் |
மாநகராட்சிகள் | சிரியா |
ஏற்றம் | 500 m (1,600 ft) |
மக்கள்தொகை (2010 census[1]) | |
• மொத்தம் | 1,65,000 |
இனம் | இத்லிபியர்கள் |
இடக் குறியீடு | 23 |
புவிசார் குறியீடு | C3871 |
தட்பவெப்பம் | நடுநிலக்கடல் சார் வானிலை |
சிரிய உள்நாட்டுப் போரின் போது இத்லிப் நகரத்தை, 2011-இல் சிரியாவின் கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றியது. 2017-இல் இத்லிப் நகரத்தை மீண்டும் சிரியாவின் அரசுப் படைகள் கைப்பற்றியது.
2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இத்லிப் நகர மக்கள்தொகை 1,65,000 ஆகும். மக்களில் பெரும்பான்மையோர் சுன்னி முஸ்லீம்கள் ஆவார்.[2]இருப்பினும் அரபுக் கிறித்தவர்களும் சிறுபான்மையோராக வாழ்கின்றனர்.
இத்லிப் நகரத்தில் பண்டைய தொல்லியல் மேடுகள் உள்ளது. இங்கு கிமு 2350 காலத்திய பண்டைய எப்லா நகரம் விளங்கியது.[3]
வரலாறு
தொகுஆர்மீனிய இராச்சியத்தினர் சிரியா மீது போர் தொடுத்து இத்லிப் நகரத்தையும் கைப்பற்றினர். கிபி 64-இல் உரோமைப் பேரரசர் பாம்பே இத்லிப் நகரத்தை கைப்பற்றி சிரியாவை உரோமப் பேரரசுடன் இணைத்தார். பைசாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இத்லிப் நகரத்தை, ஏழாம் நூற்றாண்டில் அரேபியர்கள் கைப்பற்றினர்.
உதுமானியப் பேரரசு
தொகுஉதுமானியப் பேரரசு காலத்தில் கிபி 16 - 19-ஆம் நூற்றாண்டு வரை அலெப்போ மாகாணத்தின் ஒரு பகுதியாக இத்லிப் நகரம் விளங்கியது.[4]
சிரிய உள்நாட்டுப் போர்
தொகு2011 சிரிய உள்நாட்டுப் போரின் போது சிரிய கிளர்ச்சிப் படைகள் தற்காலிகமாக இத்லிப் நகரத்தை கைப்பற்றினர். 2012-இல் மீண்டும் சிரிய அரசுப் படைகள் இத்லிப் நகரத்தை கிளர்ச்சிப் படைகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியது.
2015-இல் இசுலாமிய அரசுப் படைகள் இத்லிப் நகரத்தை கைப்பற்றினர்.[5][6]
சூன் 2019-இல் இத்லிப் நகரத்தில் பெரும் இசுலாமிய அரசுப் படைகள் களம் கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்தது.[7]
சூலை 2019-இல் 20,000-30,000 வீரர்கள் கொண்ட அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் மற்றும் குர்திஸ்தான் கூட்டணிப் படைகள் இத்லிப் நகரத்தை சுற்றி வளைத்தது.[8]
26 அக்டோபர் 2019-இல் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினர், இத்லிப் நகரத்தின் வெளிபுறத்தில் உள்ள ஒரு பதுங்கு குழியில் பதுங்கியிருந்த இசுலாமிய அரசின் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதியை சுட்டுக் கொன்றனர்.[9][10][11]
தட்பவெப்பம்
தொகுஇத்லிப் நகரம் தட்பவெப்பம் கொண்ட நடுநிலக்கடல் சார் வானிலையைச் சேர்ந்தது. இந்நகரத்தில் கோடைகாலம் கடும் வெப்பம் கொண்டதாக இருக்கும். [12] குளிர்காலத்தில் கடுமையான குளிரும், மழையும் காணப்படும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், இத்லிப் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 20 (68) |
21 (70) |
26 (79) |
35 (95) |
37 (99) |
44 (111) |
42 (108) |
39 (102) |
38 (100) |
37 (99) |
29 (84) |
24 (75) |
44 (111) |
உயர் சராசரி °C (°F) | 9.9 (49.8) |
12.2 (54) |
16.7 (62.1) |
22.2 (72) |
28.0 (82.4) |
31.7 (89.1) |
33.2 (91.8) |
34.2 (93.6) |
31.8 (89.2) |
26.7 (80.1) |
18.7 (65.7) |
12.2 (54) |
23.13 (73.63) |
தினசரி சராசரி °C (°F) | 6.2 (43.2) |
7.7 (45.9) |
11.3 (52.3) |
15.8 (60.4) |
20.9 (69.6) |
25.0 (77) |
27.5 (81.5) |
27.8 (82) |
25.1 (77.2) |
20.0 (68) |
13.0 (55.4) |
8.1 (46.6) |
17.37 (63.26) |
தாழ் சராசரி °C (°F) | 2.5 (36.5) |
3.2 (37.8) |
6.0 (42.8) |
9.5 (49.1) |
13.8 (56.8) |
18.4 (65.1) |
21.0 (69.8) |
21.4 (70.5) |
18.4 (65.1) |
13.4 (56.1) |
7.4 (45.3) |
4.0 (39.2) |
11.58 (52.85) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -5 (23) |
-5 (23) |
1 (34) |
1 (34) |
8 (46) |
15 (59) |
18 (64) |
20 (68) |
13 (55) |
3 (37) |
-4 (25) |
-5 (23) |
−5 (23) |
பொழிவு mm (inches) | 97 (3.82) |
88 (3.46) |
59 (2.32) |
41 (1.61) |
18 (0.71) |
5 (0.2) |
0 (0) |
0 (0) |
6 (0.24) |
25 (0.98) |
41 (1.61) |
93 (3.66) |
473 (18.62) |
Source #1: Climate-Data.org (altitude: 432m)[12] | |||||||||||||
Source #2: Voodoo Skies for record temperatures[13] |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "مدينة إدلب السورية". aljazeera.net.
- ↑ Mroue, Bassem. "Syrian forces capture rebel stronghold near Turkey". The Salt Lake Tribune. Associated Press. 2012-03-13. Retrieved on 2012-03-13.
- ↑ Casule, 2008, p.56.
- ↑ Baedeker, 1912, p.376.
- ↑ "Gulf allies and 'Army of Conquest". Al-Ahram Weekly. 28 May 2015 இம் மூலத்தில் இருந்து 17 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417102743/http://weekly.ahram.org.eg/News/12392.aspx.
- ↑ Sherlock, Ruth (29 March 2015). "Thousands flee Syrian city Idlib after rebel capture". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
- ↑ "Russia prepares 'crushing' offensive in Syria". Washington Examiner. June 10, 2019.
- ↑ Review, Week in (July 19, 2019). "While the world focuses on Iran, a tragedy is 'unfolding before our eyes' in Idlib". Al-Monitor.
- ↑ https://www.cnn.com/2019/10/26/politics/white-house-trump-announcement-sunday/index.html
- ↑ https://www.ibtimes.com/isis-leader-al-baghdadi-dead-after-us-special-forces-raid-hideout-syria-sources-2854504
- ↑ https://www.washingtonpost.com/world/national-security/us-forces-launch-operation-in-syria-targeting-isis-leader-baghdadi-officials-say/2019/10/27/081bc257-adf1-4db6-9a6a-9b820dd9e32d_story.html
- ↑ 12.0 12.1 "Climate: Idlib - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-03.
- ↑ "Idlib, Syria". Voodoo Skies. Archived from the original on 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-03.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Baedeker, Karl (1912), Palestine and Syria, with routes through Mesopotamia and Babylonia and the island of Cyprus: handbook for travellers, K. Baedeker
- Casule, F. (2008), Art and History Syria, Casa Editrice Bonechi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8847601193
- Angelo, Ferrari (2009), Proceedings 4th International Congress on "Science and Technology for the Safeguard of Cultural Heritage in the Mediterranean Basin", vol. 1, Angelo Ferrari-CNR, Institute of Chemical Methodologies, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 889668031X
- Food and Agriculture Organization of the United Nations (1996). Citrus Pest Problems and Their Control in the Near East. Food & Agriculture Org. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9251033013.
- Inalcik, Halil (1997), An Economic and Social History of the Ottoman Empire, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521574552
- Porter, Josias Leslie (1858). A Handbook for Travellers in Syria and Palestine. Vol. 1. Murray.
வெளி இணைப்புகள்
தொகு- eIdleb The first complete website for Idleb news and services
- E.sy: The First Complete Governmental Online Services