இந்தியக் கணிமை

இந்திய மொழிகளைக் கொண்டு கணினியை இயக்குதல் இந்தியக் கணிமை எனப்படும். மொழிபெயர்த்தல், மென்பொருள்களின் இடைமுகங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல், கணினியில் இந்திய மொழிகளை எழுதுதல், எழுத்தை பேச்சாக்குதல், பேச்சை எழுத்தாக்குதல் என பல வகையான செயல்பாடுகளைச் செய்ய முடியும். இந்த செயல்களை பல தன்னார்வ அமைப்புகளும், இந்திய அரசு அமைப்புகளும் செய்கின்றன.

வரலாறு தொகு

தொடக்க காலத்தில், கணினியில் செயல்பாடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. கணினியில் இந்திய மொழிகளின் தேவை உணரப்பட்டது. எனவே, இந்திய மொழிகளை கணினியில் சேர்க்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்திய மொழிகளில் வெவ்வேறு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. இந்த எழுத்துருக்கள் இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இவை வேறுபட்டிருந்ததால், பெரும் சிக்கல் இருந்தது. பின்னர், யூனிக்கோடில் இந்திய மொழிகளின் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டன. யூனிக்கோடு வந்த பின்னர், பெரும்பாலான இணையதளங்கள் யூனிக்கோடில் உள்ள எழுத்துருக்களைப் பயன்படுத்தத் தொடங்கின. இதன் பிறகே, கணிமை முயற்சிகள் வலுப்பெற்றன.

பகுதி தொகு

தமிழ், இந்தி, வங்காளம், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, அசாமி, ஒரியா குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் அதிகளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

சிக்கல்கள் தொகு

இந்திய மொழிகளில் கணினியை செயற்படுத்த முடியாததற்கு சில காரணங்கள் உள்ளன. அந்த சிக்கல்கள்:

  • பொதுவான எழுத்துரு இல்லாமை
  • குறியாக்க முறை தரப்படுத்தப்படாதது
  • உள்ளீட்டு முறைகள் இல்லாதது

பின்னர், இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வந்துள்ளமையால், இந்திய மொழிகளில் கணிமைத் திறன் முன்னுக்கு வந்துள்ளது.

ஆதரவு வழங்குவோர் தொகு

அரசு தொகு

இந்திய மத்திய அரசு, இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக சில அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்புகள் பல தொழில்னுட்பங்களை ஆராய்ந்து, செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் இணையதளங்களில் இருந்தும் மென்பொருள்களை இறக்கிக் கொள்ளலாம்.

தன்னார்வ அமைப்புகள் தொகு

பல மாணவர்களும், ஆசிரியர்களும், தொழில்னுட்ப வல்லுனர்களும் இணைந்து தன்னார்வ அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். பெரும்பாலான குழுக்கள் பல இந்திய மொழிகளில் இயங்குகின்றன.

  • பாஷா இந்தியா: இந்திய மொழிகளில் கருவிகளை உருவாக்கும் நிறுவனம்.
  • இன்டுலினக்சு: லினக்சு இயங்குதளத்தில் இந்திய மொழிகளுக்கான கருவிகளை உருவாக்கும் அமைப்பு.

ஒவ்வொரு மொழிக்கும் தனித் தனி அமைப்புகள் உண்டு. அவற்றை கீழே காணவும்.

பணிகள் தொகு

எழுதுதல் / உள்ளீட்டுக் கருவிகள் தொகு

  • கணினிகளில்: முற்காலத்தில் வெவ்வேறு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. விண்டோசு, மேக், லினக்சு உள்ளிட்ட இயங்குதளங்களில் இந்திய மொழிகளுக்கு ஆதரவு உண்டு. பெரும்பாலான மென்பொருள்களில் இந்திய மொழிகளில் எழுத முடியும். இவை தவிர, இந்திய மொழிகளை எழுத சில முறைகள் உள்ளன. ஒலிபெயர்த்து எழுதுவது ஒரு முறை. குவெர்ட்டி வடிவில் எழுதுவது மற்றொரு முறை. இத்தகைய முறைகளில் எழுத, பல மென்பொருள்கள் கிடைக்கின்றன.
  • கைபேசிகளில்: நோக்கியா, சாம்சங் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கைபேசிகள் பலவற்றில் இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் இந்திய மொழிகளில் எழுதவும், இடைமுகங்களை பார்க்கவும் முடியும். ஆன்றாய்டு போன்ற இயங்குதளத்திலும் இந்திய மொழிகளை எழுத முடியும். பல தன்னார்வலர்கள் இதற்கான அப்ளிகேசன்களை உருவாக்கியுள்ளனர்.

மொழிபெயர்ப்பு தொகு

ஒரு மொழியில் உள்ள உரையை இன்னொரு மொழிக்கு மாற்றுவதை மொழிபெயர்ப்பு என்கிறோம். கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மொழிபெயர்ப்பு சேவையை வழங்குகின்றன. இதுதவிர, இந்திய அரசும் மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்கி வருகிறது. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் என்ற திட்டத்தின் மூலம், ஆங்கிலத்தில் உள்ள உரைகளை இந்திய மொழிகளுக்கு மாற்றப்படுகின்றன.

உரைதிருத்தி தொகு

உரையை எழுதும் பொழுது பிழை வந்தால், உரைதிருத்தி மென்பொருள் பிழைகளைச் சுட்டிக் காட்டும். இத்தகைய மென்பொருள்கள் தனியாகவோ, பிற மென்பொருட்களின் நீட்சியாகவோ கிடைக்கும்.

இடைமுகங்களின் உள்ளூர்மயமாக்கம் தொகு

நிரல் மொழிகள் தொகு

இதுவரையிலான நிரல் மொழிகள் (புரோகிராமிங்) ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றன. ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலும் நிரல்களை எழுதலாம். இந்திய மொழிகளைக் கொண்டு நிரல்கள் எழுதும் வசதியும் உண்டு.

எழுத்துரு மாற்றும் கருவிகள்== தொகு

ஒரு மொழி பல எழுத்துருக்களில் எழுதப்படலாம். தற்போதைய வழக்கில், பெரும்பாலான மொழிகள் யுனிகோடில் எழுதப்படுகின்றன.

எழுத்துப் பெயர்ப்பு கருவிகள் தொகு

ஒரு இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை மற்றொரு இந்திய மொழியில் படிக்கலாம். இதையே எழுத்துப்பெயர்ப்பு என்கிறோம்.

  • அட்சரமுக: இந்த கருவி பல இந்திய மொழிகளை ஏற்கிறது. ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு மாற்றி படிக்க முடியும்.

எழுத்தை பேச்சாக்குதல் தொகு

இந்திய மொழிகளில் எழுதப்பட்ட உரையை மனிதக் குரல் போல பேசுதலே இந்த கருவியின் நோக்கம். இது சோதனை முறையில் உள்ளது.

பேச்சை எழுத்தாக்குதல் தொகு

பதிவு செய்யப்பட்ட பேச்சை புரிந்துகொண்டு, அதற்கேற்ப உரையை எழுத்துவடிவில் தருதலே இதன் நோக்கம்.

பிரெய்லி முறைகள் தொகு

பிரெய்லி முறை என்பது கண்பார்வையற்றவர் ஒரு மொழியை படிக்க உதவும் முறை. இதில் எழுத்துகளுக்கு பதிலாக, உப்பிய புள்ளிகள் இருக்கும். புள்ளிகளை தடவிப் பார்த்து, படித்து புரிந்துகொள்வர். இந்திய மொழிகளுக்கென பிரெய்லி முறைகள் உள்ளன.

பல நூல்களை பிரெய்லி முறைக்கு மாற்றவும் மென்பொருள்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இணையதளங்களும் வலைப்பதிவுகளும் தொகு

மனமகிழ், செய்தி ஊடகங்கள் தங்கள் பதிவுகளை பல இந்திய மொழிகளில் வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒன் இந்தியா என்ற தளம், தன் செய்திகளை ஐந்திற்கும் அதிகமான இந்திய மொழிகளில் பதிவு செய்கிறது.

இந்திய மொழிகளில் எழுதப்பட்ட வலைப்பதிவுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. தமிழில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வலைப்பதிவுகள் உள்ளன. கூகுள் பிளாகர், மைக்ரோசாப்ட் வேர்டுபிரஸ் உள்ளிட்டவற்றில் அதிகளவிலான வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன.

களப் பெயர்கள் தொகு

டொமைன் எனப்படும் களப் பெயர்களை இந்திய மொழிகளிலும் தேர்வு செய்யலாம். தேவநாகரி, உருது, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட எழுத்துமுறைகளில் ".in" என்ற களப் பெயர் கிடைக்கும்.

ஐ.டி.என் பெயர் டி.என்.எஸ் பெயர் நாடு எழுத்துமுறை
xn--h2brj9c .भारत இந்தியா தேவநாகரி (இந்தி, சமசுகிருதம், மராத்தி, நேபாளி, கொங்கணி)
xn--mgbbh1a71e بھارت. இந்தியா உருது
xn--fpcrj9c3d .భారత్ இந்தியா தெலுங்கு
xn--gecrj9c .ભારત இந்தியா குஜராத்தி
xn--s9brj9c .ਭਾਰਤ இந்தியா பஞ்சாபி
xn--xkc2dl3a5ee0h .இந்தியா இந்தியா தமிழ்
xn--45brj9c .ভারত இந்தியா பெங்காலி
xn--clchc0ea0b2g2a9gcd .சிங்கப்பூர் சிங்கப்பூர் தமிழ்
xn--xkc2al3hye2a .இலங்கை இலங்கை தமிழ்
xn--54b7fta0cc .বাংলা பங்களாதேஷ் பெங்காலி

இயங்குதளங்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

தொடர்புடைய இணையதளங்கள் தொகு

அரசின் இணையதளங்கள்
தன்னார்வல அமைப்புகளின் இணையதளங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கணிமை&oldid=3233848" இலிருந்து மீள்விக்கப்பட்டது