இந்தியக் கல்லூரிகளின் கலை மற்றும் கலாச்சார விழா

கல்லூரிகளில் நடைபெறும் கலை விழா

இந்தியக் கல்லூரிகளின் கலை மற்றும் கலாச்சார விழா என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கலாச்சார நிகழ்ச்சியின் பொதுப்பெயர் ஆகும். இது கல்லூரி நிர்வாகத்தாலோ அல்லது மாணவர் சங்கங்களின் நிர்வாகத்தாலோ நடத்தப்படும். அந்தந்த கல்லூரிகள்[1] மட்டுமே பங்குபெறும் மற்றும் பிற கல்லூரிகள் [2] மாணவர்களும் பங்கு பெறும் நிகிழ்ச்சி என பல வகைகளில் இந்த கலை விழாக்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னரே பல போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த கலை நிகழ்ச்சிகளின் போது பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.[3] இந்த விழாக்களில் அந்தந்த மாநிலங்களை சார்ந்த விளையாட்டு வீரர்கள் சாதனையாளர்கள் பிரபலங்கள் நடிகர்கள் எழுத்தாளர்கள் போன்றவர்களை அழைத்து கௌரவிப்பதும் உண்டு.[4] இந்த விழாக்கள் பொதுவாகவே பல்வேறு நிறுவனங்களின் நிதிஅமைப்பை கோரி அதன் மூலமும் [5] ஒருங்கிணைக்கப்படுகிறது. சமீப காலமாக கூட்டு நிதி நல்கை எனப்படும் முறையை பின்பற்றியும் சில கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.[6]

பொதுவான நிகழ்ச்சி வடிவம்

தொகு

பெரும்பாலான கல்லூரி கலாச்சார நிகழ்ச்சிகள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். இந்த கலாச்சார விழாக்களின் நிகழ்வுகளை பொதுவாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

இலக்கிய நிகழ்வுகள்

தொகு

இந்த வகை நிகழ்ச்சிகளில் பொதுவாக வினாடி வினாக்கள் , வார்த்தை விளையாட்டுகள் , கட்டுரை எழுதுதல், பேச்சுப்போட்டி மற்றும் சில வகையான பட்டிமன்றம் அல்லது விவாத நிகழ்ச்சிகள் அடங்கும். இதன்மூலம் மாணவர்கள் அவர்களின் இலக்கிய திறன், சொற்பொழிவுத்திறன் மற்றும் விரைவாக யோசிக்கும் திறன் போன்றவைகள் அதிகரிக்கலாம்.

கலாச்சார நிகழ்வுகள்

தொகு

இசை , நடனம் , பாடல்,மற்றும் நாடகம் போன்ற போட்டிகள் இதில் அடங்கும். இவற்றில் மாணவர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

தொழில்முறை நிகழ்வுகள்

தொகு

மாதிரி சந்தை, கைவினைப் பொருளர விற்பனை போன்ற தொழில்ரீதியான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் பொழுதுபோக்கோடு இணைந்து தொழில் சூட்சுமங்களை அறிந்து கொள்ள அரங்கேற்றப்படலாம்

விளையாட்டு நிகழ்வுகள்

தொகு

அனைத்து வெளிப்புற (கால்பந்து, கைபந்து போன்றவை) மற்றும் உட்புற (காணொளி, பலகைகள் பயன்படுத்தபடும்) விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் தங்கள் உடல்திறனை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படலாம்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு