இந்தியச் சிறுதானிய வலையமைப்பு
இந்தியச் சிறுதானிய வலையமைப்பு (Millet Network of India) என்பது சிறுதானிய விவசாயிகளை ஆதரிக்கும் அமைப்பாகும். பாரம்பரிய பயிரின் குணங்களை உணர்ந்த நூறு பெண்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.[1] நெல் போன்ற உணவுப் பயிர்களை ஊக்குவிக்கும் அரசாங்க மானியங்களின் அநீதியை எடுத்துக்காட்டி, கிராம விவசாயிகளுக்குக் குறைந்த நீர் பயன்பாடு மற்றும் கரிம உரங்களுடன் சிறுதானியங்களைப் பயிரிட இந்த குழு உதவியுள்ளது. இந்த அமைப்பின் சேவைக்காக நாரி சக்தி விருது மற்றும் பூமத்திய ரேகை விருது வழங்கப்பட்டுள்ளது.
பின்னணி
தொகுசிறுதானியங்கள் இந்தியாவில் பாரம்பரிய தானியமாகும். மேலும் இந்தியாவின் இந்தியச் சிறுதானிய வலையமைப்பு சிறுதானியங்களைப் பயிரிட ஊக்குவிக்கிறது. ஏனெனில் இப்பயிர் மற்ற பயிர்களை விடக் குறைவான தண்ணீரில் வளரும். தன்மையுடையன. இந்தியாவில் மானியம் பெறும் அரிசியுடன் ஒப்பிடும்போது இது குறிப்பாகத் தெரிகிறது. சிறுதானியங்கள் வளம் குறைந்த மண்ணிலும் வளரக்கூடியன. இது சில குறிப்பிட்ட நோய்களால் மட்டுமே பாதிக்கப்படுகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட பயிரை நீண்ட காலம் சேமித்து வைத்திருக்க முடியும்.[2] சிறுதானிய சாகுபடியில் இயற்கை உரங்கள் இடுவதன் மூலம் நன்கு பயன்பெறலாம். ஆனால் பல விவசாயிகள் இன்னும் இதைப் பயிரிட முன்வருவதில்லை. குறைந்த பயன்பாடு இருப்பதால் இதை இவர்கள் பயிரிடுவதில்லை. இந்தியாவில் அரிசியே மிகவும் பிரபலமாக உள்ளது. இதனால் அரசாங்கமும் நெல் சாகுபடிக்கு மானியம் வழங்குகின்றது.[2]
2016ஆம் ஆண்டில், இந்த வலையமைப்பு பிரச்சாரம் மூலம் அரசாங்கத்தைச் சிறுதானியம் பயிரிட வற்புறுத்திக் கொண்டிருந்தது. ஏழைகளுக்குப் பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மானிய விலை தானியங்களில் சிறுதானியமும் சேர்க்கப்படும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்பினர். ஒரு மாத கால பிரச்சாரம் உலக உணவு நாளன்று முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது.[3]
2018ஆம் ஆண்டுக்குள், இந்த வலையமைப்பில் 5,000 உறுப்பினர்கள் சேர்ந்தனர்.[1] மேலும் மொகுலம்மா 2018ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று நாரி சக்தி விருதினைப் பெற்றார்.[4] இது பெண்களுக்கான உயரிய குடிமகள் விருதாகும். இது பெண்களுக்கான அதிகாரமளிப்புக்கான சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது. இந்த விருது மார்ச் 8, 2018 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தால் வழங்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் இருந்து 39 விருது பெறுநர்களில் இந்த அமைப்பும் ஒன்று.[5] விருதினைப் பெற்ற மொகுலம்மாவுக்கு வயது 36. இவரது கணவர் மற்றும் தாயார் இறந்த பிறகு முழுநேர விவசாயியாகிவிட்டார் மொகுலம்மா. இவரது மாமியார் தான் இவரைச் சிறுதானிய வலையமைப்பில் ஈடுபடுத்தினார். மேலும் இவர் கரிம முறையில் சிறுதானியம் பயிரிடுவதில் பெற்ற வெற்றிக்காக அனைவரது கவனத்தையும் பெற்றார். பூச்சி கட்டுப்பாடு மற்றும் மண்புழு உரம், உரம் மற்றும் பஞ்சகவ்யா ஆகியவற்றின் கரிம பயன்பாடு குறித்த ஆலோசனைகளை இந்த வலையமைப்பு வழங்குகிறது. 2019ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) பூமத்திய ரேகை விருதை இவருக்கு வழங்கியது. இதனைப் பெற நியூயார்க் சென்றார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 PIB India (8 March 2018). "Nari Shatki Puraskar citation". PIB India via Twitter. பார்க்கப்பட்ட நாள் 21 February 2021.
- ↑ 2.0 2.1 Nagaland, Anne Pinto-Rodrigues in (2020-02-25). "Against the grain: why millet is making a comeback in rural India". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
- ↑ Kurmanath, K. V. "Millet Network launches national campaign to include grain in PDS". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
- ↑ "Millet Network of India's success story". 2018-03-10. https://www.thehindu.com/news/cities/Hyderabad/sharing-their-success-story/article23022979.ece.
- ↑ "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'". 2018-03-09. http://www.newindianexpress.com/nation/2018/mar/09/international-womens-day-president-kovind-honours-39-achievers-with-nari-shakti-puraskar-1784159.html.
- ↑ Roy, Subir. "How millet farming empowers women". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.