இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு

இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (Tribal Co-operative Marketing Development Federation (TRIFED) என்பது இந்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பாகும். இது பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1984 சட்டத்தின்படி, சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. பின்னர் இவ்வமைப்பு பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.[1][2] தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தை மேம்படுத்தும் வகையில், பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதுவதற்கு 1999ம் ஆண்டு முதல் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்கத் தொடங்கியது.[3][1][2][3]

பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED)
துறை மேலோட்டம்
அமைப்பு1987
தலைமையகம்புது தில்லி
அமைச்சர்
அமைப்பு தலைமைகள்
  • ரமேஷ் ரத்வா, பெருந்தலைவர்
  • பபித்ரா குமார் கன்வர், துணைப்பெருந்தலைவர்
  • கீதாஞ்சலி குப்தா, மேலாண்மை இயக்குநர்
மூல அமைப்புபழங்குடியினருக்கான அமைச்சகம், இந்திய அரசு
வலைத்தளம்https://trifed.tribal.gov.in/

செயல்பாடுகள்

தொகு

சிறு வனப் பொருட்களின் (MFP) வர்த்தகத்தை நிறுவனமயமாக்குதல் மற்றும் இந்தியப் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் உபரி விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலையை வழங்குதல் ஆகியவற்றின் முக்கிய நோக்கத்துடன் இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு 1987ல் நிறுவப்பட்டது மற்றும் 1988ல் செயல்பாட்டிற்கு வந்தது. இது சிறு வனப் பொருட்களின் நிலையான அறுவடையை உறுதி செய்கிறது. இது இடைத்தரகர்களிடமிருந்து பழங்குடியினரைக் காப்பாற்றுகிறது. பழங்குடியினர் சிறு வனப் பொருட்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து, அதே நேரத்தில் இறுதி பயனர்களுக்கு அதிக விலையில் அதை வழங்குகிறார்கள். இந்த சிறு வனப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டால், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மூலம் பழங்குடியினருக்கு போதுமான இழப்பீடு வழங்குவது இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் கடமையாகும். இது பழங்குடியினருக்கு அவர்களின் தயாரிப்புகளின் நியாயமான விலை பற்றிய தகவலை வழங்குகிறது மற்றும் அவற்றை பேரம் பேச உதவுகிறது.[2] பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைகளை ஆதரிப்பதற்காக "ஆதி மஹோத்சவ்" என்ற பழங்குடி கலை மற்றும் கைவினைக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது; நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கலை ஆர்வலர்களால் வாங்கப்படுகின்றன.[4]

முன்முயற்சிகள்

தொகு

வன வளத் திட்டம் (வன் தன் யோஜனா)

தொகு

வான் தன் யோஜ்னா 14 ஏப்ரல் 2018 அன்று தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பிஜப்பூரில் ஒரு முன்னோடி திட்டமாகவும்; சத்தீஸ்கரில் வன் தன் விகாஸ் கேந்திரா ஒன்று முப்பது பழங்குடியினரைக் கொண்ட பத்து சுய உதவிக் குழுக்களுக்கு சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டது. இதை அமைப்பதற்காக செலவிடப்பட்ட மொத்த செலவான இருபத்தைந்து லட்சத்தில் 25% மாநில அரசால் ஈடுசெய்யப்படுகிறது.[5] எனினும்; இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு 20 சிறு வனப் பொருட்களை சேகரிக்கும் ஒரு கேந்திராவின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 300 ஆக இருக்கும்.[6]

இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் பழங்குடியினர் விவகார அமைச்சகம், பழங்குடியினர் சேகரிப்பாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் முதன்மை செயலாக்கம் மற்றும் மதிப்பை கூட்டுவதன் மூலம் பழங்குடியினரின் மூலப்பொருட்களின் சந்தைத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படை நோக்கத்துடன் நாட்டில் 30,000 மையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[7] சூன் 2020 நிலவரப்படி, நாட்டில் 18,000 சுய உதவிக் குழுக்கள் மூலம் 3,60,000 பேர் பணிபுரியும் 1,205 பழங்குடி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது. நாகாலாந்தின் லோங்லெங் மாவட்டத்தை போன்ற சில முக்கியமான வெற்றிகளை இந்தத் திட்டம் உருவாக்கியுள்ளது. அங்கு பழங்குடியினர் தங்களுடைய தனித்துவமான மலை துடைப்பப் புல்லை கிலோ ஒன்றுக்கு ₹7க்கு விற்றனர். ஆனால் வன் தன் யோஜ்னாவின் கீழ் "வன் தன் கேந்திரா" மூலம் பயிற்சி பெற்ற பிறகு, அவர்கள் ஒரு விளக்குமாறுக்கு ₹60 சம்பாதித்தனர். இது அவர்களின் வருமானத்தை அதிகரித்தது.[8]

பழங்குடியினர் பகுதிகளில் உள்ள மோசமான சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பும் அவர்களின் தயாரிப்புகளுக்கு நேரடி சந்தை அணுகலை கடினமாக்கியது. இந்த சவால்களை கருத்தில் கொண்டு பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் கூட்டமைப்பு ஆகியவை 2013-14 இல் சிறு வனப் பொருட்கள் திட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) அறிமுகப்படுத்தியது.[9] மே 2020 இல், இத்திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் தொடங்கப்பட்டன. மேலும் 23 மரமற்ற வனப் பொருட்கள் மாநில அமலாக்க முகமையால் (SIA) வாங்கப்படும் சிறு வனப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.[10]

"வான் தன் யோஜ்னா" பின்னணியில்; பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த கூட்டமைப்பு ஆகஸ்ட் 2020ல் உலர் பழம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கரில் உள்ள ஜெகதல்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் ராய்கட் ஆகிய இடங்களில் வனப் பொருட்களின் மதிப்பு கூட்டுவதற்காக மூன்றாம் நிலை மதிப்பு கூட்டல் அலகுகளை அமைக்க திட்டமிடபட்டது. நீர்தேக்கங்களில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவது இக்கூட்டமைப்பின் நோக்கமாகும்.[11]

பழங்குடியினருக்கான தொழில்நுட்பம் திட்டம்

தொகு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இக்கூட்டமைப்பு மார்ச் 2020ல் "பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தொழில் பயிற்சி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 30 நாள் பயிற்சியின் மூலம் பழங்குடியின வனப் பொருட்களை சேகரிப்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "About TRIFED". TRIFED. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  2. "TRIFED Reiterates its commitment towards transformation of tribal lives on the occasion of its Thirty-Third Foundation Day". indiaeducationdiary.in. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  3. "TRIFED: Meaning and Objectives". Jagran Josh. 29 March 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.

வெளி இணைப்புகள்

தொகு