இந்தியாவில் காற்றுத் திறன்

(இந்தியாவின் காற்றுத் திறன் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவில் காற்றுத் திறன் பயன்பாடு 1990களில் துவங்கி குறுகிய காலத்திலேயே உலகின் ஐந்தாவது இடத்தை எட்டி உள்ளது.[1] 2009-11 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிவீதம் ஏனைய முதல் நான்கு நாடுகளை விடக் கூடியதாகும்.

இந்தியா உலகில் நிறுவப்பட்டுள்ள காற்றுத் திறன் மின் திறனளவில் ஐந்தாவது மிகப் பெரும் உற்பத்தியாளராக விளங்குகிறது.[2]தமிழ்நாட்டின் கயத்தாறில் இயங்கும் காற்றுப் பண்ணை.

மார்ச்சு 31, 2011 நிலவரப்படி காற்றுத் திறனால் கிடைக்கும் மின்சாரத்தின் நிறுவப்பட்டத் திறனளவு 17967 மெகாவாட்களாக உள்ளது.[3][4] இது பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்தும் (7134 மெ.வா),[5] குசராத்திடமிருந்தும் (2,884 மெ.வா) கிடைக்கிறது. மேலும் மகாராட்டிரம் (2310.70 மெ.வா), கர்நாடகம் (1730.10 மெவா), இராசத்தான் (1524.70 மெ.வா), மத்தியப் பிரதேசம் (275.50 மெ.வா), ஆந்திரப் பிரதேசம் (200.20 மெ.வா), கேரளம் (32.8 மெ.வா), ஒரிசா (2 மெ.வா) [6][7] மேற்கு வங்காளம் (1.1 மெ.வா) மாநிலங்களும் மற்றும் பிற மாநிலங்களும் (3.20 மெ.வா) வெவ்வேறு அளவுகளில் பங்கேற்கின்றன.[8] 2012ஆம் ஆண்டில் கூடுதலாக 6,000 மெ.வா காற்றுத்திறன் மின்சாரம் நிறுவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.[9] இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறனளவில் 6% காற்றுத் திறனால் பெறப்படுகிறது.

தமிழ்நாட்டில் காற்றுத் திறன் பயன்பாடு (7134 மெகாவாட்)

தொகு
 
முப்பந்தலில் இயங்கும் ஓர் காற்றுப் பண்ணை.

7000 மெகாவாட் உயர்மட்ட காற்றுத்திறன் மின்னுற்பத்தியைக் கொண்ட தமிழ்நாடு தெற்காசியாவின் காற்றுத்திறன் மையங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் மொத்த காற்றுத் திறன் உற்பத்தியில் 40% தமிழகத்திலிருந்து பெறப்படுகிறது.[5] காற்றுப் பண்ணைகள் உள்ள முதன்மை மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் திகழ்கின்றன.

சான்றுகோள்கள்

தொகு
  1. "World Wind Energy Report 2008". Report. "World Wind Energy Report 2008" பரணிடப்பட்டது 2009-02-19 at the வந்தவழி இயந்திரம்
  2. "India to add 6,000 mw wind power by 2012; but below target". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
  3. "Indian Wind Energy and Economy". Indianwindpower.com. Archived from the original on 2012-09-03. பார்க்கப்பட்ட நாள் 2012-09-17.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  5. 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  6. "Mega power plants in AP and wind power in Orissa". Projectsmonitor.com. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
  7. "National Thermal Power Corporation to Develop Renewable Energy Projects in Orissa, India". Azocleantech.com. 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
  8. "INDIAN WIND TURBINE-Installed Wind Capacity". Indianwindpower.com. Archived from the original on 2010-10-27. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
  9. India to add 6,000 mw wind power by 2012; but below target

வெளி இணைப்புகள்

தொகு