இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்

இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள் என்பது பசுப் பாதுகாப்பு இயக்கத்தினரால் பசுவை வியாபாரத்திற்கு அழைத்து செல்பவர்களையும் மாட்டு இறைச்சி வைத்து இருப்பவர்களையும் கொடுமைப்படுத்துவது அல்லது கொல்வதாகும்.[1][2][3]

பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகளில் இந்துத்துவா குழுவினாரால் முசுலிம்களும், தலித்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பசுப் பாதுகாப்பு இயக்கங்கள் தொகு

பசுப் பாதுகாப்பு இயக்கங்கள் என்பது தனிப்பட்ட இயக்கம் கிடையாது. பசுவை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே சில குழுக்கள் பசுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் செயல்படுகின்றன. பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.[4]

பசு தொடர்பான வன்முறைகள் தொகு

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் தொகு

இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு பின் 1890 ஆம் ஆண்டுகளில் பசு பாதுகாப்பு பெயரிலான வன்முறைகள் நடைபெற துவங்கின.[5]

 • 1893 இல் முசுலிம் பண்டிகையான பக்ரீத்திற்கு மாடு அறுத்ததற்காக பஞ்சாப், வங்காளம், மும்பை போன்ற இடங்களில் வன்முறை பரவியது. இந்துக்களின் பசு பாதுகாப்பு குழுவினரால் பஞ்சாப்பில் 100 நபர்கள் கொல்லப்பட்டனர்.[6][7]
 • 1909 இல் கொல்கத்தாவில் முசுலிம் ஒருவர் மாடு அறுத்ததை தொடர்ந்து பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கினர்.[8]
 • 1911 இல் முசாபர்பூர் நகரில் முசுலிம் ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கி முசுலிம்களின் பள்ளிவாசலை சேதப்படுத்தினர்.[8]
 • 1912 இல் பைசாபாத் நகரில் மவ்லவி ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கினர்.[8]
 • 1916 மற்றும் 1917 ஆகிய ஆண்டுகளில் முசுலிம்களின் பக்ரீத் பண்டிகையின் போது பாட்னா நகரில் இந்துத்வா பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறை செய்தனர். ஆங்கில ஆட்சியாளர்களின் பதிவு படி 25,000 இந்துத்வா குழுக்கள் முசுலிம்களை தாக்கினர். வன்முறை பரவி பலர் கொல்லப்பட்டனர்.[8]
 • 1917 க்கும் 1928 க்கும் இடையில் பசு பாதுகாப்பு தொடர்பான பல வன்முறை நிகழுவுகள் அடக்கப்பட்டுள்ளன.[8]

சுதந்திர இந்தியாவில் வன்முறைகள் தொகு

 • 1966 ஆம் ஆண்டு தில்லியில் பசுவை கொல்வதை தடுக்க நடந்த போராட்டத்தின் போது 8 பேர் கொல்லப்பட்டனர்.[9]
 • 2002 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் 5 தலித் இளைஞர்கள் விசுவ இந்து பரிசத் என்ற இந்துத்வா அடிப்படை குழுவினரால் கொல்லப்பட்டனர். 5 தலித் இளைஞர்கள் பசுவைக் கொன்றனர் என்று பரப்பப்பட்ட வதந்தியால் இக்கலவரம் ஏற்பட்டது.[10][11][12]
 • 2010 ஆம் ஆண்டு சிம்லாவில் பசு பாதுகாப்பு குழுவினர் மாடு அறுத்ததாகக்கூறி முசுலிம்களின் கடைகளை தீக்கிரையாக்கினர்.[13]
 • 2012 ஆம் ஆண்டு ஐதராபாத் நகரில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகம் வளாகத்தில் சில தலித் மாணவர்கள் மாட்டு இறைச்சியுடன் உணவு திருவிழா நடத்தினர். இதை இந்துத்துவா கொள்கையுடைய மாணவர்கள் எதிர்த்தனர்.[14] பின்பு நடந்த கலவரத்தில் ஒரு மாணவர் கத்தியால் குத்தக்பட்டார். 5 மாணவர்கள் காயமடைந்தனர்.[15]

2014 ஆம் ஆண்டுக்குப்பின் வன்முறைகள் தொகு

பசுப் பாதுகாப்பு வன்முறைகள் இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகரித்துள்ளது. பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பின் இது மேலும் அதிகரித்துள்ளது.[16][17][18]

 • 2015 ஆம் ஆண்டு மே 30ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.[19]
 • 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்திரியில் 70 வயதான முகம்மது அக்லக் என்ற முதியவரை பசுப் பாதுகாவலர்கள் அடித்துக் கொன்றார்கள்.[19]
 • 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.[19]
 • 2016 ஜனவரி 13ல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.[19]
 • 2016 ஆம் ஆண்டு மார்ச் 18ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி 3 முசுலிம் இளைஞர்களை பசு பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிட்டு படுகொலை செய்தனர்.[19] [20][21][22]
 • 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார்.[19]
 • 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.[19]
 • 2016 ஆம் ஜூன் 10ம் தேதி ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் 2 பேரை மாட்டு சாணத்தை உண்ண வைத்தனர்.[19]
 • 2016 ஆம் ஆண்டு ஜூலை 15ல் குஜராத்தில் உள்ள ஊனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர்.[19]
 • 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுவின் பெயரால் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.[19]
 • 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ல் ஹரியானா மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.[19]
 • 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டனர்.[19]
 • 2017 ஆம் ஆண்டு ஜூன் 23 தேதி தில்லி அருகில் மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறி 3 பேர் தாக்கப்பட்டனர். ஜுனைத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.[23]
 • 2017 ஜுன் 28ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமியரின் வீட்டின் அருகில் பசுவின் தலை கிடந்தது என்று கூறி அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.[19][24]

சமூக ஆர்வலர்களின் கருத்துகள் தொகு

2010 ஆண்டு முதல் மாட்டிறைச்சி விவகாரத்தில் 28 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 124 பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பசுவின் பெயரால் மனித உயிர்களை பலி கொல்வதை உடனடியாக இந்துத்துவ அமைப்புகள் நிறத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[19][25] நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.[26]

மேற்கோள்கள் தொகு

 1. "Cow vigilantes who are threatening Modi's grip on power".
 2. "INDIA'S PRIME MINISTER MODI STANDS BY AS COW VIGILANTES TERRORIZE INDIA". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
 3. "பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வது ரத்தத்தை கொதிக்க வைக்கிறது: பிரியங்கா காந்தி". மாலை மலர். 02 சூலை 2017. Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 02 சூலை 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 4. Mark Doyle (2016). Communal Violence in the British Empire: Disturbing the Pax. Bloomsbury Academic Publishing. பக். 249 note 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4742-6826-4. https://books.google.com/books?id=QK2tDAAAQBAJ. 
 5. Mark Doyle (2016). Communal Violence in the British Empire: Disturbing the Pax. Bloomsbury Academic Publishing. பக். 157–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4742-6826-4. https://books.google.com/books?id=QK2tDAAAQBAJ. 
 6. Yang, Anand A. (1980). "Sacred Symbol and Sacred Space in Rural India: Community Mobilization in the “Anti-Cow Killing” Riot of 1893". Comparative Studies in Society and History (Cambridge University Press) 22 (04): 576–596. doi:10.1017/s0010417500009555. 
 7. Judith E. Walsh (2006). A Brief History of India. Infobase Publishing. பக். 161–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4381-0825-4. https://books.google.com/books?id=iekF9X3OwwMC. 
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 Gene R. Thursby (1975). Hindu-Muslim Relations in British India: A Study of Controversy, Conflict, and Communal Movements in Northern India 1923-1928. BRILL Academic. பக். 80–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-04380-2. https://books.google.com/books?id=abcfAAAAIAAJ&pg=PA80. 
 9. Soutik Biswas. "Why the humble cow is India's most polarising animal". BBC News. http://www.bbc.com/news/world-asia-india-34513185. 
 10. "World Report 2003 - India". Human Rights Watch.
 11. "India: International Religious Freedom Report 2004; BUREAU OF DEMOCRACY, HUMAN RIGHTS, AND LABOR.". U.S. Department of State. https://www.state.gov/j/drl/rls/irf/2004/35516.htm. 
 12. "India puts bar on faith conversion: Dalits’ dilemma". Dawn (newspaper). 30 October 2002. https://www.dawn.com/news/64085. 
 13. "Shimla village tense after ‘cow slaughter’". http://archive.indianexpress.com/news/shimla-village-tense-after--cow-slaughter-/579273/. 
 14. "Shimla village tense after ‘cow slaughter’". http://archive.indianexpress.com/news/shimla-village-tense-after--cow-slaughter-/579273/. 
 15. "`Beef festival` turns Osmania into battlefied". http://zeenews.india.com/news/andhra-pradesh/beef-festival-turns-osmania-into-battlefied_770172.html. 
 16. "Holy Cow: As Hindu Nationalism Surges In India, Cows Are Protected But Minorities Not So Much". http://www.huffingtonpost.in/the-conversation/holy-cow-as-hindu-nationalism-surges-in-india-cows-are-protect_a_22059916/. 
 17. Amrit Dhillon. "Cow vigilantes take to the streets as India's Hindu leaders accused of 'right-wing' muscle flexing". The Sydney Morning Herald. http://www.smh.com.au/world/cow-vigilantes-take-to-the-streets-as-indias-hindu-leaders-accused-of-rightwing-muscle-flexing-20160910-grdbje.html. 
 18. "India: 'Cow Protection' Spurs Vigilante Violence".
 19. 19.00 19.01 19.02 19.03 19.04 19.05 19.06 19.07 19.08 19.09 19.10 19.11 19.12 19.13 "7 ஆண்டுகளில்.. பசுவின் பெயரால்.. 28 கொலைகள், 124 பேர் படுகாயம்.. 30 இடங்களில் வன்முறை: போதுமா?". தமிழ் ஒன் இந்தியா. 1 சூலை 2017. http://tamil.oneindia.com/news/tamilnadu/in-the-name-cow-28-murder-124-injured-more-than-30-violence-288082.html. 
 20. "Muslim Cattle Traders Beaten To Death In Ranchi, Bodies Found Hanging From A Tree". Huffington Post India. http://www.huffingtonpost.in/2016/03/19/cattle-traders-killed-ranchi_n_9504182.html. 
 21. "Another Dadri-like incident? Two Muslims herding cattle killed in Jharkhand; five held" (in en). Zee News. 19 March 2016. http://zeenews.india.com/news/jharkhand/another-dadri-like-incident-two-muslims-herding-cattle-killed-in-jharkhand_1867361.html. 
 22. "5 held in Jharkhand killings, section 144 imposed in the area". News18. 19 March 2016. http://www.ibnlive.com/news/india/5-held-in-jharkhand-killings-section-144-imposed-in-the-area-1218536.html. 
 23. "ஹரியாணா ரயிலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை; இரு சகோதரர்கள் காயம்". தமிழ் இந்து. 23 சூன் 2017. http://m.tamil.thehindu.com/india/ஹரியாணா-ரயிலில்-இளைஞர்-கத்தியால்-குத்திக்-கொலை-இரு-சகோதரர்கள்-காயம்/article9735197.ece. [தொடர்பிழந்த இணைப்பு]
 24. "Muslim dairy owner beaten up, house set on fire in Jharkhand on suspicion of cow slaughter" (in en). Hindustan Times. 28 June 2017. http://www.hindustantimes.com/india-news/muslim-dairy-owner-beaten-up-house-set-on-fire-in-jharkhand-on-suspicion-of-cow-slaughter/story-pX2HEA3mWercRLn5DqHPzL.html. பார்த்த நாள்: 29 June 2017. 
 25. "Protests held across India after attacks against Muslims". Reuters. 28 June 2017. http://in.reuters.com/article/india-protests-muslims-beef-idINKBN19J2BV. பார்த்த நாள்: 29 June 2017. 
 26. "24 Out Of The 28 People Killed In The Name Of Cow Protection Since 2010 Were Muslims". India times. 28 June 2017. http://www.indiatimes.com/news/india/24-out-of-the-28-people-killed-in-the-name-of-cow-protection-since-2010-were-muslims-324756.html. பார்த்த நாள்: 28 June 2017.