இந்திய-அமெரிக்க உறவுகள்

இந்திய-அமெரிக்க உறவுகள் (India–United States relations) என்பது குடியரசு இந்தியாவிற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே உள்ள பன்னாட்டு உறவை குறிக்கும். அணிசேரா இயக்கத்தை உருவாக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இந்தியா, பனிப்போரின் பொழுது சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டினுடனான உறவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. 1991-இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு இந்தியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளினுடனான தனது வெளியுறவுக் கொள்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக இந்திய வர்த்தகம், பொருளாதாரம், கணினி நிறுவனங்களின் இணைப்பு ஆகியவை மேம்படத் தொடங்கியது. மேலும் இந்தியாவின் அணுசக்தி திட்டம் பற்றியான தனது கொள்கையை அமெரிக்கா மாற்றிக்கொண்டது. தற்காலத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கலாசாரம், ராணுவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மிகுந்த பங்களிப்புகளில் ஈடுபடுகின்றன[1][2][3]

இந்திய-அமெரிக்க உறவுகள்
India மற்றும் USA நாடுகள் அமையப்பெற்ற வரைபடம்

இந்தியா

ஐக்கிய அமெரிக்கா
வெள்ளை மாளிகையில் ஒபாமா-மன்மோகன் சிங் சந்திப்பு

கேல்லப் என்ற நிறுவனம் நடத்திய பொது கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்கள் உலகில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவை ஏழாவது அபிமான நாடாக கருதுகின்றனர்.[4] 2012 ஆம் ஆண்டின்படி, அமெரிக்காவில் பயிலும் பன்னாட்டு மாணவர்களுள், இந்திய மாணவர்கள் இரண்டாவது பெரிய குழுமமாகும்.[5]

வரலாறு

தொகு

1945 இற்கு முன்பு வரை

தொகு

இக்காலத்தில் பெரிதாக ஏதும் தொடர்பு இல்லை. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் என்றால் சீக்கிய விவசாயிகள் அமெரிக்காவில் குடியேறியது, சுவாமி விவேகானந்தர் உலக மதங்களின் கூட்டமைப்பில் யோகாவையும் வேதாந்தத்தையும் அறிமுகப்படுத்தியது ஆகியவையாகும். [6] [7]

பிரபல எழுத்தாளர்கள் மார்க் டுவைன் மற்றும் ருட்யாட் கிப்லிங் ஆகியவர்களின் எழுத்துக்கள் மூலமாகவே அமெரிக்கர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

இரண்டாம் உலகப்போர்

தொகு

இரண்டாம் உலகப்போரின் பொழுது அனைத்தும் மாறியது. சப்பானுக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா அடித்தளமாக அமைந்தது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தையும் பணத்தையும் இந்தியாவிற்குள் கொண்டுவந்தனர். அமெரிக்க அதிபர் பிரான்களின் ரூசுவெல்ட் இந்தியாவிற்கு விடுதலை தருமாறு பலமுறை வற்புறுத்தியும் இந்கிலாந்துப் பிரதமர் அதை வலுலாக மறுத்துவிட்டார்.[8][9]

விடுதலைக்குப் பிறகு (1947-1997)

தொகு

இந்தியா விடுதலை அடைந்து முதல் பதினாறு வருடங்கள் வரை, இரு நாடு உறவுகளும் சிறப்பாக இருந்தன. அமெரிக்கா இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான உணவுகளையும் சலுகைகலையும் வளர்ச்சி நிதிகளையும் கொடுத்தது. அமெரிக்க அதிபர் ஐசனோவர் இந்தியாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க அதிபர் ஆவார். இந்தியாவை பற்றி சான் எப். கென்னடி, மற்றொரு அமெரிக்க அதிபர், கூறியதாவது:

கம்யூனிச நாடான சீனா கடந்த பத்து ஆண்டுகளாக வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறது. குடியரசு நாடான இந்தியாவை நம்மால் முன்னேற்றம் பெறவைக்க இயலவில்லை என்றால் உலகில் உள்ள அனைவரும் கம்யூனிச கொள்கைதான் சிறந்தது என்று எண்ண ஆரம்பித்துவிடுவார்கள்'.

இந்திய-சீனப் போரின் பொழுதும் கென்னடி அரசு இந்தியாவிற்கு வெகுவாக உதவி செய்த்தது. ஆனால்,1963ல் நிக்சன் பதவியேற்றதும் இரு நாடுகளின் உறவு சரியத் தொடங்கியது. இந்திரா காந்தியின் தலைலையில் கீழான இந்தியாவும் சோவியத் ஒன்றியத்துடன் இணக்கமாக செயல்படத் தொடங்கியது. அதே சமயம் அமெரிக்கா பாகித்தானுடன் இணையத் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகித்தான் போரில் அமெரிக்கா பாகித்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. இந்தியாவை அச்சுறுத்த அமெரிக்கா தனது விமானம்-தாங்கி கப்பல் USS Enterprise-ஐ வங்காள விரிகுடாவில் நிறுத்தியது. 1974-ல் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் நடத்தியது. அமெரிக்கா இதனை வலுவாக எதிர்த்தது.

உலகமயமாக்கலுக்கு பிறகு (1998-2008)

தொகு

அடல் பிகாரி வாச்பாய் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதும் போக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த அனுமதி அளித்தார். இதன் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பல பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் சப்பானைத் தவிர வேறு எந்த நாடும் இதனை மதிக்காததால் தடைகள் வெகு சீக்கிரமே நீக்கப்பட்டன. பிறகு இரு நாடுகளும் உறவை மேம்படுத்த இணைந்து செயல்படத் தொடங்கின.

சமீபத்திய உறவுகள்

தொகு

21ஆம் நாற்றாண்டில் இந்தியா அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. நூறு கோடி மக்கள் நிறைந்ததும், இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கமுடையதுமான இந்தியா, வளர்ந்து வரும் வல்லரசாகவும், அமெரிக்காவிற்கு இன்றியமையாத சகோதர நாடாகவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ளத்தக்கதாகவும் கருதப்படுகிறது. 2004இல் 2008 வரையிலான காலத்தில் இருதரப்பு வர்த்தகமும் மும்மட்ங்காக உயர்ந்துள்ளது. நவம்பர் 2010இல் இந்தியா வந்த பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் இணைக்கூட்டத்தில் கல்ந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இரு நாடுகளின் ஒப்பீடு

தொகு
  இந்தியா   அமெரிக்க ஐக்கிய நாடு
மக்கள்தொகை 1,210,193,422 314,256,000
பரப்பு 3,287,240 km2 (1,269,210 sq mi) 9,526,468 km2 (3,678,190 sq mi)[10]
மக்கள்தொகை அடர்த்தி 370/km2 (958.2/sq mi) 33.7/km2 (87.4/sq mi)
தலைநகரம் புது டெல்லி வாசிங்டன் டி.சி.
மிகப்பெரிய நகரம் மும்பாய் – 13,922,125 (21,347,412 Metro) நியூ யார்க் – 8,363,710 (19,006,798 Metro)
முதல் தலைவர்r இராசேந்திர பிரசாத் ஜார்ஜ் வாசிங்டன்
மதங்கள் 80.5% இந்து, 13.4% இசுலாம், 2.3% கிறித்தவம், 1.9% சீக்கியம், 0.8% புத்தம், 0.4% சைனம் 78.4% கிறித்தவம், 16.1% நாத்திகம், 1.7% சுதைசம், 0.7% புத்தம், 0.6% இசுலாம், 0.4% இந்து[11]
மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.848 டிரில்லியன் ($1,389 தனிநபர்)[12] (10th) $15.094 டிரில்லியன் ($48,386 தனிநபர்) (1st)
மொத்த உள்நாட்டு உற்பத்தி (PPP) $4.515 டிரில்லியன் ($3,694 தனிநபர்)[12](3rd) $15.094 டிரில்லியன் ($48,386 தனிநபர்) (1st)
இந்திய அமெரிக்கர்கள் 60,000 இந்தியாவில் பிறந்த அமெரிக்கர்கள் 2,765,815 அமெரிக்காவில் வாழும் மக்களுள் இந்தியப் பூர்வீகம் கொண்டவர்கள்
ராணுவ செலவினங்கள் $48.9 பில்லியன் (2012-ல்) $700.7 பில்லியன் (2012-ல்) [13]
இராணுவ துருப்புக்கள் 4,768,407 2,927,754
ஆங்கிலம் பேசுபவர்கள் 125,226,449 267,444,149
தொழிலாளர் சக்தி 478,300,000 154,900,000
தொலைத்தொடர்பு (கைபேசிகள்) 893,843,534 327,577,529

இராணுவ உறவுகள்

தொகு

இரு நாடுகளின் இராணுவ உறவுகளும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஒழுங்கை கடைப்பிடித்தல், பொதுவான பாதுகாப்பு நலன்கள், ஆகியவையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது, வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அதில் தொடர்புடைய பொருட்கள், தரவு, மற்றும் தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பது, மற்றும் வர்த்தகத்தை பாதுகாப்பது ஆகியவைய இதனுள் அடங்கும்.

2001 ஆம் ஆண்டின் செப்டம்பர் இறுதியில், அமெரிக்க அதிபர் புஷ் அணு ஆயுத பரவல் தடை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முற்றிலுமாக விலக்கினார். இந்தியா சர்வதேச மரபுகளை எதிராக அணு ஆயுதங்களை உருவாக்கியதாலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NNPT) கையெழுத்திடாததாலும் அமெரிக்கா இந்தியாவுடன் அணு ஒத்துழைப்பு எதிர்த்து வந்தது. ஆனால், டிசம்பர் 2006 இல், அமெரிக்க காங்கிரஸ், 30 ஆண்டுகளில் முதல் முறையாக, ஹென்றி ஜே ஹைட் அமெரிக்க இந்திய அமைதியான அணு ஒத்துழைப்பு சட்டத்தை தாக்கல் செய்து, இந்தியாவிற்கு நேரடி அணுசக்தி வணிகம் செய்ய அனுமதி அளித்தது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Teresita C. Schaffer, India and the United States in the 21st Century: Reinventing Partnership (2010)
  2. India-U.S. Economic and Trade Relations
  3. The Evolving India-U.S. Strategic Relationship
  4. "Americans Give Record-High Ratings to Several U.S. Allies". Gallup.com. 2012-02-16. Gallup
  5. பன்னாட்டு மாணவர்கள் தோன்றும் முதல் 25 நாடுகள் பரணிடப்பட்டது 2017-04-03 at the வந்தவழி இயந்திரம் Institute of International Education
  6. Juan L. Gonzales, Jr., "Asian Indian Immigration Patterns: கலிபோர்னியாவில் உள்ள சீக்கிய மக்களின் தோற்றம்," International Migration Review (1986) 20#1 pp 40-54 in JSTOR
  7. Satish K. Kapoor, "The Motivation Behind Swami Vivekananda'S 'Wanderjahre' in America," Indian Journal of American Studies (1981) 11#2 pp 62-68
  8. Eric S. Rubin, "America, Britain, and Swaraj: Anglo-American Relations and Indian Independence, 1939–1945," India Review (2011) 10#1 pp 40–80
  9. Arthur Herman (2008). Gandhi & Churchill: The Epic Rivalry That Destroyed an Empire and Forged Our Age. Random House Digital, Inc. pp. 472–539.
  10. "United States". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 31 January 2010.
  11. Religious Affiliation Pew report
  12. 12.0 12.1 http://en.wikipedia.org/wiki/Economy_of_india
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-08-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய-அமெரிக்க_உறவுகள்&oldid=3672254" இலிருந்து மீள்விக்கப்பட்டது