இந்திய-பாகிஸ்தானிய எல்லை
இந்திய-பாகிஸ்தானிய எல்லை (இந்தி: इंडिया-पाकिस्तान बोर्डर, உருது: انڈیا-پاکستان بورڈر), உள்ளூரில் சர்வதேச எல்லை (IB) எனப்படுவது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடைப்பட்ட சர்வதேச எல்லைக்கோடாகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தையும் பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப் மற்றும் சிந்துவையும் பிரிக்கிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையை அடுத்து இந்தியா, (மேற்கு மற்றும் கிழக்கு) பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் உருவான போது இந்த எல்லைக்கோடு உருவானது.
கட்டுப்பாட்டு கோடு (LoC) இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மீரையும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீரையும் பிரிக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைக் கடக்கும் முக்கிய சம்பிரதாய புள்ளியாக உள்ள வாகா (பஞ்சாபி மொழி: ਵਗਾਹ உருது: واگہ) ஆனது இந்த எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது.
காட்சியகம்
தொகு-
இந்திய பாகிஸ்தான் எல்லையில், ஜம்முவிலிருந்து 45கிமீல் உள்ள ராம்கர் பிரிவில் நடக்கும் பாபா சாம்லியல் மேளா (Baba Chamliyal Mela) எனப்படும் இரு நாட்டு மக்களும் பங்கேற்கும் விழா.
-
வாகா எல்லையில் மாலை நேர கொடி இறக்கும் விழா
-
இந்திய பாகிஸ்தான் எல்லை ஒளி வெள்ளத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் தோன்றும் விண்வெளி புகைப்படம்.