இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்)

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 1969ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அனைத்திந்திய பொதுவுடமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவால் நிறுவப்பட்டது. உருசியப் பொதுவுடமைத் தலைவர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22 அன்று[1] கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் கானு சன்யால் இக்கட்சியின் துவக்கத்தை அறிவித்தார்.gg

கட்சி தோற்றம்

தொகு

1967-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த நக்சல்பாரி பகுதியில் எழுந்த உழவர் எழுச்சியினால் உந்தப்பட்டு ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில மற்றும் மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட முன்னணி ஊழியர்கள் கணிசமான அளவு அணிகளுடனும் ஆதரவாளர்களுடனும் அக்கட்சியிலிருந்து வெளியேறினர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா-லெ) 1969-ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் எட்டாவது அனைத்திந்திய பேராயம் 1970-ம் ஆண்டு மே 14-15-ஆம் தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்றது. சாரு மஜூம்தார் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தமிழகத்திலிருந்து, எல் அப்புவும், ஏ எம் கோதண்டராமனும் மத்திய கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்பு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னடைவு

தொகு

கட்சி சிறிது காலத்துக்குள்ளாகவே கடும் அடக்குமுறைகளையும், மிகப்பலத்த இழப்புகளையும் எதிர் கொண்டு நாடு முழுவதும் பின்னடைவைச் சந்தித்தது. சில மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், சாரு மஜூம்தாரை கட்சியிலிருந்து வெளியேற்றி சத்யநாராயண் சிங் தலைமையில் மாற்று மத்தியக் கமிட்டியை உருவாக்கினர்.[3] இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மாநிலக் கமிட்டிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டன.

அடிப்படை நிலைப்பாடுகள்

தொகு
  1. "ஏகாதிபத்தியத்தின் முற்றும் முழுதான வீழ்ச்சி மற்றும் சோசலிசத்தின் உலகு தழுவிய வெற்றி"யைக் குறிக்கும் புதிய சகாப்தம் தோன்றி விட்டது
  2. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்வதற்கான சித்தாந்தமும் கருவியுமாக கலாச்சாரப் புரட்சி பயன்படுத்தப்பட வேண்டும்.
  3. இந்தியா ஒரு அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனிய சமூகமாக இருக்கிறது.
  4. 1947 ஆகஸ்ட் 15 'சுதந்திரம்' பெயரளவிலான சுதந்திரமே
  5. இந்திய மக்கள் இந்து மத பழமை வாதத்தையும், ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளையும் எதிர்த்து போராட வேண்டும்.
  6. அமெரிக்கா, ரசியா, ஜப்பான், ஐரோப்பிய சமூக வல்லரசுகள் : நமது நாட்டின் எஜமானர்களாக செயல்படுகிறார்கள்.
  7. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஏகாதிபத்திய நாடுகளுக்கு தொண்டூழியம் செய்வதாக இருக்கிறது.
  8. இந்தியாவின் அரசு அமைப்புகள் ஜனநாயக முகமூடியணிந்த கொடுங்கோன்மை அரசுகளாக இருக்கின்றன.
  9. மக்கள் விடுதலைக்கான பாதை புதிய ஜனநாயகப் புரட்சியே
  10. நிலப்பிரபுத்துவத்துக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு
  11. இறுதி நோக்கம் பொதுவுடைமை சமுதாயத்தை நிறுவுவதே

பிளவுகளும் இணைப்புகளும்

தொகு

விமரிசனங்கள்

தொகு

இன்றைய நிலை

தொகு

தமிழ் நாட்டில்

தொகு

தமிழகத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சி 1967ல் உருவானது. சாரு மசும்தாரை பொதுச் செயலாளராகக் கொண்டு இயங்கிய மத்திய கமிட்டியில் எல் அப்பு இடம் பெற்றிருந்தார். அவர் தமிழகக் கட்சியின் முதல் செயலாளர். தலைமறைவாக இருந்த எல் அப்பு காவல் துறையினரால் கொல்லப்பட்டார். அப்பு கொல்லப்பட்ட பின் இயக்கம் பல குழுக்களாக இயங்கியது. வேறுபட்ட நடைமுறை அனுபவங்கள் வேறுபட்ட குழுக்களாயின. கட்சி ஒன்றிணைப்பிற்கான முயற்சியின் பலனாக 1977ல் வினோத் மிஸ்ரா தலைமையில் இயங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) விடுதலையில் பல குழுக்கள் ஒன்று சேர்ந்து இணைந்தன. இன்று 20க்கு மேற்பட்ட மாவட்டங்களில் அமைப்புகளைக் கொண்டுள்ளது.[சான்று தேவை]AICCTU, AILA,AISA, RYA.AIKSA ஆகிய அமைப்புகளில் 3லட்சம் உறுப்பினர்களைக்கொண்டுள்ளது.[சான்று தேவை]

குறிப்புகள்

தொகு
  1. Communist Party of India (M-L) [Original party]
  2. Ahmed, Nadeem., Charu Majumdar -- The Father of Naxalism, HindustanTimes.com, 15 December 2005. பரணிடப்பட்டது 2014-07-30 at the வந்தவழி இயந்திரம் 2014 யூன் 24 அன்று பார்க்கப்பட்டது.
  3. Communist Party of India (M-L) Liberation 2014 யூன் 24 அன்று பார்க்கப்பட்டது.