இந்திய சட்டமன்றத் தேர்தல்கள் 2013

இந்தியாவின் கர்நாடகா, தில்லி, திரிபுரா, இராஜஸ்தான், நாகலாந்து, மிசோரம், மேகாலயா, சத்தீசுகர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்கள் அரசுகளின் ஆட்சிகாலம் 2013ம் ஆண்டில் முடிவடைவதால், மேற்படி மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடந்து முடிந்தது.[1]

திரிபுரா

தொகு
 
திரிபுரா

23,55,446 வாக்காளர்களைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் 11வது சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் தேர்தல் நடந்தது[2][3]. இத்தேர்தலில், இந்தியாவின் அதிககபட்சமாக 93.57விழுக்காடு வாக்குகள் பதிவானது[4]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[5].

தேர்தல் முடிவுகள்

நிர் கட்சி கட்சிக்
கொடி
வெற்றி பெற்ற
தொகுதிகள்
தொகுதி வித்தியாசம்
(கடந்த தேர்தலைவிட)
1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)   49   3
2 இந்திய தேசிய காங்கிரசு   10   0
3 இந்தியப் பொதுவுடமைக் கட்சி   1   0
மொத்தம் 60

மேகாலயா

தொகு
 
மேகாலயா

1481473 வாக்காளர்களைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் 21வது சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் தேர்தல் நடந்தது[6]. இத்தேர்தலில், 88விழுக்காடு வாக்குகள் பதிவானது[7]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்றது. இதில் இந்திய தேசிய காங்கிரசு, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[8].

தேர்தல் முடிவுகள்

நிர் கட்சி கட்சிக்
கொடி
வெற்றி பெற்ற
தொகுதிகள்
தொகுதி வித்தியாசம்
(கடந்த தேர்தலைவிட)
1 இந்திய தேசிய காங்கிரசு   29   4
2 சுயேச்சை 13   8
3 ஐக்கிய சனநாயக கட்சி(மேகாலயா 8 3
4 மலை மாநில மக்கள் சனநாயக கட்சி 4   2
5 தேசியவாத காங்கிரசு கட்சி   2 13
6 தேசிய மக்கள் கட்சி 2   2
7 காரோ தேசிய சபை 1   1
8 வடகிழக்கு சமூக சனநாயக கட்சி 1   1
மொத்தம் 60

நாகாலாந்து

தொகு
 
நாகாலாந்து

1198449 வாக்காளர்களைக் கொண்ட நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் தேர்தல் நடந்தது[6]. இத்தேர்தலில், 83விழுக்காடு வாக்குகள் பதிவானது[7]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனி, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[8].

தேர்தல் முடிவுகள்

நிர் கட்சி கட்சிக்
கொடி
வெற்றி பெற்ற
தொகுதிகள்
தொகுதி வித்தியாசம்
(கடந்த தேர்தலைவிட)
1 நாகா மக்கள் முன்னனி

 

37   11
2 இந்திய தேசிய காங்கிரசு   8 15
3 சுயேச்சை 8   1
4 தேசியவாத காங்கிரசு கட்சி

 

4   2
5 பாரதிய ஜனதா கட்சி 1 1
6 ஐக்கிய ஜனதா தளம்   1   1
மொத்தம் 59

கர்நாடகா

தொகு
 
கர்நாடகா

224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடகாவின் 14வது சட்டமன்ற தேர்தல், 2013ம் ஆண்டு மே 5ம் நாள் நடந்தது[9]. இத்தேர்தலில், 66.81விழுக்காடு வாக்குகள் பதிவானது[10]. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 8ம் நாள் நடைபெற்றது. இதில் இந்திய தேசிய காங்கிரசு, அதிக தொகுதிகள் வென்று ஆட்சியமைத்தது[8].

தேர்தல் முடிவுகள்

நிர் கட்சி கட்சிக்
கொடி
வெற்றி பெற்ற
தொகுதிகள்
தொகுதி வித்தியாசம்
(கடந்த தேர்தலைவிட)
1 இந்திய தேசிய காங்கிரசு   122   43
2 பாரதிய ஜனதா கட்சி 40 72
3 மதசார்பற்ற ஜனதா தளம் 40   12
4 கருநாடக சனதா கட்சி 6   6
5 பாதகரா சிரமிகா ரைதலா காங்கிரசு 4   4
6 சமாஜ்வாதி கட்சி 1   1
7 கருநாடக மக்கள் கட்சி 1   1
8 சர்வோதய கருநாடக கட்சி 1   1
9 சுயேச்சை 9   3
மொத்தம் 223

தில்லி

தொகு
 
தில்லி

1.19கோடி வாக்காளர்களைக் கொண்ட தில்லி சட்டமன்றத்தின் பொதுத் தேர்தல் 2013, திசம்பர் 4ம் நாள் நடந்தது[11]. இத்தேர்தலில், 74விழுக்காடு வாக்குகள் பதிவானது[12]. 2013 திசம்பர் 8ம் நாள், வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியும் ஆட்சியமைக்கும் விருப்பம் இல்லாமையால், 30விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்தலின் இரண்டாம் நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியமைத்தது.

தேர்தல் முடிவுகள்

நிர் கட்சி கட்சிக்
கொடி
வெற்றி பெற்ற
தொகுதிகள்
தொகுதி வித்தியாசம்
(கடந்த தேர்தலைவிட)
1 பாரதிய ஜனதா கட்சி 31   8
2 ஆம் ஆத்மி கட்சி   28 புதிது
3 இந்திய தேசிய காங்கிரசு   8 35
4 ஐக்கிய ஜனதா தளம்   1   1
5 சிரோமணி அகாலி தளம் 1   1
6 சுயேச்சை 1   1
மொத்தம் 70

ராஜஸ்தான்

தொகு
 
ராஜஸ்தான்

4கோடி வாக்காளர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் 2013, திசம்பர் 1ம் நாள் நடந்தது[13]. இத்தேர்தலில், 74விழுக்காடு வாக்குகள் பதிவானது[14]. 2013 திசம்பர் 8ம் நாள், வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது.

தேர்தல் முடிவுகள்

நிர் கட்சி கட்சிக்
கொடி
வெற்றி பெற்ற
தொகுதிகள்
தொகுதி வித்தியாசம்
(கடந்த தேர்தலைவிட)
1 பாரதிய ஜனதா கட்சி 162   84
2 இந்திய தேசிய காங்கிரசு   21 75
3 பகுஜன் சமாஜ் கட்சி 3 3
4 தேசிய மக்கள் கட்சி 2 -
5 சுயேச்சை 7 -
மொத்தம் 199

மேற்கோள்கள்

தொகு
  1. இந்தியாவின் 630 தொகுதிகளுக்கு தேர்தல்
  2. திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு
  3. திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது
  4. திரிபுராவில் 93சத ஓட்டுப்பதிவு
  5. திரிபுராவில் மீண்டும் மார்க்., ஆட்சி
  6. 6.0 6.1 நாகாலாந்து, மேகாலயாவில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு
  7. 7.0 7.1 நாகாலாந்தில் 83%, மேகாலயாவில் 88% ஓட்டுப்பதிவு
  8. 8.0 8.1 8.2 மாநில தேர்தலில் ஆளுங்கட்சிகளுக்கு வெற்றி ஆட்சி
  9. கர்நாடக சட்டசபை தேர்தல்
  10. கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் அமைதியான ஓட்டுப்பதிவு
  11. டில்லியில் சட்டசபை தேர்தல்
  12. டில்லியில் 74 சதவீதம் ஓட்டுப்பதிவு
  13. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகம்: 47 ஆயிரம் ஓட்டு சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு
  14. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 74 சதவீத ஓட்டுப்பதிவு