இந்திய சமுதாய மருத்துவ ஆய்விதழ்

இந்திய சமுதாய மருத்துவ ஆய்விதழ் (Indian Journal of Community Medicine) இந்திய தடுப்புமருந்து மற்றும் சமூக மருத்துவ சங்கத்தின் சார்பில் மெட்கோ பதிப்பகத்தால் வெளியிடப்படும் திறந்த அணுக்கம் கொண்ட சக மதிப்பாய்வு செய்யப்படும் மருத்துவ ஆய்விதழாகும்.[1]

இந்திய சமுதாய மருத்துவ ஆய்விதழ்  
சுருக்கமான பெயர்(கள்) இந்திய சமுதாய மருத்துவ ஆய்விதழ்
துறை பொது சுகாதாரம்
மொழி ஆங்கிலம்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் மெட்நோ வெளியீட்டாளர், இந்திய சமூக மருத்துவம் தடுப்பு மருத்துவ சங்கத்திற்காக (இந்தியா)
வரலாறு 1985-முதல்
வெளியீட்டு இடைவெளி: காலாண்டு
குறியிடல்
ISSN 0970-0218 (அச்சு)
1998-3581 (இணையம்)
OCLC 29807933
இணைப்புகள்

இந்த இதழில் குடும்ப சுகாதாரப் பாதுகாப்பு, நோய்த்தாக்கம், உயிரியல், பொது சுகாதார நிர்வாகம், சுகாதார பராமரிப்பு மற்றும் விநியோகம், தேசிய சுகாதாரப் பிரச்சினைகள், மருத்துவ மானுடவியல் மற்றும் சமூக மருத்துவம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

ஆய்வுச் சுருக்கம் பட்டியலிடல்

தொகு

இந்திய சமுதாய மருத்துவ ஆய்விதழில் வெளியாகும் கட்டுரைகளின் சுருக்கம் தொற்றுநோய்கள், சிஏபி ஆய்வுச் சுருக்கம், எபசுகோ (EBSCO), எம்கேர் (EmCare), ஏஎசுஏபி, உலகளாவிய சுகாதாரம், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆராய்ச்சி மையம், உடல்நல கல்வி மையம், இண்ட்மெட் (IndMed), மெடிண்ட் (MedIND), சேப்டிலிட் (SafetyLit), இசுகோபசு (Scopus) போன்ற ஆய்வுச்சுருக்க தொகுப்பிதழ்களில் வெளியிடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Archive of "Indian Journal of Community Medicine : Official Publication of Indian Association of Preventive & Social Medicine"". www.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.

வெளி இணைப்புகள்

தொகு