இந்திய ஜனநாயகக் கட்சி
(இந்திய ஜனநாயக கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிறுவனருமான டி. ஆர். பச்சமுத்துவால் ஏப்ரல் 29, 2010இல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்[1]. ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பதே இக்கட்சியின் முதன்மை குறிக்கோளாகும். இக்கட்சியின் தலைமையகம் சென்னையில் உள்ளது. இந்தக் கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது[2].
இந்திய ஜனநாயகக் கட்சி | |
---|---|
தலைவர் | முனைவர். டி. ஆர். பச்சமுத்து |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2014-2019), (2024-முதல்) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (2019-2021), மக்கள் நீதி மய்யம் (2021-2024) |
இந்தியா அரசியல் |
இக்கட்சி 2014 பொதுத் தேர்தலில் பாஜக-தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ தினத்தந்தி செய்தி
- ↑ ijk-contests-ring-symbol[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "BJP clinches deal in Tamil Nadu". The Hindu. 20 March 2014. http://www.thehindu.com/news/national/tamil-nadu/bjp-announces-sixparty-alliance-in-tn/article5810008.ece. பார்த்த நாள்: 21 March 2014.