இந்திய மதச்சார்பற்ற முன்னணி
இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front) என்பது மேற்கு வங்க அரசியல் கட்சியாகும். இது மேற்கு வங்காள அரசியல்வாதி அப்பாஸ் சித்திக்யால் ஹூக்ளி மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[1]
இந்திய மதச்சார்பற்ற முன்னணி | |
---|---|
சுருக்கக்குறி | ISF |
தலைவர் | நெளசாத் சித்திக் |
நிறுவனர் | அப்பாசு சித்திக் |
தொடக்கம் | 21 சனவரி 2021 |
இ.தே.ஆ நிலை | அங்கீகாரம் பெறவில்லை |
கூட்டணி | சன்ஞ்சுக்தா மோர்ச்சா (2021) |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மேற்கு வங்காள சட்டமன்றம்) | 1 / 294
|
இந்தியா அரசியல் |
வரலாறு
தொகுஇந்த கட்சி 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு[2] முன்னர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு[3] எதிராக இடது முன்னணி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு[4] தலைமையிலான சஞ்சுக்தா மோர்ச்சா[4] அல்லது மஹாஜோத் கட்சி கூட்டணியில் இணைந்து செயல்பட்டது. இக்கட்சி 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி பெற்றது.[5] பீகாரைச் சார்ந்த ராஷ்டிரிய மதச்சார்பற்ற மஜ்லிஸ் கட்சியின் சின்னத்தில் இக்கட்சி இத்தேர்தலில் போட்டியிட்டது. 2021 தேர்தலுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநில காங்கிரசு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடனான கூட்டணியை முறிந்ததாக அறிவித்தார்.[6]
தேர்தல் செயல்பாடு
தொகுஇந்திய மதச்சார்பற்ற முன்னணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய தேசிய காங்கிரசுடன் சஞ்சுக்தா மோர்ச்சா என்ற கூட்டணியில் கூட்டணியில் இணைந்து 2021 மேற்கு வங்கத் தேர்தலைச் சந்தித்தது.
மாநில சட்டப் பேரவைத் தேர்தல்
தொகுஆண்டு | கட்சித் தலைவர் | போட்டியிட்ட இடங்கள் | வெற்றிப் பெற்ற இடங்கள் | மாற்றம் | வாக்கு விகிதம் | முடிவு |
---|---|---|---|---|---|---|
2021 | அப்பாசு சித்திக்[7] | 32[8] | 1 | 1 | 1.35% | சிறுபான்மை |
மேற்கோள்கள்
தொகு- ↑ News, NDTV (Jan 21, 2021). "Want To Be Kingmaker": Muslim Preacher Announces Party For Bengal Polls".
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Wire.in, The (28 Feb 2021). "Bengal: As Left and Congress Ally With Muslim Cleric's Party, Will BJP Be the Winner?".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "West Bengal: In Left-Congress Brigade Ground Rally, ISF Emerged as the Biggest Mobiliser". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
- ↑ 4.0 4.1 India, Outlook (February 28, 2021). "With Brigade Rally, Left-Congress-ISF’s ‘Sanyukta Morcha’ Kicks Of Bengal Poll Campaign". Outlook.India. https://www.outlookindia.com/photos/photoessay/with-brigade-rally-left-congress-isfs-sanyukta-morcha-kicks-of-bengal-poll-campaign/2628.
- ↑ "30-seat deal with Left: ISF cleric Abbas Siddiqui". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
- ↑ "Bengal Congress chief Adhir Chowdhury does not want ISF as an ally in future - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
- ↑ "ISF to fight polls on borrowed symbol". Millennium Post. 18 March 2021. பார்க்கப்பட்ட நாள் 29 March 2021.
- ↑ "West Bengal General Legislative Election 2021". Election Commission of India. 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.