இந்திரஜித் மகாந்தி

இந்திரஜித் மகாந்தி (Indrajit Mahanty)(பிறப்பு 11 நவம்பர் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.

மாண்புமிகு தலைமை நீதியரசர்
இந்திரஜித் மகாந்தி
Indrajit Mahanty
தலைமை நீதிபதி, திரிபுரா உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 அக்டோபர் 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி, இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
பதவியில்
6 அக்டோபர் 2019 – 11 அக்டோபர் 2021
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
பதவியில்
14 நவம்பர் 2018 – 5 அக்டோபர் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, ஒரிசா உயர் நீதிமன்றம்
பதவியில்
30 மார்ச் 2006 – 13 நவம்பர் 2018
பரிந்துரைப்புயோகேசு குமார் சபர்வார்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1960 (1960-11-11) (அகவை 64)
கட்டாக், ஒடிசா, இந்தியா
முன்னாள் கல்லூரிகேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்

கல்வி

தொகு

ஒடிசா மாநிலம் கட்டக்கில் பிறந்த மாகந்தி இளங்கலைச் சட்டப் பட்டத்தினை தில்லிப் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைச் சட்டப் பட்டத்தினை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[1]

நீதிபதியாக

தொகு

மாகந்தி ஒரிசா சட்டக் குழுவில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, தன்னுடைய தந்தை ரஞ்சித் மகாந்தியிடம் பயிற்சி பெற்றார். இவரது தந்தை 1989-ல் காலமான பின்னர் தனியாக வழக்குகளை நடத்தி வந்தார். மகாந்தி தற்போது, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.[2] இவர் இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் மற்றும் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார் .

மேற்கோள்கள்

தொகு
  1. "Odisha Born Justice Indrajit Mahanty Sworn In As Chief Justice Of Tripura High Court". Odisha Bytes (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  2. Oct 10, TNN / Updated:; 2021; Ist, 06:57. "Rajasthan HC chief justice Indrajit Mahanty transferred to Tripura HC". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-04. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரஜித்_மகாந்தி&oldid=3602987" இலிருந்து மீள்விக்கப்பட்டது