இந்துஸ்தான் பூச்சிக்கொல்லிகள்
இந்துஸ்தான் பூச்சிக்கொல்லிகள் லிமிடெட் (எச்.ஐ.எல்) என்பது இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சின் கீழ் செயல்படும் இந்திய அரசு நிறுவனமாகும்.[1][2] இந்நிறுவனம் தேசிய மலேரியா ஒழிப்பு திட்டத்திற்காக டி.டி.டீ உற்பத்திக்காக மார்ச் 1954இல் தொடங்கப்பட்டது.[3] இந்நிறுவனம் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பூஞ்சண கொல்லிகளைத் தயாரிக்கும் பணியினை மேற்கொள்கின்றது.[4]
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1954 |
தலைமையகம் | கொச்சி, ரசாயணி, பட்டிண்டா |
தொழில்துறை | வேதிப்பொருகள் |
உற்பத்திகள் | டி.டி.டீ |
உலகின் மிகப் பெரிய டி.டி.டீ. உற்பத்தி நிறுவனமான இந்த தொழிற்சாலையில் மூன்று உற்பத்தி பிரிவுகள் உள்ளன. இவற்றில் ஒன்று கொச்சி (தென்னிந்தியா) அருகே உத்தியோக மண்டலத்திலும், மற்றொன்று மும்பைக்கு அருகிலுள்ள ரசாயணியிலும் (மேற்கு இந்தியா) பிறிதொன்று பஞ்சாபில் (வட இந்தியா) பட்டிண்டாவிலும் உள்ளது. இந்நிறுவனம் சுமார் 1300 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
விதை வர்த்தகம் மற்றும் உரத்தொழிலில் எச்.ஐ.எல் விரைவில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Venu Gopal, P N (4 July 2015). "Hindustan Insecticides to resume work amidst pollution charges". Down to Earth. https://www.downtoearth.org.in/news/hindustan-insecticides-to-resume-work-amidst-pollution-charges-5524.
- ↑ http://www.thehindubusinessline.com/companies/hindustan-insecticides-enters-fertiliser-business/article8324350.ece
- ↑ "Hindustan Insecticides plant ordered to shut". பிசினஸ் லைன் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
- ↑ Description