பட்டிண்டா (பஞ்சாபி மொழி: ਬਠਿੰਡਾ), என்பது இந்திய மாநிலமான பஞ்சாபின் பட்டிண்டா மாவட்டத்தில் உள்ள நகரமாகும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று. [1] இங்கு 285,813 மக்கள் வாழ்கின்றனர். இது இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றாகும். மேலும் பட்டிண்டா மாவட்டத்தின் தற்போதைய நிர்வாக தலைமையகமாகும். இந்நகரம் வடமேற்கு இந்தியாவில் மால்வா பிராந்தியத்தில், தலைநகரான சண்டிகருக்கு மேற்கே 227 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பட்டிண்டா நகரம் பஞ்சாபின் ஐந்தாவது பெரிய நகரமாகும்.

இங்கு அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைந்துள்ளது. [2]

புவியியல் தொகு

பட்டிண்டா இந்தியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்திய-கங்கை வண்டல் சமவெளிகளின் ஒரு பகுதியாகும். பட்டிண்டா 30.20 ° வடக்கு 74.95 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[3] இது சராசரியாக 201 மீட்டர் (660 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

காலநிலை தொகு

பட்டிண்டா அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு இடையிலான வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். இந் நகரம் 20 மிமீ முதல் 40 மிமீ வரையிலான சராசரி ஆண்டு வீழ்ச்சியை பெற்றுக் கொள்கிறது. [4]

சமீபத்திய காலங்களில் கோடை வெப்பநிலை 49 ° C (120 ° F) ஆகவும், குளிர்கால வெப்பநிலை 1 ° C (சுமார் 33 ° F) ஆகவும் பதிவாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் மிகக் குறைவான வெப்பநிலையாக -1.4 ° C (29.48 ° F ) பதிவு செய்யப்பட்டது.[5]

தட்பவெப்பநிலை வரைபடம்
பட்டிண்டா
பெமாமேஜூஜூ்செடி
 
 
10.1
 
20
7
 
 
19.2
 
24
10
 
 
7.9
 
30
15
 
 
9.8
 
37
21
 
 
19.9
 
41
26
 
 
38.2
 
41
28
 
 
90.3
 
37
28
 
 
83.8
 
36
27
 
 
51.8
 
36
25
 
 
9.4
 
34
19
 
 
1.4
 
29
13
 
 
3.6
 
23
8
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: MSN World Weather
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.4
 
68
45
 
 
0.8
 
75
50
 
 
0.3
 
86
59
 
 
0.4
 
99
70
 
 
0.8
 
106
79
 
 
1.5
 
106
82
 
 
3.6
 
99
82
 
 
3.3
 
97
81
 
 
2
 
97
77
 
 
0.4
 
93
66
 
 
0.1
 
84
55
 
 
0.1
 
73
46
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

புள்ளிவிபரங்கள் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டிண்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 285,813 ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 151,782 மற்றும் 134,031 ஆகும். பட்டிண்டா நகரத்தின் 1000 ஆண்களுக்கு 868 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 211,318 ஆகும். இதில் 118,888 ஆண்களும், 92,430 பெண்களும் உள்ளடங்குவர். நகரத்தின் சாராசரி கல்வியறிவு விகிதம் 82.84% வீதம் ஆகும். இதில் ஆண் மற்றும் பெண் கல்வியறிவு விகிதங்கள் முறையே 87.86% மற்றும் 77.16% ஆகும். இந்நகரின் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,713 ஆகும். இதில் 16,472 சிறுவர்களும், 14,241 சிறுமிகளும் அடங்குகின்றனர். 1000 சிறுவர்களுக்கு 865 சிறுமிகள் என்ற சிறுவர் பாலின விகிதம் காணப்படுகின்றது.[6]

மதம் தொகு

பட்டிண்டா நகரில் 62.61% வீதமான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். சீக்கிய மதம் 35.04% மக்காளால் பின்பற்றப்படும் இரண்டாவது பிரபலமான மதமாகும். சிறுபான்மையினராக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் வசிக்கின்றனர். நகரத்தில் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும், பட்டிண்டா மாவட்டத்தில் 70.89% வீதமான சீக்கியர்கள் வாழ்கின்றனர். [7]

பொருளாதாரம் தொகு

பட்டிண்டா வளர்ந்து வரும் ஒரு தொழிற்துறை நகரம் ஆகும். இந்நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் பல சர்க்கரை ஆலைகள், செங்கல் சூளைகள், சீமேந்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன.

போக்குவரத்து தொகு

பட்டிண்டா இரயில் நிலையம் இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு தேசிய நெடுஞ்சாலைகளான என்.எச் 7 (பாசில்கா - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை), என்.எச் 54 (கெஞ்சியன், ஹனுமன்கர் - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை), என்.எச் 148 பி (பட்டிண்டா முதல் கொத்துபுட்லி வரை) மற்றும் என்.எச் 754 (பட்டிண்டா முதல் ஜலாலாபாத், பாசில்கா) என்பன நகரத்தின் வழியாக அல்லது அருகாமையில் செல்கின்றன.[8] பஞ்சாபின் பெரும்பாலான நகரங்களைப் போல பட்டிண்டா நகரமும் அருகிலுள்ள முக்கிய நகரங்களுடன் பேருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சண்டிகர், லூதியானா, ஜலந்தர், புது தில்லி, சிம்லா, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் மற்றும் பல நகரங்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன. பிசியானாவில் உள்ள விமானப்படை நிலையத்துடன் தனது ஓடுபாதையைப் பகிர்ந்து கொள்ளும் பட்டிண்டா விமான நிலையம் 2016 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி பட்டிண்டா விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் ஜம்மு மற்றும் புது தில்லிக்கு மட்டுமே இயக்கப்படுகின்றன.

பிரபலமான இடங்கள் தொகு

கிலா முபாரக் தொகு

உள்நாட்டில் இரசியா சுல்தானா கோட்டை என்றும் அழைக்கப்படும் கிலா முபாரக் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் பழமையான கோட்டைகளில் ஒன்றாகும். டெல்லியின் முதல் பேரரசி இரசியா சுல்தானா இக்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார். இது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

தம்தாமா சாஹிப் தொகு

தம்தாமா சாஹிப் நகரின் தென்கிழக்கில் 28 கி.மீ தொலைவில் உள்ள தல்வண்டி சபோவில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா ஆகும். சீக்கிய வேதமான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் இறுதி பதிப்பை பத்தாவது சீக்கிய குரு தயாரித்த இடமாக அறியப்படுகிறது.

மைசர் கானா தொகு

மைசர் கானா ஒரு புகழ்பெற்ற இந்து கோவிலாகும். இது ஜ்வாலா ஜி என்ற இந்து தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நகரின் தென்கிழக்கில் 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிடும் இரு பெரிய விழாக்களுக்காக அறியப்படுகின்றது.

சான்றுகள் தொகு

  1. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-11-26. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.
  3. "Maps, Weather, and Airports for Bhatinda, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
  4. "India Map - Political, States & Capital Maps". Maps of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
  5. "Bathinda records region's lowest temperature at -1.4°C - Hindustan Times". web.archive.org. 2014-05-31. Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
  6. "Bathinda City Population Census 2011-2019 | Punjab". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
  7. "Bathinda District Population Census 2011-2019, Punjab literacy sex ratio and density". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
  8. "Wayback Machine" (PDF). web.archive.org. 2018-01-27. Archived from the original on 2013-05-14. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பட்டிண்டா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிண்டா&oldid=3833424" இலிருந்து மீள்விக்கப்பட்டது