இந்து சமயத்தில் துளசி வழிபாடு

tulasi

இந்து சமயத்தில் துளசி என்ற தாவரம் புனிதமானதாக நம்பப்படுகின்றது. இந்துக்கள் துளசியை பூமிக்குரிய வெளிப்பாடு எனக் கருதுகின்றனர். திருமாலை இடைவிடாது துதித்துக் கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியின் கண்ணுள்ள துளசிச் செடியாகும். திருமாலின் வெவ்வேறு அவதாரங்களான கிருட்டிணன், விட்டலர் வணக்கங்களின் போது துளசியின் இலை கொண்டு வழிபடுவார். 

துளசி
அதிபதிதுளசி தாவரம்
வகைதேவி
இடம்துளசி தாவரம்
துணைதிருமால்

இந்துக்களின் வீடுகளில் நடு முற்றத்திலோ அன்றி வீட்டு முன்புறத்திலோ அதை மாடங்களில் நட்டு வளர்த்து வருவதற்கு சமய, மருத்துவ மற்றும் அதனின்றும் பெறும் எண்ணெய் முக்கிய காரணமாகும்.[1]

பெயர்கள்

தொகு
 
துளசி தேவியின் உருவச்சிலை

இந்து மத புராணங்களில் துளசி (ஒப்பற்ற) வைஷ்ணவி (விஷ்ணு உடைய), விஷ்ணுவல்லப (விஷ்ணுவின் காதலி),[2] ஹரிப்பிரியா (விஷ்ணுவின் காதலி), விஷ்ணு துளசி என அழைக்கப்படுகின்றாள். பச்சை இலை உடைய துளசி ஸ்ரீதுளசி (அதிஷ்ட துளசி) ;அதே வேளையில் ஸ்ரீ என்பது லட்சுமியைக் குறிக்கும். லட்சுமி ஆனவள் விஷ்ணுவின் மனைவியாகும். மேலும் ராம துளசி (பிரகாசமான துளசி) கரும் பச்சை இலையுடைய துளசி அல்லது கிருஷ்ண துளசி என அழைக்கப்படுகின்றது. இராமபிரான் விஷ்ணுவின் இன்னொரு அவதாரமாகும். இத்துளசி கிருஷ்ணரை வணங்குவதற்கு விசேடமாகும். ஏனெனில் கருநீல நிறம் கிருஷ்ணரின் மேனி நிறத்தை ஒத்ததாகும்.[2][3]

இதிகாசகுறிப்பு

தொகு
 
இந்தியாவில் வீட்டு நடு முற்றத்தில் மாடம் அமைத்து வணங்கப்படுகின்றது

தேவி பாகவத புராணத்தில் துளசி, செல்வத்தின் அதிபதியாகவும் மகாவிஷ்ணுவின் துணைவியாகவும் வருணிக்கப்படுகின்றாள். விஷ்ணுவின் துணைவியர்கள் லக்ஷ்மி , சரஸ்வதி , கங்கை ஆகியோர் ஆகும். ஒரு முறை விஷ்ணுவோடு கங்கா உல்லாசமாக இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி கங்கையை தரையில் இழுத்தாள். அப்போது லட்சுமி கங்கையை காப்பாற்ற ஓடினாள். சீற்றமடைந்த சரஸ்வதி லட்சுமி பூமியில் செடியாக பிறக்க சாபமிட்டாள். மேலும் கங்கா ஆனது கங்கா நதியாகவும் சரஸ்வதி ஆனது சரஸ்வதி நதியாகவும் பிறக்க ஒருவருக்கொருவர் சபித்தார்கள். சரஸ்வதியின் சாபத்தினால் லக்ஷ்மி துளசியாக பூமியில் பிறக்க விஷ்ணு அவளை சமாதானம் செய்து நீ பூவுலகில் செடியாக அவதரித்தாலும் அதே வேளையில் என்னுடனும் இருப்பாய் என அனுக்கிரகம் செய்கின்றார். அதே நேரம் அரசர் விருட்சவகராஜா ( சிவனை வழிபடுபவர்) ஏனைய தெய்வங்களை வழிபட தடை செய்தவர் ஆவர். புரட்சியான சூரியக் கடவுள், விஷ்ணுவிடமிருந்து லட்சுமி பிரிய வேண்டும் என சபித்தார். இதற்கு முறையாக விருட்சவகராஜா வாரிசுகள் இறக்க சபித்தார். பின்னர் பேரப்பிள்ளைகள் லட்சுமியை வணங்கி பிள்ளைகளாக துளசியையும் வேடவற்றியையும் பெற்றனர். துளசியானவள் அரச வாழ்க்கையை கைவிட்டு விஷ்ணுவை அடைவதற்காகப் புறப்பட்டாள். பிரம்மா அவளின் தவ வலிமையை சோதிப்பதற்கு விஷ்ணுவை திருமணம் செய்ய முதல் சாஞ்கசுடா திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறுகின்றார். எனினும் சாஞ்கசுடாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையில் போட்டி இடம் பெற்று உண்மையான விஷ்ணுவை துளசி திருமணம் செய்தாள்.

வைஷ்ணவப் புராணங்களில் தேவர்களிற்கும் அசுரர்களிற்கும் பாற்கடலில் அழியா அமுதத்தை எடுக்க முற்பட்டு இறுதியில் தேவர்கள் வெற்றி பெற்ற போது விஷ்ணுவிற்கு ஏற்பட்ட சந்தோச மிகுதியால் ஏற்பட்ட கண்ணீர்த் துளியானது துளசிச் செடியை உருவாக்கியது. இது தவிர வேறு இதிகாசக் கதைகளும் காணப்படுகின்றன. 

வழிபாடு 

தொகு

விருட்ச வழிபாடு என்பது இந்துசமயத்தில் ஒன்றும் புதுமையானது அல்ல. துளசி வழிபாடு அவற்றுக்கெல்லாம் தலையானது. துளசிச் செடியானது வானத்துக்கும் பூமிக்கும் நடுவே ஒரு வாசல் புள்ளியாகக் கருதப்படுகின்றது. ஒரு வழிபாட்டுக் குறிப்பில் துளசிச் செடியின் கிளைகளில் பிரம்மா வதிவதாகவும். ஏல்லா யாத்திரைத் தலங்களும் அதன் வேர்ப்பகுதியில் காணப்படுவதாகவும், கங்கைநீர் அதன் வேர்ப்பகுதியிலிருந்து வழிந்தோடுவதாகவும், எல்லாத் தெய்வங்களும் அதன் தண்டுப்பகுதியிலும் இலைப்பகுதியிலும் வாசம் செய்வதாகவும், அது மட்டுமல்லாது எல்லா வேதநூல்களும் அங்கே இருப்பதாகவும் காணப்படுகின்றது. இச் செடியானது வீட்டில் பெண் தெய்வமாகப் போற்றப்படுகின்றது.மேலும் இந்துமதத்தின் மத்திய குழு சார்ந்த சின்னமாக விளங்குகின்றது. மேலும் வைஷ்ணவர்கள் காய்கறி இராச்சியத்தில் கடவுளின் வெளிப்பாடு என்று கருதுகின்றனர். 

எல்லா இந்துக்களின் வீடுகளில் இது வணங்கப்பட்டாலும் குறிப்பாக பிராமணர், வைஷ்ணவர் வீட்டு நடு முற்றத்திலோ, முற்றத்தில் மாடம் அமைத்தோ வணங்கப்படுகின்றது. கூட்டமாக அவை வளர்க்கப்படும் இடங்கள் விருந்தாவன் என்று அழைக்கப்படுகின்றன. விருந்தாவன் புனிதத் தலங்களில் காணப்படுகின்றது. 

தினமும் துளசிச் செடிக்கு நீர் ஊற்றி பராமரித்து வந்தால் மோட்சப்பேறு கிடைக்கப் பெறும் என்று நம்பப்படுகின்றது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அதை வணங்குவது விசேடமாகக் குறிப்பிடப்படுகின்றது. அடியார்கள் அதன் அடியில் சாணகத்தினால் மெழுகி கோலம் இட்டு பூக்கள், பழங்கள், தூபமிட்டு வணங்குவார்கள். 

துளசி வணக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் வங்கத்தின் வடமேல் மாகாணங்களில் பிரித்தானிய கால சனத்தொகை கணக்கெடுப்பில் துளசி பக்தர்கள் என குறிப்பிட்டனர். அம் மக்கள் இந்துக்களாகவோ, முஸ்லிம்களாகவோ அல்லது சீக்கியராகவோ குறிப்பிடப்படவில்லை.  விழாக்கள்

 
துளசி விழா

துளசி விழாவானது இந்துக்களினால் பிரபோதினி ஏகாதசி ( கார்த்திகை வளர்பிறை பதினோராம் சந்திர நாள்) இருந்து கார்த்திகை பூர்ணிமா (கார்த்திகை முழு நிலவு) வரை வழக்கமாக பதினோராம் அல்லது பன்னிரண்டாம் சந்திர நாள் கொண்டாடப்படுகின்றது. இது துளசிச் செடிக்கும் விஷ்ணுவின் வடிவங்களான ராம வடிவம் அல்லது கிருஷ்ண வடிவத்திற்கும் இடையேயான சடங்குத் திருமணமாகும்.மணமகனும் மணமகளும் சடங்கு முறையில் வழிபாடு செய்த பின்னர் பாரம்பரய இந்து சமய திருமண சடங்குகளின்படி திருமணம் செய்யப்படும். இவ் திருமணமானது நான்கு மாத சாதுர்மா காலத்தின் முடிவின் பின் இடம்பெறுகின்றது. சாதுர்மா காலத்தில் திருமணங்கள் மற்றும் பிற சடங்ஞகளுக்கும் துரதிஷ்டமாக கருதப்படும். எனவே இத் திருமணம் மூலம் திருமண காலம் தொடக்கி வைக்கப்படுகின்றது.

ஒரிசா மாநிலத்தில் கடும் வெப்பமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் துளசிச் செடியின் மேல் பரணிட்டு சிறிய பாத்திரமொன்றில் துளையிட்டு நீர் சொட்டு சொட்டாக அச்செடியின் மேல் விழும் வண்ணம் செய்து வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் அவர்கள் தாம் முன்னர் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என நம்புகின்றனர். இப்படிச் செய்வதால் இதைத் தொடர்ந்து வரும் பருவகாலத்தில் நல்ல மழை தங்களுக்கு கிடைக்கும் எனவும் நம்புகின்றனர். 

பிற தெய்வங்களின் வழிபாடுகளில் துளசி

தொகு
 
துளசியின் வேர்கள் மூலம் தயாரிக்கப்படும் ஜெபமாலை,முன்புறமாக மணி கொண்டு செய்யப்படது

துளசியானது விஷ்ணு மற்றும் அவரது வடிவங்களான கிருஷ்ண, விதோபா மற்றும் பிற தொடர்புடைய வைஷ்ணவ தெய்வ வழிபாடுகளில் புனிதமாகக் கருதப்படுகின்றது. 10 000 துளசி இலைகள் கொண்டு செய்யப்பட்ட மாலைகள், துளசி கலக்கப்பட்ட நீர், துளசி தூவப்பட்ட உணவு பொருட்கள் என்பன பூசையின் போது விஷ்ணு அல்லது கிருஷ்ணாவிற்கு காணிக்கையாக அளிக்கப்படுகின்றது. 

வைஷ்ணவ பாரம்பரியத்தில் துளசியின் வேர்கள் , தண்டுகள் மூலம் தயாரிக்கப்படும் ஜெபமாலையானது தொடக்க சின்னமாக விளங்குகின்றது. துளசிமாலையானது அணியப்படுவது முகூர்த்தமாகக் கருதப்படுகின்றது. மேலும் விஷ்ணு அல்லது கிருஷ்ணருடன் இணைந்து பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது என நம்பப்படுகின்றது. மாலையாக கழுத்தில் அணிந்து அல்லது கையில் அணிந்து மற்றும் ஜெபமாலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சிவனை துளசி கொண்டு வழிபடுவது பற்றி சில முரண்பாடான தகவல்களும் உள்ளன. சைவர்கள் (சிவனை வணங்குபவர்கள்), வைஷ்ணவர்கள் (விஷ்ணுவை வணங்குபவாகள்) என இந்து சமயத்தில் போட்டிப் பிரிவு காணப்படுகின்றது. சிவனை வழிபட வில்வம் இலையானது அடிக்கடி பயன்படுத்தப்படும் பொழுதிலும் , சில ஆசிரியர்கள் துளசி இலை கூட காணிக்கையாக அளிக்கப்பட்டிருக்கலாம் என குறிக்கின்றனர். சில  நேரங்களில் துளசி வழிபாடானது எங்கும் வியாபித்திருக்கும் சிவ வழிபாடாக் கருதப்படுகின்றது. சிவனின் அருவுருவச் சின்னமான இலிங்கமானது சில வேளைகளில் துளசிச் செடியின் வேர்கள் காணப்பட்ட கறுப்பு மண்ணிலிருந்து செய்ய பரிந்துரைக்கப்படுகின்றது. எனினும் தேவி வழிபாட்டில் துளசியானது மறுக்கப்படுகின்றது. ஏனெனில் இந்துமத அன்னையான தேவிக்கு துளசிச் செடியின் காரமான நறுமணம் கோபத்தை ஏற்படுத்தும் என்பதேயாகும். துளசிச் செடியானது அனுமான் வழிபாட்டில் முக்கியமானதாகும். ஓரிசாவில் துளசிச் செடியானது தமது தெய்வங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பி அதன் கீழ் படையலிட்டு வணங்குவார்கள். மலையாள தேசத்தின் நாயர் சாதியினர் கெட்ட தேவதைகளை சாந்தப்படுத்த இச் செடியின் இலைகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இந்துசமயத்தில் துளசியின் முக்கியத்துவம் 

தொகு

துளசிச் செடியின் ஒவ்வொரு பகுதியும் வணக்கத்துக்குரியதும் புனிதமானதும் ஆகும். எவரொருவரின் உடல் எரியூட்டப்படும் பொழுதில் துளசிச் செடியின் தளிர்களை அதிலிட்டால் அவர் மோட்சம் அல்லது கிருஸ்ணபகவானின் வைகுந்தத்தை அடைவார் என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. விஷ்ணுவின் விளக்கைத் தூண்டுவதற்கு துளசிச் செடியின் காம்பைப் பாவித்தால் இலட்சக் கணக்கான விளக்குகள் எரிவதற்கு ஒப்பானது ஆகும். ஒருவர் தனது மேனியில் தானாகப் பட்ட துளசிச்செடியை எடுத்து அதைப் பொடி செய்து, குழைத்து மேனியெங்கும் பூசி நீராடினால் சாதாரண பூசைகள் பல செய்த பலனும் பல இலட்சம் கோ தானம் (பசு தானம்) செய்த பலனும் கிட்டும் என்றும் நம்பப்படுகின்றது. துளசி இட்ட நீரை இறப்பவரின் வாயில் ஊற்றி அவர்களின் ஆன்மா மோட்சம் அடையச் செய்வார்கள். 

துளசியை வணங்குவது நன்மை தருவது போல் அதை அவதூறு செய்வதால் பல கெடுதிகளும் வந்து சேரும். செடியின் மீது சலம் கழிப்பதோ கழிவுநீரை ஊற்றுவதோ பொருட்களை வீசுவதோ தடை செய்யப்ட்டது. செடியைப் பிடுங்கி எடுப்பதோ அன்றி அதன் கிளைகளை வெட்டுவதோ ஆகாது.

செடி அழிவுற்றால் அதை முறைப்படி நீரிலிட்டு அழிக்க வேண்டும். துளசிச் செடியிலிருந்து இலைகளை பகல் வேளைகளில் மட்டும் ஆண்கள் தான் பறிக்க வேண்டும். இலைகளைப் பறிப்பதற்கு முன் சிறிய பிரார்த்தனை செய்ய வேண்டும். 

பல இடங்களில் துளசி ஆனது குடும்ப பெயராக பயன்படுத்தப்படுகிறது. 

மேற்கோள்கள்

தொகு
  1. Simoons 1998, ப. 17-18.
  2. 2.0 2.1 Simoons 1998, ப. 14.
  3. Chatterjee, Gautam (2001). Sacred Hindu Symbols. Abhinav Publications. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-397-7.

பின்னிணைப்பு

தொகு