இந்து மல்கோத்ரா குழு
இந்து மல்கோத்ரா குழு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 5 சனவரி 2022 அன்று பஞ்சாப் மாநிலத்திற்குள் பயணித்த போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்களை குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் என். வி. இரமணா தலைமையிலான அமர்வு, 12 சனவரி 2022 அன்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் இந்து மல்கோத்ரா தலைமையிலான குழுவை நியமித்தது. இக்குழுவின் தலைவராக இந்து மல்கோத்திராவும், உறுப்பினர்களாக பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர், தேசியப் புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர் இயக்குநர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவிக்குக் குறையாத அதிகாரி, சண்டிகர் தலைமை காவல்துறை இயக்குநர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் கூடுதல் காவல்துறை அதிகாரி (பாதுகாப்பு) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்களை விசாரிப்பதுடன், பாதுகாப்பு மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் யார் எனக்கண்டறிவதுடன், பிரதமர் மற்றும் அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பிற்கு என்னென்ன பாதுகாப்புகள் தேவை என்பதை பரிந்துரைக்க்க உச்ச நீதிமன்றம் இந்து மல்கோத்திரா குழுவிடம் கேட்டுள்ளது. [1][2][3][4][5]
பின்னணி
தொகு5 சனவரி 2022 அன்று பஞ்சாப் மாநிலத்தில் பாக்கித்தான் எல்லைப்புறத்தில் அமைந்த பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உசைனிவாலா எனுமிடத்திற்கு ரூபாய் 14 ஆயிரம் கோடி செலவில் நலத்திட்டங்கள் தொடக்க விழாவிற்கு செல்கையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் வாகனத் தொடர், மேம்பாலம் ஒன்றில், பஞ்சாப் வேளாண்மை ஆர்ப்பட்டக்காரர்களால் 20 நிமிடங்கள் இடைமறிக்கப்பட்டார்.[6] பிரதமரின் பாதுகாப்பு காரணமாக நரேந்திர மோதி விழாவிற்கு செல்லாமல் தில்லி திரும்பினார். இதனால் இவ்விடயம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பிரதமருக்கான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இந்திய அரசும் மற்றும் பஞ்சாப் அரசும் விசாரணைக் குழுக்கள் நியமித்தது.[7] [8]இந்திய உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தலையிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் நியமித்த விசாரணைக் குழுக்களுக்கு தடைவிதித்ததுடன், நீதியரசர் இந்து மல்கோத்ரா தலைமையிலான குழு பிரதமரின் பஞ்சாப் பயணத்தின் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்கள் விசாரிக்க 12 சனவரி 2022 அன்று குழு அமைத்தது.
இதனையும் காணக
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ SC appoints 5-member panel headed by ex-judge Indu Malhotra to probe PM security breach
- ↑ Indu Malhotra panel to probe PM security breach
- ↑ SC appoints Justice Indu Malhotra committee to probe PM security breach
- ↑ PM Security Lapse : Supreme Court Appoints Former SC Judge Justice Indu Malhotra As Enquiry Committee Head
- ↑ SC Appoints 5-Member Panel Headed By Ex Judge Indu Malhotra to Probe PM 'Security Breach
- ↑ SPG sounded alert to Punjab before PM visit
- ↑ MHA, Punjab to separately probe PM Modi visit security lapse
- ↑ Punjab forms high-level panel to probe security lapses during PM Modi's visit