இந்து மேனன்
இந்திய எழுத்தாளர்
இந்து மேனன் (Indu Menon)(பி. 13 சூன் 1980) என்பவர் இந்தியாவின் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த மலையாள நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் இளம் எழுத்தாளர்களுக்கான மத்திய சாகித்ய விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் ஒருவராக இந்தியா டுடே அங்கீகரித்தது.
இந்து மேனன் Indu Menon | |
---|---|
பிறப்பு | 13 சூன் 1980 கோழிக்கோடு |
வாழ்க்கைத் துணை | உருபேசு பால் |
பிள்ளைகள் | 2 |
குடும்ப வாழ்க்கை
தொகுஇந்து மேனன், மலையாளத் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான உரூபேசு பால் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு கவுரி மரியா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.[1]
விருதுகளும் கௌரவங்களும்
தொகு- 2003: ஜனப்ரியா புரசுகாரம் - லெஸ்பியன் கவ் (The Lesbian Cow)
- 2004: ஈபி சுஷாமா அறக்கட்டளை விருது- யோசிதயுரக்கங்கள்
நூல் பட்டியல்
தொகுநாவல்கள்
தொகுசிறுகதைகளின் தொகுப்புகள்
தொகு- த லெஸ்பியன் கவ் (2002)
- சங்க பரிவார் (2005)
- இந்துசாயயுல்லா முஸ்லிம் புருஷன் (2007)
- சும்பனாசப்த தாராவளி (2013)
- இந்துமேனந்தே கதைகள் (2013)
- பழரசத்தோட்டம் (2017)
- ஏகா வெஸ்ட்லேண்டின் ஆங்கிலத்தில் லெஸ்பியன் கவ் அண்ட் அதர் ஸ்டோரிஸ் (2021). கே.நடகுமார் மொழிபெயர்த்துள்ளார்
நினைவுகள்
தொகு- என்னே சும்பிக்கன் படிப்பிச்சா ஸ்திரீயே (2014)
- என்டே தேனே என்டே ஆனந்தமே (2014)
மொழிபெயர்ப்புகள்
தொகு- த லெஸ்பியன் கவ் (2002)[4]
- அவர் சாயம் தேக்காத சாவிட்டு படிக்கலிருன்னு சோழம் தின்னும்போது (2003)
- அனுராகத்தின் புஸ்தகம் (2007)
- நம்முதே ரக்தம் (2021) (பழங்குடியினர் கவிதை)
தொகுப்பு வெளியீடு
தொகு- பூமியிலே பெண்குட்டிகள்க்கு (2005)
- தனத் பக்ஷணவும் ஜீவனோபதியும் (2019)
- எழுதப்படாத வரலாறுகள் மற்றும் பழங்குடியின சுதந்திரப் போராளிகள் (2020)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manassiloru Mazhavillu on Kairalitv". kairalitvonline. பார்க்கப்பட்ட நாள் 11 December 2013.
- ↑ "Sea of thoughts". 26 November 2015. http://www.thehindu.com/features/friday-review/review-of-indu-menons-novel-kappalinekkurichoru-vichithrapusthakam/article7915943.ece.
- ↑ "സ്ത്രീയനുഭവങ്ങള് യഥാതഥമായി ആവിഷ്കരിക്കാന് സ്ത്രീക്കു മാത്രമേ കഴിയുവെന്ന് ഷാജി എന് കരുണ്; ഇന്ദു മേനോന്റെ കപ്പലിനെക്കുറിച്ചൊരു വിചിത്ര പുസ്തകം പ്രകാശനം ചെയ്തു". 8 October 2015. https://www.kairalinewsonline.com/2015/10/08/19034.html.
- ↑ "Why 'The Lesbian Cow and Other Stories' deserves a space on every feminist and political bookshelf".
வெளி இணைப்புகள்
தொகு
- பிளாகர் சுயவிவரம்
- டிசி புத்தகத்தில் மேனனுடன் நேர்காணல் ( மலையாளத்தில் )