இனப்பெருக்க உரிமைகள்

இனப்பெருக்க உரிமைகள் (Reproductive rights) என்பது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வேறுபடும் இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான சட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் ஆகும்.[1] உலக சுகாதார நிறுவனம் இனப்பெருக்க உரிமைகளை பின்வருமாறு வரையறுக்கிறது:[2]

இனப்பெருக்க உரிமைகள் என்பது அனைத்து தம்பதிகள் மற்றும் தனிநபர்களின், எண், இடைவெளி மற்றும் நேரத்தை சுதந்திரமாகவும் பொறுப்புடனும் முடிவெடுப்பதற்கான அடிப்படை உரிமையை அங்கீகரிப்பது மற்றும் அவ்வாறு செய்வதற்கான தகவல் மற்றும் வழிமுறைகள் மற்றும் உயர்ந்த பாலியல் உரிமையை பெறுவதற்கான உரிமை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளாடக்கியது. பாகுபாடு, வற்புறுத்தல் மற்றும் வன்முறை இல்லாத இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அனைவரின் உரிமையும் அவற்றில் அடங்கும்.

பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் பின்வருவனவற்றில் சில அல்லது அனைத்தையும் உள்ளடக்கியிருக்கலாம்: கருக்கலைப்பு-உரிமை இயக்கங்கள்; பிறப்பு கட்டுப்பாடு ; கட்டாய கருத்தடை மற்றும் கருத்தடை செய்வதிலிருந்து சுதந்திரம்; நல்ல தரமான இனப்பெருக்க சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமை; இலவச மற்றும் தகவலறிந்த இனப்பெருக்கத் தேர்வுகளைச் செய்வதற்காக கல்வி மற்றும் அணுகல் உரிமை. [3] இனப்பெருக்க உரிமைகள்,மாதவிடாய் சுகாதாரம் [4][5] பாதுகாப்பு பெண் பிறப்புறுப்பு அழித்தல் போன்ற நடைமுறைகள்.[1][3][6]

இனப்பெருக்க உரிமைகள் ஐக்கிய நாடுகளின் 1968 சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் மனித உரிமைகளின் துணைக்குழுவாக உருவாகத் தொடங்கின.[6] இதன் விளைவாக, இதனை முதன் முதலாக ஆதரித்து தெகுரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டது: "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையையும் இடைவெளியையும் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் தீர்மானிக்க அடிப்படை மனித உரிமை உண்டு." என்று அதில் குறிப்பிட்டது[6][7] பெண்களின் பாலியல் தேர்வு, மகளிர் மருத்துவ மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னுரிமைகளில் 1975 ஆம் ஆண்டுவரை இடம் பெறவில்லை.[8] இருப்பினும், மாநிலங்கள் இந்த உரிமைகளை சர்வதேச சட்டப்பூர்வமாக ஆக்குவதில் வேகம் காட்டவில்லை. எனவே, இந்த உரிமைகளில் சில ஏற்கனவே கடுமையான சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அதாவது சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் சர்வதேச மனித உரிமைக் கருவிகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், மற்றவை பிணைக்கப்படாத பரிந்துரைகளில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.[9]

இனப்பெருக்க உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் உலகெங்கிலும் உள்ள மக்களிடையே சமூக பொருளாதார நிலை, மதம் அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மிகவும் தீவிரமாகப் போட்டியிடப்படும் உரிமைகள் பிரச்சினைகளாகும்.[10]

இனப்பெருக்க உரிமைகள் பிரச்சினை மக்கள்தொகை பெருக்கம் போன்ற மக்கள்தொகை கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் விவாதங்கள் மற்றும் கட்டுரைகளில் அடிக்கடி முக்கியத்துவம் வாய்ந்ததாக வழங்கப்படுகிறது.[11] இனப்பெருக்க உரிமைகள் என்பது பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளின் துணைக்குழு ஆகும்.

வரலாறு

தொகு

தெகுரானின் பிரகடனம்

தொகு

1945 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பட்டயம் "இனம், பாலினம், மொழி அல்லது மதம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை உலகளாவிய மரியாதை, மற்றும் கடைபிடித்தல்" ஆகிய கடமைகளை உள்ளடக்கியது. இருப்பினும், சாசனம் இந்த உரிமைகளை வரையறுக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மனித உரிமைகளை வரையறுக்கும் முதல் சர்வதேச சட்ட ஆவணமான மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தை (யுடிஹெச்ஆர்) ஐநா ஏற்றுக்கொண்டது. ஆனால் யூடிஎச் ஆர் இனப்பெருக்க உரிமைகளை அதில் குறிப்பிடவில்லை. இனப்பெருக்க உரிமைகள் 1968 தெகுரானின் பிரகடனத்தில் மனித உரிமைகளின் துணைக்குழுவாக தோன்றத் தொடங்கியது, அதில் கூறப்பட்டுள்ளதாவது: "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையையும் இடைவெளியையும் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் தீர்மானிக்க அடிப்படை உரிமை உண்டு".[7]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Cook, Rebecca J.; Fathalla, Mahmoud F. (1996). "Advancing Reproductive Rights Beyond Cairo and Beijing". International Family Planning Perspectives 22 (3): 115–21. doi:10.2307/2950752. https://archive.org/details/sim_international-family-planning-perspectives_1996-09_22_3/page/115. 
  2. "Gender and reproductive rights". WHO.int. Archived from the original on 2009-07-26. பார்க்கப்பட்ட நாள் 2010-08-29.
  3. 3.0 3.1 Amnesty International USA (2007). "Stop Violence Against Women: Reproductive rights". SVAW. Amnesty International USA. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 8 December 2007.
  4. "Tackling the taboo of menstrual hygiene in the European Region". WHO.int. 8 November 2018. Archived from the original on 28 July 2019.
  5. Singh, Susheela (2018). "Inclusion of menstrual health in sexual and reproductive health and rights — Authors' reply". The Lancet Child & Adolescent Health 2 (8): e19. doi:10.1016/S2352-4642(18)30219-0. பப்மெட்:30119725. https://www.thelancet.com/journals/lanchi/article/PIIS2352-4642(18)30219-0/fulltext. 
  6. 6.0 6.1 6.2 Freedman, Lynn P.; Isaacs, Stephen L. (1993). "Human Rights and Reproductive Choice". Studies in Family Planning 24 (1): 18–30. doi:10.2307/2939211. பப்மெட்:8475521. Freedman, Lynn P.; Isaacs, Stephen L. (1993). "Human Rights and Reproductive Choice". Studies in Family Planning. 24 (1): 18–30. doi:10.2307/2939211. JSTOR 2939211. PMID 8475521.
  7. 7.0 7.1 "Proclamation of Teheran". International Conference on Human Rights. 1968. Archived from the original on 17 October 2007. பார்க்கப்பட்ட நாள் 8 November 2007.
  8. Dorkenoo, Efua. (1995). Cutting the rose : female genital mutilation : the practice and its prevention. Minority Rights Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1873194609. இணையக் கணினி நூலக மைய எண் 905780971.
  9. Center for Reproductive Rights, International Legal Program, Establishing International Reproductive Rights Norms: Theory for Change பரணிடப்பட்டது 30 ஆகத்து 2015 at the வந்தவழி இயந்திரம், US CONG. REC. 108th CONG. 1 Sess. E2534 E2547 (Rep. Smith) (8 December 2003):
  10. Reproductive Rights in a Global Context.
  11. "Population Matters search on "reproductive rights"". Populationmatters.org/. Archived from the original on 8 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனப்பெருக்க_உரிமைகள்&oldid=3927722" இலிருந்து மீள்விக்கப்பட்டது