இனிகி சூறாவளி

இனிகி சூறாவளி (Hurricane Iniki; ஹவாய் மொழியில் பொருள்:வலுவான, குத்திக்கிழிக்கும் காற்று) என்பது, பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தைத் தாக்கிய ஆற்றல் மிக்க சூறாவளியாகும். வலுமிக்க 1990–1995 எல் நீனோவின்போது, செப்டம்பர் 5, 1992 அன்று உருவான இனிகி, ​​அப் பருவத்தைச் சேர்ந்த பதினொரு நடு பசிபிக் வெப்பமண்டலச் சூறாவளிகளில் ஒன்றாகும். செப்டம்பர் 8 அன்று இது வெப்ப மண்டலப் புயல் நிலையை அடைந்து மறுநாள் சூறாவளியாகத் தீவிரமடைந்தது.வடக்குநோக்கித் திரும்பிய பின், செப்டம்பர் 11 அன்று கவாய் தீவைத் தாக்கியது; அப்போது 145 மைல் வேகத்தில் காற்று வீசியது. மேலும் சாஃபிர்-சிம்ப்சன் சூறாவளி அளவுகோளில் வகை 4 நிலையை அடைந்தது. காட்டில் வீசியெறியப்பட்ட அனிமோமீட்டர் ஒன்று 225 எனக் காட்டியது. 1982 பருவத்தில் இவா சூறாவளிக்குப் பின் ஹவாய் மாநிலத்தைத் தாக்கிய முதல் சூறாவளி இதுவாகும். மேலும் 1959 இல் வந்த டாட் சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட முதல் பெரிய சூறாவளியாகும். செப்டம்பர் 13 அன்று ஹவாய் மற்றும் அலாஸ்கா இடையே இனிகி மறைந்தது.

இனிகி சூறாவளி
Category 4 major hurricane (SSHWS/NWS)
A view of Hurricane Iniki from Space on September 11, 1992. The storm is situated over the Hawaiian Islands, and is surrounded by open waters of the Pacific. Iniki's eye, seen near the center of the image, is well-defined, and representative of an intense hurricane.
செப்டம்பர் 11, அன்று கவாய் தீவுக்குத் தெற்கே உச்சகட்டத்தில் இனிகி சூறாவளி
தொடக்கம்செப்டம்பர் 5, 1992
மறைவுசெப்டம்பர் 13, 1992
உயர் காற்று1-நிமிட நீடிப்பு: 145 mph (230 கிமீ/ம)
தாழ் அமுக்கம்938 பார் (hPa); 27.7 inHg
இறப்புகள்6
சேதம்310 கோடி $
பாதிப்புப் பகுதிகள்ஹவாய் (குறிப்பாக கவாய்)
1992 பசிபிக் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி

இனிகியால் ஆறு உயிரிழப்புகளும் ஏறத்தாழ $ 310 கோடி (1992 நிலவரப்படி) பொருளிழப்பும் ஏற்பட்டன. இதனால் ஹவாய் வரலாற்றில் அதிக இழப்பு ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாகவும் அதிக இழப்பு ஏற்படுத்திய இரண்டாவது பசிபிக் சூறாவளியாகவும் விளங்கியது. இதற்கு 18 நாள்கள் முன்புதான் அக் காலகட்டத்தில் ஆகப்பெரிய இழப்பு ஏற்படுத்திய வெப்பமண்டலப் புயலான சூறாவளி ஆண்ட்ரூ, புளோரிடாவைத் தாக்கியிருந்தது.

நடு பசிபிக் சூறாவளி மையம் (CPHC), வெப்பமண்டலச் சூறாவளி எச்சரிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளை 24 மணி நேரத்திற்கு முன்பே வழங்கத் தவறிவிட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை இல்லாத போதிலும், ஆறு இறப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. கவாயில் ஆகப்பெரிய சேதம் விளைந்தது. அங்கு 1,400-க்கும் மேற்பட்ட வீடுகளை அழிந்தன. 5,000 க்கும் மேற்பட்டவை கடும் சேதமடைந்தன. புயலின் கண்பகுதிப் பாதையில் நேரடியாக இல்லாவிடினும், ஓஹு தீவு, காற்று மற்றும் புயல் எழுச்சியால் மிதமான சேதத்தை சந்தித்தது.

வானிலை வரலாறு தொகு

தயாரிப்புகள் தொகு

தாக்கம் தொகு

கவாய் தொகு

கவாய் தீவை இனிகி தாக்குமுன் அமெரிக்கத் திரை இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், தன் ஜுராசிக் பார்க் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.இனிகி கவாயைக் கடக்கையில் அவரும் அவரது படக்குழுவினருள் 130 பேரும் ஒரு விடுதியில் பாதுகாப்பாகத் தங்கியிருந்தனர்.[1][2] ஸ்பில்பேர்க்கின் கூற்றுப்படி, ஒவ்வொரு கட்டமைப்பும் உருக்குலைந்திருந்தது; கூரைகளும் சுவர்களும் பிளவுண்டன; கண்ணுக்கெட்டியவரை தொலைபேசிக் கம்பங்களும் மரங்களும் சாய்ந்திருந்தன. ஒரு வெப்பமண்டலச் சூறாவளி முதன்மைப் பங்கு வகிக்கும் இப் படத்தின் ஒரு பகுதியாக, கவாயின் கடலோரச் சுவர்கள் இனிகியால் இடிபடும் காட்சிகளை ஸ்பில்பேர்க் உள்ளடக்கினார். விடுதியின் அண்மைச் சாலைகளிலிருந்த சில சிதைவுகளை அகற்ற படக்குழுவினர் உதவினர்.[1]

ஓஹு தொகு

ஹவாய் பெருந்தீவு தொகு

பின்விளைவு தொகு

பெயர் திரும்பப்பெறல் தொகு

மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிகி_சூறாவளி&oldid=3759051" இருந்து மீள்விக்கப்பட்டது