இனியன் பன்னீர்செல்வம்

சதுரங்க வீரர்

இனியன் பன்னீர்செல்வம்[1] (Panneerselvam Iniyan) இந்தியாவின் 61 ஆவது சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். [2] இவர் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். இனியன் 2007 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தனது முதல் கிராண்டு மாசுட்டர் தகுதிநிலையை எசுப்பானியாவில் நடைபெற்ற மோண்டு கேடா சதுரங்கப் போட்டியில் பெற்றார். 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செருமனியில் நடைபெற்ற போப்லிங்கன் சதுரங்கப் போட்டியில் இரண்டாவது தகுதிநிலையையும் இதே ஆண்டு சூலை மாதம் எசுப்பானியாவில் நடைபெற்ற பார்பெரா தெல் வேலசு சதுரங்கப் போட்டியில் மூன்றாவது தகுதிநிலையையும் அடைந்து பிடே அமைப்பு வழங்கும் கிராண்டு மாசுட்டர் பட்டத்தைப் பெற்றார். [3]

இனியன்.ப
P. Iniyan
முழுப் பெயர்இனியன் பன்னீர்செல்வம்'
நாடுஇந்தியா
பிறப்பு13 செப்டம்பர் 2002 (2002-09-13) (அகவை 21)
ஈரோடு
பட்டம்கிராண்டு மாசுட்டர் (2019)
பிடே தரவுகோள்2555 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2525 (மே 2019)

2017 ஆம் ஆண்டில் அந்தோரா திறந்த நிலை போட்டியில் 4 ஆவது இடத்தைப் பிடித்ததும்[4] 2018 ஆம் ஆண்டு சனவரியில் இத்தாலி நாட்டில் நடைபெற்ற விலோர்பா சதுரங்கப் போட்டியில் 2 ஆவது இடம் பெற்றதும் பிற சிறப்பான வெற்றிகளாகும். இப்போட்டியில் அங்கேரி நாட்டைச் சேர்ந்த இரிச்சர்டு ராப்போர்டு .முதலிடம் பிடித்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துபாய் திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் 7/9 புள்ளிகள் எடுத்து 1 முதல் 8 ஆவது வரையிலான இடத்தைப் பிடித்தார். [5] இந்த போட்ட்டியை மாக்சிம் மாட்லகோவ் வென்றார்.

2019 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் புதுதில்லியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்காக நடைபெற்ற பொதுநலவாய சதுரங்கப் போட்டியில் 7/7 புள்ளிகள் எடுத்து போட்டியை வென்றார்; அதே மாதத்தில் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் நட்டைபெற்ற சதுரங்கத் திருவிழாவில் இரண்டாவது இடம் பிடித்தார். [6]

மேற்கோள்கள் தொகு

  1. As with most Tamil names, the patronymic is given first: Panneerselvam is his father's name, Iniyan his first name.
  2. "Breaking news! India gets its 61st GM: P. Iniyan". March 5, 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  3. Final standings of Barberà del Vallès tournament, on chess-results.com
  4. 35 Open Internacional d'Andorra, final standings on chess-results.com
  5. 21st Dubai Open 2019, final standings on chess-results.com
  6. Thailand Chess Festival 2019, final standings on chess-results.com

புற இணைப்புகள் தொகு

  • P. Iniyan player profile and games at 365Chess.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனியன்_பன்னீர்செல்வம்&oldid=3779843" இலிருந்து மீள்விக்கப்பட்டது