இன்விக்டஸ் (ஆங்கிலக் கவிதை)
இன்விக்டஸ் (Invictus) என்பது வில்லியம் எர்னஸ்ட் ஹென்லே (1849–1903) எனும் ஆங்கிலக் கவிஞரால் வடிக்கப்பட்ட ஓர் விக்டோரிய கால ஆங்கிலக் குறுங்கவிதை. இது 1875 இல் எழுதப்பட்டு, 1888 இல் வெளிவந்த அவரது முதல் கவிதைத் தொகுப்பான புக் ஆஃப் வெர்ஸஸின் லைஃப் அன்ட் டெத் (எக்கோஸ்)[1] என்ற பகுதியில் முதன்முதலில், தலைப்பு எதுவுமின்றி பதிக்கப் பெற்றது. ஆரம்பப் பதிப்புகளில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மாவு மற்றும் உரொட்டி வியாபாரியும், இலக்கியப் புரவலருமான, ராபெர்ட் தாமஸ் ஹாமில்டன் புரூஸ் (1846–1899) என்பவருக்கு அர்ப்பணமாக "To R. T. H. B" எனும் குறிப்பு இடம் பெறுகிறது.[2] "இன்விக்டஸ்" ("வெல்லமுடியாத" எனப் பொருள் தரும் இலத்தீன் சொல்) [3] எனும் தலைப்பை, தி ஆக்ஸ்ஃபோர்டு புக் ஆஃப் இங்கிலீஷ் வெர்ஸில் இக்கவிதை சேர்க்கப்பட்டபோது, அதன் பதிப்பாசிரியர் ஆர்தர் கிவில்லர்-கௌச் வழங்கினார்.[4][5]
"இன்விக்டஸ்" | |
---|---|
26 நவம்பர் 1892 இல் வேனிடி பேர் ஆங்கில இதழில், லெஸ்லீ வார்டின் கைவண்ணத்தில் வெளியான, வில்லியம் எர்னஸ்ட் ஹென்லேயின் உருவப்படம். | |
ஆசிரியர் | வில்லியம் எர்னஸ்ட் ஹென்லே |
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
வகை(கள்) | கவிதை |
வெளியீட்டாளர் | (ஆங்கிலம்) புக் ஆஃப் வெர்ஸஸ் |
ஊடக வகை | அச்சு (பத்திரிகை) |
வெளியிட்ட நாள் | 1888 |
கவிதை
தொகுOut of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll.
I am the master of my fate:
I am the captain of my soul.[கு 1][1]
மொழிபெயர்ப்பு
தொகுஎட்டுத் திக்கும் பாதாள இருளாய்
எனைச் சூழும் இரவினின்றும்,
துவளாத மனம்தனை எனக்களித்ததற்கு,
இறை எனப்படுவது எதுவாயினும் நன்றி உரைக்கிறேன்.
சூழல் இறுக்கத்தில் சிக்குண்ட பொழுதுகளிலும்
வாய் விட்டழுததில்லை முகம் சுளித்ததுமில்லை
ஊழின் குண்டாந்தடியில் பட்ட அடிகளால்
குருதி கசிந்த போதும் என் தலை தாழ்ந்ததில்லை
அழுகையும் ஆத்திரமும் மலிந்திருக்கும் இவ்விடத்திற்கு அப்பால்
கார்நிழல் தரும் பேரச்சம் மட்டுமே பெருகி வரும்,
ஆனபோதும் ஆண்டாண்டுக் கால அச்சுறுத்தல்களும்,
கோழையாக என்னைக் கண்டதில்லை, காணப்போவதுமில்லை.
சொர்க்கத்தின் வாயில் எத்தனைக் குறுகியதென்பதும் பொருட்டில்லை,
தீர்ப்புச்சுருளில் சாட்டப்பட்டுள்ள தண்டனைகளும் பொருட்டில்லை.
என் விதியின் முதல்வன் நானே:
என் மனத்தின் தலைவன் நானே.
முக்கியத்துவம்
தொகுஹென்லேயின் இலக்கியப் புகழுக்கு பெரும்பாலும் இவ்வொற்றைக் கவிதையே காரணம்.[6] 1875 இல் ஹென்லேயின் காசநோய் முற்றியதால் ஏற்பட்ட உடற்கோளாறு காரணமாக அவரின் ஒரு காலை நீக்க வேண்டி வந்தது. இக்காலை நீக்கியவுடன் மறு காலையும் நீக்க வேண்டியுள்ளதெனத் தெரியப்படுத்தினர். ஆனால் அவர் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவரான ஜோசப் லிஸ்டரின் சேவையை நாடினார். அவர் ஹென்லேயின் பாதத்தில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, எஞ்சிய காலைக் காப்பாற்றினார்.[7] மருத்துவமனையில் தேற்றம் பெரும் காலத்தில், பின்னாளில் "இன்விக்டஸ்" என்று வழங்கப்படும் இவ்வரிகளை எழுத உந்துதல் ஏற்பட்டது. தன் வாழ்வின் கடினமான இக்கால கட்டமும், வறுமை தோய்ந்த பால பருவ நினைவுகளும் சேர்ந்து, இக்கவிதையின் இயக்கத்திற்கும் அதன் உள்ளார்ந்த பொருளுக்கும் முழு முதல் தூண்டுதலாய் அமைந்தன.[8]
தாக்கங்கள்
தொகு- ராபன் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நெல்சன் மண்டேலா, பிற சிறைவாசிகளுக்கு இக்கவிதையை ஓதினார். இதன் சாராம்சமான, தன்னாளுமை கருத்தினால் உத்வேகம் பெற்றார்.[9]
- பர்மிய எதிர்கட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி "இக்கவிதை, பல காலகட்டங்களில் பல நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஊக்கம் அளித்தது போலவே என் தந்தை ஆங் சான், மற்றும் அவரது சமகாலத்தவர்களுக்கும் அவர்களது விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்தது" என்று கூறினார்.[10]
ஒலிபெயர்ப்பு
தொகு- ↑ ஔட் ஆஃப் தி நைட் தட் கவர்ஸ் மீ,
பிலாக் ஆஸ் த பிட் பிரம் போல் டு போல்,
ஐ தேங்க் வாட்டெவர் காட்ஸ் மே பி
போர் மை அன்கான்குவரெபல் ஸோல்.
இன் த பெல் கிலட்ச் ஆஃப் ஸர்கம்ஸ்டான்ஸ்
ஐ ஹேவ் நாட் வின்ஸ்ட் நார் கிரைடடலௌட்
அன்டர் த பிலட்ஜியானிங்க்ஸ் ஆஃப் சான்ஸ்
மை ஹெட் இஸ் பிலடி பட் அன்பௌடு
பியான்ட் திஸ் பிலேஸ் ஆஃப் ராத் அன்ட் டியர்ஸ்
லூம்ஸ் பட் த ஹார்ரர் ஆஃப் த ஷேட்,
அன்ட் யெட் த மெனேஸ் ஆஃப் த இயர்ஸ்
பைன்ட்ஸ் அன்ட் ஷால் பைன்ட் மீ அனஃப்ரெய்ட்.
இட் மேட்டர்ஸ் நாட் ஹௌ ஸ்ட்ரய்ட் த கேட்,
ஹௌ சார்ஜ்ட் வித் பனிஷ்மென்ட்ஸ் த ஸ்க்ரால்.
ஐ ஏம் த மாஸ்டர் ஆஃப் மை பேட்:
ஐ ஏம் த கேப்டம் ஆஃப் மை ஸோல்.
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 ஹென்லே, வில்லியம் எர்னஸ்ட் (1888). (ஆங்கிலம்) எ புக் ஆஃப் வெர்ஸஸ். லண்டன்: டி. நட். pp. 56–57. இணையக் கணினி நூலக மைய எண் 13897970.
- ↑ ஹென்லே, வில்லியம் எர்னஸ்ட் (1891). (ஆங்கிலம்) எ புக் ஆஃப் வெர்ஸஸ் (3-ஆவது ed.). நியூ யார்க்: ஸ்க்ரைப்னர் & வெல்ஃபோர்ட். இணையக் கணினி நூலக மைய எண் 1912116.
- ↑ "(ஆங்கிலம்) ஆங்கிலப் பேராசிரியர் மரியான் ஹாக்டர்: 'இன்விக்டஸ்' இன் பொருள்". சி.என்.என். 2001-06-11. Archived from the original on 2010-05-29. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
- ↑ கிவில்லர்-கௌச், ஆர்தர் தாமச் (பதி.) (1902). (ஆங்கிலம்) தி ஆக்ஸ்ஃபோர்டு புக் ஆஃப் இங்கிலீஷ் வெர்ஸ், 1250–1900 (முதல் (6-ஆவது அச்சு) ed.). ஆக்ஸ்ஃபோர்டு: கிலாரண்டன் பிரஸ். p. 1019. இணையக் கணினி நூலக மைய எண் 3737413.
- ↑ வில்சன், ஏ.என். (2001-06-11). "(ஆங்கிலம்) வோர்ல்ட் ஆஃப் புக்ஸ்". த டெயிலி டெலிகிராப். http://www.telegraph.co.uk/comment/4262920/World-of-books.html. பார்த்த நாள்: 2009-12-14.
- ↑ கலிபோர்னியா பல்கலைக்கழக அச்சகம் http://www.jstor.org.www2.lib.ku.edu:2048/stable/3817033?seq=1
- ↑ (ஆங்கிலம்) "இன்விக்டஸ் திறனாய்வு". ஜே ரீட் எஷ்ஸ்
- ↑ (ஆங்கிலம்) "வில்லியம் எர்னஸ்ட் ஹென்லேயின் சுயசரிதை. போயட்ரி பவுண்டேஷன்
- ↑ டேனியல்ஸ், எட்டீ (1998) (ஆங்கிலம்)முன்னம் அங்கு
- ↑ (ஆங்கிலம்) பி.பி.சி ரெயித் சொற்பொழிவில் ஆங் சான் சூச்சி, 2011-06-28