ராபன் தீவு
ராபன் தீவு (Robben Island) தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே உள்ள ஓர் தீவு. இத்தீவு நீள்வட்ட வடிவில் வடக்குத் தெற்காக 3.3 கிமீ நீளமும் 1.9 கிமீ அகலமும் கொண்டு 5.07 கிமீ² பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது கடல்மட்டத்திலிருந்து அதிக ஏற்றமிறக்கமின்றி தட்டையாக உள்ளது. நெல்சன் மண்டேலா தாம் சிறையில் கழித்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முந்தைய தென்னாபிரிக்க குடியரசுத் தலைவராகப் பொறுப்பாற்றிய கலேமா மொட்லாந்தேயும் இங்கு பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.[2] தற்போதைய குடியரசுத்தலைவர் யாக்கோபு சூமாவும் இங்கு சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
ராபன் தீவு | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
ராபன் தீவிலுள்ள சிறைச்சாலைக் கட்டிடம். டேபிள் மலையைப் பின்னணியில் காணலாம் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii, vi |
உசாத்துணை | 916 |
UNESCO region | ஆப்பிரிக்கா |
ஆள்கூற்று | 33°48′24″S 18°21′58″E / 33.806734°S 18.366222°E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1999 (23வது தொடர்) |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Avian Demography Unit: Robben Island". Department of Statistical Sciences,
University of Cape Town. Archived from the original on 2012-03-05.
{{cite web}}
: line feed character in|publisher=
at position 36 (help) - ↑ "New S. Africa president sworn in". BBC News. 25 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-11-22.