இபின் சினா இடைக்கால மருத்துவ மற்றும் அறிவியல் அகாதமி
இபின் சினா இடைக்கால மருத்துவ மற்றும் அறிவியல் அகாதமி (Ibn Sina Academy of Medieval Medicine and Sciences உருது: ابن سینا اکاڈمی آف میڈیول میڈیسین اینڈ سائنسیز ) என்பது இந்திய அறக்கட்டளை சட்டம், 1882 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை ஆகும். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான முகமது ஹமீத் அன்சாரி, முறையாக இதனை 21 ஏப்ரல் 2001 ஆம் நாளன்று திறந்து வைத்தார். இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைச் சேர்ந்த ஆயுஷ் 2004 ஆம் ஆண்டில் இந்த அகாதமிக்கு அங்கீகாரம் வழங்கியது. தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் அகாதமியை 'சிறந்த மையம்' என்ற நிலைக்கு உயர்த்தியது. மருத்துவ வரலாறு மற்றும் விஞ்ஞான வரலாறு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமாக உள்ளோர் அகாதமியின் உறுப்பினர் ஆக இணையலாம். ஒரு தொண்டு நிறுவனமாக இருப்பதால், அகாதமிக்கு நன்கொடைகள் வருமான வரிச் சட்டம் 1961 இன் 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உருவாக்கம் | 2000 |
---|---|
நிறுவனர் | ஹக்கீம் சயத் ஜில்லூர் ரஹ்மான் |
வகை | லாப நோக்கமற்ற நிறுவனம் |
நோக்கம் | மருத்துவ வரலாற்று ஆய்வு |
தலைமையகம் | திஜாரா இல்லம், அலிகார், இந்தியா |
சேவைப் பகுதி | இந்தியா மற்றும் வெளிநாடு |
வலைத்தளம் | www |
இதன் நிறுவனத் தலைவர் ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான் ஆவார்.
இபின் சினா இடைக்கால மருத்துவ மற்றும் அறிவியல் அகாதமி உலகின் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் தொடர்பான கையொப்பமிட்ட நிறுவனங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவதாகும்.[1][2][3][4]
வரலாறு
தொகுஇபின் சினா இடைக்கால மருத்துவ மற்றும் அறிவியல் அகாதமி என்பது மஜ்லிஸ் இபின் சினா என்பதன் நீட்டித்த வடிவம் ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் திப்பி அகாதமியின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. மஜ்லிஸ் இபின் சினா ஒரு வகையான மாதாந்திர விவாதக் குழுவாக செயல்பட்டு வந்தது. உதாரணமாக, டைபாய்டு பற்றி விவாதிக்க அந்த மஜ்லிஸின் கூட்டம் முதல் முதலாக நடைபெற்றது.[5]
திப்பி அகாதமி 1963 ஆம் ஆண்டில் போபாலில் உருவாக்கப்பட்டது . மாடர்ன் டைம்ஸ் மற்றும் யுனானி மெடிசின் நூலின் ஆசிரியரான ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான் அந்நூலின் முதல் தொகுப்பில் 4ஆம் பக்கத்தில் திப்பி அகாதமி நிறுவுவதைப் பற்றியும், அதற்கான நோக்கத்தைப் பற்றியும் எடுத்துக்கூறியுள்ளார் : " யுனானி மருத்துவத்தின் தத்துவார்த்த கொள்கைகளையும் நடைமுறைக் கருத்துக்களையும் விளம்பரப்படுத்தவும், யுனானி மருத்துவத்தின் நிலையான படைப்புகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும், ஆய்வு மாத இதழையும் வெளியிடுவதே நோக்கம்”.
1965 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை, தில்லியில் இருந்து அல்-ஹிக்மத் ( உருது மொழியில் ) என்ற தலைப்பில் ஒரு மாத இதழ் சிப்பி ஜில்லூர் ரஹ்மான் நாத்வியின் ஆசிரியரின் கீழ் திப்பி அகாடமியின் ஆதரவின்கீழ் வெளியிடப்பட்டது.
1970 ஆம் ஆண்டில், ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான் திப்பி அகாதமியின் பெயரை, தன் ஆசிரியரும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அஜ்மல் கான் திபியா கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், முதல்வருமான ஷிஃபால் முல்க் ஹக்கீம் அப்துல் லத்தீப் (29 ஏப்ரல் 1900 - 14 நவம்பர் 1970) என்பவர் நினைவாக ஷிஃபால் முல்க் நினைவுக் குழு என்று பெயர் மாற்றம் செய்தார். இந்த நினைவுக்குழுவின் நோக்கம், 1963 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திப்பி அகாதமியின் நோக்கத்தைப் போன்றே இருந்தது. ஆனால் வெளியீடுகள் விரிவாக்கம் தொடர்பாக மட்டும் அதில் காணப்படவில்லை.
இந்த அனைத்து நிறுவனங்களுமே - திப்பி அகாதமி (1963), மஜ்லிஸ் இபின் சினா (1965) மற்றும் ஷிஃபால் முல்க் நினைவுக் குழு (1970) - ஒன்றிணைந்து ஒரு அறங்காவலர் அமைப்பின் கீழ் செயல்பாட்டுக்கு வந்தது, அதாவது 2000 ஆம் ஆண்டில் இபின் சினா இடைக்கால மருத்துவ மற்றும் அறிவியல் அகாதமி என்ற பெயரில் முறையாக 21 ஏப்ரல் 2001 ஆம் அன்று துவங்கிவைக்கப்பட்டது.
வசதிகள்
தொகுஅகாதமியில் ஹக்கீம் ஜில்லூர் ரஹ்மான் நூலகம், கரம் உசேன் மருத்துவம் மற்றும் அறிவியல் வரலாற்று அருங்காட்சியகம், கலை மற்றும் பண்பாடு பற்றிய ஃபஸ்லூர் ரஹ்மான் அருங்காட்சியகம், ஷிஃபால் முல்க் நினைவு குழுவின் கீழ் வெளியீட்டு பிரிவு, எய்ட்ஸ் பிரிவு, இந்திய மருத்துவ முறைகளின் பாதுகாப்பு மற்றும் பகுத்தறிவு பயன்பாட்டு மையம், காலிப் ஆய்வு மையம் உள்ளிட்ட பல பிரிவுகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
குறிப்புகள்
தொகு- ↑ "Women's Health". International.
- ↑ "Essential Medicines". International. Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
- ↑ "CPTECH". International.
- ↑ "Climate Health". Health Prescriptions. Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
- ↑ Al-Hikmat, Issue of July 1965, Ed. Syed Zillur Rahman Nadvi, Tibbi Academy, Delhi,
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இபின் சினா இடைக்கால மருத்துவ மற்றும் அறிவியல் அகாதமி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.