இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)

சிம்புதேவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(இம்சை அரசன் 23ஆம் புலிகேசி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இம்சை அரசன் 23ம் புலிகேசி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக முதன் முதலாக நடித்த இத்திரைப்படத்தினை சிம்புதேவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நாசர், ஸ்ரீமன், இளவரசு, மோனிக்கா, மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி
இயக்கம்சிம்புதேவன்
தயாரிப்புஎஸ்.பிக்ஸர்ஸ் இயக்குனர் சங்கர்
கதைசிம்புதேவன்
இசைசபேஷ் முரளி
நடிப்புவடிவேலு
தேஜாஸ்ரீ
நாசர்
மனோரமா
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுஆர்தர் வில்சன்
விநியோகம்ஆஸ்கர் பிலிம்ஸ்
வெளியீடு2006
மொழிதமிழ்

கதைப்பின்னணி தொகு

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வியாபார நோக்கில் இந்தியாவிற்கு வந்த பிரித்தானியர்கள் பிறகு முழு இந்தியாவையும் அடிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தனர். இதன் போது கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை போன்றோர் பிரித்தானியருக்கெதிராக போரிட்டு வந்தனர். சிலர் சாவையும் எய்தினர். எனினும் சில பாளையக்காரர்கள் என்றழைக்கப் பட்ட குறுநில மன்னர்கள் பிரித்தானியருக்கு உதவி வந்தனர். அவ்வாறு பிரித்தானியருக்குச் சார்பாகச் செயற்படும் ஒரு குறு நில மன்னனை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது.

பாத்திரங்கள் தொகு

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

1771ஆம் ஆண்டில் சோழபுரத்தில் இத்திரைக்கதை தொடங்குகிறது. சோழபுரத்தின் மொக்கையப்பர் மன்னருக்கும் (நாகேஷ்), அரசிக்கும் (மனோரமா) 22 குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. அதற்கு பின்னர் 23 வது பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் அரசியின் சகோதரனான சங்கிலி மாயன் (நாசர்) குழந்தைகளின் சோதிடத்தைக் கணித்து சொற்புத்தியுடையதாகக் கணிக்கப்பட்ட முதலாவது குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டு சுயபுத்தியுடையதாகக் கணிக்கப்பட்ட இரண்டாவது குழந்தையை, அதன் பெற்றோருக்குத் தெரியாமல் நாட்டின் எல்லையில் உள்ள வைகை ஆற்றில் விட்டுவிட கட்டளையிடுகிறார்.

ஆற்றில் விடப்பட்ட குழந்தையை பிள்ளைகள் இல்லாத மருத்துவரின் மனைவி கண்டெடுத்து உக்கிரபுத்திரன் எனப் பெயரிடப்பட்டு வளர்கின்றார். மற்றொரு குழந்தை அரண்மனையில் 22 குழந்தைகளுக்குப் பின்னர் 23 ஆவதாக உயிருடன் பிறந்ததாலும் ஹைதர் அலியைச் சந்திக்கச் சென்றபோது புலிகேசிநாதனை வேண்டித் தவமிருந்து பெற்றதால் 23ஆம் புலிகேசி எனப் பெயர் சூட்டப்படுகிறது. தந்தையின் இறப்பிற்குப் பிறகு புலிகேசி அரசனாகிறார். தனது மாமன் பேச்சுக்கிணங்க பிரித்தானியரிடம் கூட்டு வைத்துக்கொள்கிறார். உக்கிரபுத்தன் வட இந்தியா சென்று கல்வி கற்று பின்னர் பிரித்தானியருக்கும் அவர்களுக்கு துணைச்செய்யும் அரசருக்கும் எதிராக தேசப்பற்று படையொன்றை அமைக்கிறார்.

தளபதி அகண்டமுத்து வெள்ளையருக்கு மன்னர் இவ்வாறு உதவி செய்வதனை விரும்பாமல் வீரத்தமிழர்கள் குட்டக் குட்டக் குனியக் கூடாது என்ற பொருள்படப் பேசுகிறார். மன்னரோ எவற்றையும் பொருட்படுத்தாது எடுத்தெறிந்து பேசுகிறார்.

நிக்ஸன் துரையைத் தாக்கியவன் அசல் புலிகேசி போன்றே இருப்பதாகவும் குறிபார்த்துக் தாக்கியதாகவும் மன்னனுக்குச் செய்தி கிடைக்கிறது. மன்னனின் பக்கத்தில் இருப்பவரோ குறிபார்ப்பதற்கும் மன்னருக்கும் சம்பந்தமில்லை என்று உண்மையை உளறுகிறார். இந்நிலையில் ஜாதிப்பிரச்சினை அரண்மைக்கு வருகின்றது. இரு குழுக்கள் ஓர் குழு நாகபதினி ஜாதியையும் இன்னோர் குழு நாகப்பதினி ஜாதியையும் சேர்ந்தாகவும் தாங்களே மூத்தகுடிமக்கள் என்று இரு குழுக்களும் மோதுகின்றன. நிறுத்துமாறு கோரிய மன்னர் புதிதாக ஓர் மைதானம் ஒன்றை இரவோடிரவாக ஆரம்பித்து முடிக்குமாறு ஆணையிடுகிறார். அங்கேதான் ஜாதிச் சண்டைகள் நடைபெறும் என்று அறிவிப்புகள் விடுகிறார்.

மைதானத்தைத் திறந்து ஆரம்பிக்கையில் ரிபனை இக்காலக் கத்திரிக்கோல் கொண்டு திறப்பது சற்றே முரணாகவே இருந்தாலும் கதை தொடர்ச்சியாக சுவாரசியமாகவே செல்கின்றது. உக்கரபுத்திரன் வழிப்பறி நடைபெறுவதைத் தூரத்தில் இருந்து அவதானிக்கின்றார். இவ்வழிப்பறியில் தன்னைப் போன்றே இருந்த மன்னரே ஆதரவு வழங்குவதைப் பார்க்கிறார். உக்கிரபுத்தரன் வீட்டில் இதைச் சொல்ல அதன்பிறகு அவரின் தந்தை உக்கிரபுத்திரனின் உண்மைக் கதையைக் கூறுகிறார்.

படையெடுத்து வரும் மன்னரிடம் வெள்ளைக் கொடிகாட்டி 23ஆம் புலிகேசி தப்பிக்கின்றார். பின்னர் இந்த ஊரில் புரட்சிப் படை ஒன்று உருவாகியுள்ளதாகக் கேள்விப் படுகிறார். சிறுவன் கொணர்ந்த போதைப் பொருள் கலந்த இளநீரை மன்னர் கேட்காமல் அருந்தி விடுகிறார். தளபதியோ மன்னரைத் தீர்த்துக் கட்டும் எண்ணத்துடன் போதைப் பொருள் கலந்த இளநீரை குதிரைகளுக்கு வழங்கியிருந்தார். குதிரைகள் கட்டுக்கடங்காமல் ஓடி உக்கிரபுத்திரன் வசிக்கும் இடத்தில் 23ஆம் புலி கேசி வீழ்கிறார். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய உக்கிரபுத்திரன் ஆள் மாறாட்டம் செய்கிறார். வழியில் தளபதி அனுப்பிய ஆட்களைப் பந்தாடிவிட்டு யார் அனுப்பியது என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

மன்னர் அரண்மனைக்கு வந்ததும் கட்டியம் கூறுபவனை எளிமையாக மன்னர் வருகிறார் என்று மட்டும் கூறினால் போதும் என்றார். அதன் பின்னர் அக்காமாலா கப்சி பானங்களை விற்கும் வெள்ளையர்கள் இலாப பங்கினைக் கொண்டுவந்தபோது அதன் தயாரிப்பு விலை 2 சதம் என்றும் விற்பனை விலை 10 சதம் என்றும் கூறுகிறார்.

தளபதி சந்தர்ப்பத்தை தவறவிட்டதாக விட்டதாக வருந்திபோது உக்கிரபுத்திரன் வருகிறார். தளபதி மன்னனின் போரியற் கலைகளைக் கண்டு வியக்கிறார் அப்போது தான் புலிகேசியல்ல என்றும் தான் உக்கிரபுத்திரன் என்றும் இயம்புகிறார். தனது அண்ணாவை பாதாளச் சிறையில் அடைத்துவிட்டதாவும் இந்த இரகசியத்தை வெளியில் விடவேண்டாம் என்று மன்னர் வேண்டுகிறார்.

நிக்ஸன் துரை அரண்மனைக்கு வரிப்பணம் வாங்க வந்தபோது அவரை அடித்துக் கலைத்து விட்டுகிறார். சோதிடரோ அரண்மனையில் உண்மையை உளற புலிகேசியும் உண்மையை ஒட்டுக் கேட்கின்றார். உண்மையை உணர்ந்து இருவரும் இணைகின்றனர். சோதிடரும் ஆருடம் கணித்தபோது இருவரும் பின்னாளில் இணைவர் என்பது தனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்கிறார்

பின்னர் இருவரும் இணைந்து நாட்டை மீளமைக்கின்றனர். திருமணப்பந்தத்தில் 23ஆம் புலிகேசி மற்றும் உக்கிரபுத்திரன் ஆகியோர் 10 புதிய கட்டளைகளுடன் முடிவடைகின்றது.

வெளி இணைப்புகள் தொகு

விமர்சனங்கள் தொகு