இம்பால் பள்ளத்தாக்கு

இம்பால் பள்ளத்தாக்கு அல்லது மணிப்பூர் சமவெளி (Imphal Valley), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் நடுவில், வட்ட வடிவில் மலைகளால் சூழப்பட்டுள்ளது.[1] இப்பள்ளத்தாக்கின் தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய நன்னீர் லோக்தக் ஏரி உள்ளது.[2][3] இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில், மணிப்பூர் மாநிலத் தலைநகரம் இம்பால் அமைந்துள்ளது.

வடகிழக்கிந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் பள்ளத்தாக்கின் அமைவிடம்

இம்பால் பள்ளத்தாக்கில் இம்பால் நதி, பராக் ஆறு, ஈரில் ஆறு, நம்புல் நதி, தௌபால் ஆறு, குகா ஆறு மற்றும் சேக்மாய் ஆறுகள் பாய்கிறது. இங்கு லோக்டாக் ஏரி அமைந்துள்ளது. இதன் வடக்கில் நாகா மலைகளும், கிழக்கில் கிழக்கு மணிப்பூர் மலைகளும் மற்றும் மியான்மர் நாட்டு எல்லையும், தெற்கில் தெற்கு குக்கி மலைகளும் மற்றும் மேற்கில் மேற்கு மணிப்பூர் மலைகளும் அமைந்துள்ளது.

இம்பால் பள்ளத்தாக்கு வடக்கிலிருந்து தெற்காக 58 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக 32.19 கிலோ மீட்டர் அகலமும், 1,864.44 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது. பள்ளதாக்கில் பாயும் அனைத்து ஆறுகளும் வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 790 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

இம்பால் பள்ளத்தாக்கில் மேற்கு இம்பால் மாவட்டம் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டம் அமைந்துள்ளது. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இம்பால் சமவெளியின் மக்கள் தொகை 28,55,794 ஆகும். இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பாலும் மெய்தி மக்களும், சிறிய அளவில் பழங்குடி குக்கி மக்களும் வாழ்கின்றனர்.[4]இதன் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இந்துக்கள் மற்றும் சிறுபான்மையாக இசுலாமியர்கள் மற்றும் பழங்குடியின குக்கி கிறித்தவர்கள் வாழ்கின்றனர்.

தட்ப வெப்பம்

தொகு

இம்பால் பள்ளத்தாக்கின் உயர்ந்தபட்ச கோடைக்கால வெப்பம் 32–34 °C ஆகவும்; குளிர்கால வெப்ப அதிகபட்ச வெப்பம் 1–2 °C ஆகவுள் உள்ளது.[5]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. GEOGRAPHICAL PERSONALITY OF THE STUDY AREA: MANIPUR
  2. (Singh, 1982)
  3. "Manipur :: Meitei Mayek News :: 10th nov22 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
  4. "Manipur (State, India) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2020-09-15.
  5. "Manipur | History, Government, Map, Capital, & Facts". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2020-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பால்_பள்ளத்தாக்கு&oldid=3762264" இலிருந்து மீள்விக்கப்பட்டது