ஈரில் ஆறு
ஈரில் ஆறு (Iril River) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகள் வழியாகச் செல்லும் ஒரு ஆறு. ஐரில் என்ற பெயர் ஈ மற்றும் ரெய் / ரீ ஆகிய இரண்டு சொற்களிலிருந்து உருவானது. மணிப்புரியம் வார்த்தையான ஈ என்பது இரத்தத்தினையும் ரெய்/ரீ என்பது சோப்வோமா மொழியில் ஆற்றினைக் குறிப்பதாகவும்; ”இரத்த ஆறு" என்று பொருள் தருவதாக அமைந்துள்ளது.
ஆற்றுவழி
தொகுஇது லகமாய் கிராமத்தில் உருவாகி நகாம்ஜு கிராமம் வழியாகப் பாய்கிறது. (நகாம்ஜூ மக்கள் இதை வைரி என்று அழைக்கின்றனர்) இந்த நதி பின்னர் சாய்குல், சாகோல்மாங் பகுதி வழியாகச் சென்று , இம்பால் நதியுடன் இணைவதற்கு முன்பு லாம்லை, டாப், நஹரூப், பாங்காங் மற்றும் இரில்பங் வழியாகவும் பாய்கிறது. இது ஆறு மிகவும் தெளிவானது. போரோம்பட்டில் அமைந்துள்ள ஒரு ஆலைக்கு நீர் விநியோகம் செய்கிறது. இது மணிப்பூர் ஆறுகளில் தலையான ஒன்றாகும்.[1] ஈரில் நதியில் அதிக எண்ணிக்கையிலான அருகிய அகணிய மீன்கள் உள்ளன. இவை இப்பகுதியில் நாகடன், மெய்டி சாரெங் எனப்படுகிறது. இந்த மீன்களை உள்ளூர் மீனவர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிடிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sutapa Sengupta (2006). Rivers and Riverine Landscape in North East India. Concept Publishing Company. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-276-5.