இரகுநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

இரகுநாதபுரம் (ஆங்கிலம்: Mathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

இரகுநாதபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி தலைவர்
மக்கள் தொகை 6,410 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,410 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 4,523 ஆண்கள், 5,5025 பெண்கள் ஆவார்கள். இரகுநாதபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 85.55% ஆகும். இரகுநாதபுரம் மக்கள் தொகையில் 12.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.[3]

நிலப்பரப்பு தொகு

இது இராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிகமான குளங்களைக் கொண்ட ஊராட்சி ஆகும்.

வழிபாட்டுத் தலங்கள் தொகு

இங்கு பத்தாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட புத்தர் கோவில் உள்ளது. ஐந்நூறு வருடங்கள் பழமையான அம்மன்கோவிலும் கண்ணன் கோவிலும் உள்ளன.

தொழில் தொகு

இங்குள்ள மக்களின் தொழில்வளர்ச்சி தென்னையைச் சார்ந்தது. இது சுற்றியுள்ள ஊர்களின் வணிக மையமாக உள்ளது.

போக்குவரத்து தொகு

இரகுநாதபுரத்தில் இருந்து சிற்றுந்தின் மூலம் பக்கத்து ஊர்களுக்கு செல்ல வசதி உள்ளது. இங்கிருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்துகள் செல்கின்றன.

கல்வி தொகு

இங்கு அரசு மேல்நிலை பள்ளியும், இரண்டு தொடக்கபள்ளிகளும், ஆங்கில வழியில் உயர் நிலை பள்ளியும் உள்ளன.

அமைப்புகள் தொகு

இங்கு இரண்டு வங்கிகள் உள்ளன. ஆரம்ப சுகதார நிலையம், கால்நடை மருத்துவமனை, தொலைத் தொடர்பு மையம், மின் பகிர்வு நிலையம் ஆகியனவும் உள்ளன.

வரலாறு தொகு

இரகுநாதபுரம் சேதுபதி மன்னர் காலத்தில் முக்கிய நகரமாக திகழ்ந்துள்ளது. பத்தாம் நூற்றாண்டில் விஜய இரகுநாத சொக்கலிங்கபுரம் என்று அழைக்க‌ப்ப‌ட்டது. காலப்போக்கில் இரகுநாதபுரம் என்று மருவியது.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://census2001.tn.nic.in/pca2001.aspxRural[தொடர்பிழந்த இணைப்பு] - Ramanathapuram District;Ramanathapuram Taluk;Raghunathapuram Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாதபுரம்&oldid=3234255" இலிருந்து மீள்விக்கப்பட்டது