இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஓர் இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்து வடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும். இது கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தது. இது தங்களது பாரம்பரிய இனிப்பு என மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா மாநிலங்கள் உரிமை கொண்டாடுகின்றன.

இரசகுல்லா
இடது பக்கமிருப்பது ஒடிசா ரசகுல்லா, வலது பக்கமிருப்பது மேற்கு வங்காளத்தின் ரசகுல்லா
மாற்றுப் பெயர்கள்ரசகுல்லா, ரொசொகோல்லா, ரொஷொகோல்லா, ரசகோலா
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்புவகை
தொடங்கிய இடம்இந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைசுடச்சுட, குளிர்ந்த, அல்லது அறை வெப்ப நிலையில்
முக்கிய சேர்பொருட்கள்பாலாடைக்கட்டி, சர்க்கரை
வேறுபாடுகள்பெங்காளி ரசகுல்லா, ஒரிசா ரசகுல்லா
இரசகுல்லாவும், குலாப் ஜமுனும்

பெயர்க்கரணம்

தொகு

இது வங்க மொழியில் ரொசொகோல்லா (Rosogolla) அல்லது ரொஷொகோல்லா (Roshogolla) எனவும், ஒரிய மொழியில் ரசகோலா (Rasagola) எனவும் அழைக்கப்படுகிறது. இந்தி மொழி வட்டாரத்தில் ரஸ்குல்லா (Rasgulla) என உச்சரிக்கப்படுகிறது. ரஸ் என்றால் இரசம் அல்லது சாறு, குல்லா என்றால் பந்து எனப்பொருள்படும்.[1] இது ரசகுல்லா (Rasagulla),[2] ரோசோகுல்லா (Rossogolla),[3] ரோஷோகுல்லா (Roshogolla),[4] ரசகோலா (Rasagola),[5] ரசககோல்லா (Rasagolla),[6] ரஸ்பஹரி (Rasbhari) அல்லது ரஸ்பரி (Rasbari) (நேபாளி) [7] எனப்பலவாறு உச்சரிக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

ஒரிசாவின் பூரி கோயிலின் பாரம்பரிய உரிமை கோரல்

தொகு

ஒரிசாவின் பூரி ஜெகன்னாதர் கோயிலின் தேர் திருவிழாவின் முடிவில் இறைவனுக்கு நைவேத்தியமாக இரசகுல்லா படைக்கப்படுகின்றது. இப்பழக்கம் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளதாக புரி வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[8] இதனால் ஒரிசா அரசு இரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒரிசாவில் உள்ள பஹாலா ஊர் ரசகுல்லாவுக்கு புகழ் பெற்றது. இந்த ஊரில் மட்டும் இரகுல்லாவுக்கு நிறைய இனிப்பகங்கள் உள்ளன. இந்த ரசகுல்லாக்கள் பொன்நிறத்தில் இருக்கும்.

வங்காளிகளின் உரிமைகோரல்

தொகு

மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவில் இருந்த பாக்பசாரில் நோபின் சந்திரதாஸ் என்பவர் 1866இல் முதன் முதலில் ரசகுல்லா தயாரித்து விற்பனை செய்ததாக வரலாற்றுச்சான்று காட்டி ஒரிசாவின் முயற்சிக்கு வங்காளிகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rasgulla@Oxford Dictionaries" (in Hindī). India: Oxford University Press. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. Sahu, Deepika (2 July 2012). "Discover Odisha's 'sweet' magic". The Times of India.
  3. "History of rossogolla now just a click away". The Times of India. 15 March 2013. http://timesofindia.indiatimes.com/city/kolkata/History-of-rossogolla-now-just-a-click-away/articleshow/18980157.cms. 
  4. "Of luchi, rolls & roshogolla in Durga puja". Daily Bhaskar. 29 September 2011. http://daily.bhaskar.com/news/BAN-of-luchi-rolls-roshogolla-in-durga-puja-2466492.html. 
  5. "Rasagola originated in Odisha- Did you know?". Zee News. 30 July 2015. http://zeenews.india.com/entertainment/and-more/rasagola-originated-in-odisha-did-you-know_1638800.html. 
  6. Sonali Pattnaik (18 July 2013). "How to make…Rasagolla". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/Food/how-to-makerasagolla/article4927694.ece. 
  7. Alan Davidson (21 September 2006). The Oxford Companion to Food. OUP Oxford. p. 1880. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-101825-1.
  8. Mohapatra, Debabrata (29 July 2007). "Researchers Claim Rasgullas Were Born In Puri". The Times of India. 
  9. Sankar Ray (31 July 2011). "Where is the creativity that gave us the Rosogolla?". DNA. http://www.dnaindia.com/lifestyle/report-where-is-the-creativity-that-gave-us-the-rosogolla-1571196. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசகுல்லா&oldid=3512311" இலிருந்து மீள்விக்கப்பட்டது