இரசமாயி தத்
இரசமாயி தத் அல்லது உரசமோய் தத் (1779 - 14 மே 1854) வங்காள மறுமலர்ச்சியின் போதான பிரித்தானிய இந்தியாவின் குறிப்பிடத்தக்க வங்காளக் கல்வியாளர் ஆவார். கொல்கத்தாவில் உள்ள இந்துப் பள்ளியின் இணை நிறுவனர் ஆவார்.[1] வங்காளக் கவிஞர் தோரு தத் இவருடைய பேத்தி ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதத் கொல்கத்தாவின் இரம்பாகன் நகரில் பிறந்தார். இவரது தந்தை, நில்மணி தத், தத் குடும்பத்தை நிறுவியவர். இரசமாய் தத் எழுத்தராக ஆனார், மேலும் கல்கத்தா [2] சிறிய தொண்டுப்பணி நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ஆனார்.[3] ஆசியச் சமூகத்தின் முதல் இந்திய உறுப்பினரும் ஆவார்.[2]
சமூகப் பணிகள்
தொகுதத் ஆங்கில மொழியில் சிறப்புத் திறன் கொண்ட மொழியியலாளர் ஆவார். கொல்கத்தாவில் இந்துப் பள்ளியை நிறுவியவர்களில் ஒருவரான இவர், இராசாராம் மோகன் ராய், இராதாகாந்தா தேவ் டேவிட் ஹரே ஆகியோருடன் இணைந்து இந்து கல்லூரியை மாநிலப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.[4] இவர் கல்விக் குழுமத்தின் செயலாளராகவும், சமஸ்கிருத கல்லூரியின் முதல் முதல்வராகவும் ஆனார். ஈஸ்வர் சந்திர வித்யாசாகருடன் ஏற்பட்ட சில சிக்கல்களுக்குப் பிறகு சமசுகிருத கல்லூரியிலன் பதவியை பணித் துறப்பு செய்தார். கொல்கத்தா பள்ளிப் புத்தகச் சங்கத்தின் உறுப்பினராக ஏழை மாணவர்களுக்கு மகத்தான பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பரவலாக தத் பிரபலமானார்.குடிமைச் சமூக இயக்கம், அரசின் பத்திரிகை எதிர்ப்பு நடவடிக்கைகள் [5] மற்றும் இந்தியாவில் நீதித்துறை பணிகளில் நடுவர் முறையை ஆதரித்தார்.[6]
சான்றுகள்
தொகு- ↑ Subodh C. Sengupta & Anjali Basu, Vol - I (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Sahitya Sansad. p. 461. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0.
- ↑ 2.0 2.1 Meenakshi Mukherjee, An Indian for All Seasons: The Many Lives of R.C. Dutt, 2009, p. 57.
- ↑ Incubator of Inglish, The Telegraph, May 23, 2010.
- ↑ "The university that shaped the modern India: 200 years of Presidency". January 20, 2017. பார்க்கப்பட்ட நாள் November 15, 2017.
- ↑ "ঔপনিবেশিক আমলে সংবাদপত্রের স্বাধীনতা". பார்க்கப்பட்ட நாள் November 15, 2017.
- ↑
{{cite book}}
: Empty citation (help)